துருக்கியின் மாகாணங்கள்
துருக்கியின் முதல் நிலை நிர்வாகப் பிரிவு From Wikipedia, the free encyclopedia
Remove ads
துருக்கி நாடானது 81 மாகாணங்களாக பிரிக்கப்பட்டுள்ளது ( துருக்கியம்: il ). ஒவ்வொரு மாகாணமும் பல்வேறு மாவட்டங்களாக ( ilçe ) பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு மாகாண அரசாங்கமும் நடுவண் மாவட்டத்தில் (தலைநகர் மாவட்டம்) அமைந்துள்ளது ( merkez ilçe ). நடுவண் மாவட்டத்தின் பெயரிலேயே பொதுவாக மாகாணத்தின் பெயர் உள்ளது (எ.கா. வான் மாகாணத்தின் நடுவண் மாவட்டமானது வான் நகரம் ஆகும்). இந்த பெயரிடும் முறையில் மூன்று விதிவிலக்குகள் [1] மட்டுமே உள்ளன:
- சாகர்யா மாகாணத்தின் நடுவண் மாவட்டம் அடபசாரா
- மாகாணத்தின் நடுவண் மாவட்டம் அந்தகியா
- மாகாணத்தின் நடுவண் மாவட்டம் எமிட்
ஒவ்வொரு மாகாணமும் துருக்கியின் உள்துறை அமைச்சகத்தால் நியமிக்கப்பட்ட ஆளுநரால் நிர்வகிக்கப்படுகிறது.
Remove ads
மாகாணங்களின் பட்டியல்
துருக்கியின் 81 மாகாணங்களின் பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றின் வாகணப் பதிவு எண் பலகை குறியீடுகளின்படி வரிசைப்படுத்தப்பட்டுள்ளன. வரிசையின் துவக்கத்தில் உள்ள குறியீடுகளின் வரிசை மாகாண பெயர்களின் அகர வரிசையுடன் பொருந்துகிறது. சோங்குல்டக்கிற்குப் பிறகு (குறியீடு 67), வரிசைப்படுத்தல் அகரவரிசையில் இல்லாமல் மாகாணங்கள் உருவாக்கபட்ட கால வரிசையில் உள்ளன. ஏனெனில் இந்த மாகாணங்கள் மிக அண்மைக் காலத்தில் உருவாக்கப்பட்டவை. இதனால் அவற்றின் வாகண பதிவு எண் பலகை எண்கள் முந்தைய குறியீடுகளின் வரிசை எண்கள் ஒதுக்கப்பட்ட பின்னரே அதன் தொடர்ச்சியாக ஒதுக்கப்பட்டன.
Remove ads
குறியீடுகள்
மாகாணத்தின் ஐஎஸ்ஓ குறியீடு பின்னொட்டு எண், துருக்கியின் வாகன பதிவு எண் பலகையின் முதல் இரண்டு எண்கள் மற்றும் துருக்கியில் உள்ள அஞ்சல் குறியீடுகளின் முதல் எண்கள் ஒரே மாதிரியானவை. புள்ளிவிவரங்களுக்கான பிராந்திய அலகுகளின் பெயரிடல் (NUTS) குறியீடுகள் வேறுபட்டவை.
Remove ads
முன்னாள் மாகாணங்கள்

- அலலட்கா, இப்போது இஸ்தான்புல் மாகாணத்தின் ஒரு பகுதி
- கெலிபோலு, இப்போது அனாக்கலே மாகாணத்தின் ஒரு பகுதி
- ஐசெல் ( சிலிஃப்கே ), இப்போது மெர்சின் மாகாணத்தின் ஒரு பகுதியாகும்
- கோசன், இப்போது அதானா மாகாணத்தின் ஒரு பகுதி
- பெபினகரிஹசர், இப்போது கீரேசன் மாகாணத்தின் ஒரு பகுதி
- எலாஸ் மடேனி இப்போது எலாஸ் மாகாணத்தின் ஒரு பகுதி
- ஜெனே, இப்போது பிங்கால் மாகாணத்தின் ஒரு பகுதி
- டோசுபயாசாட் இப்போது அரே மாகாணத்தின் ஒரு பகுதி
- சிவெரெக், இப்போது சான்லூர்பா மாகாணத்தின் ஒரு பகுதி
குறிப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads