அசுமத்துல்லா ஒமர்சாய்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

அசுமத்துல்லா ஒமர்சாய் (Azmatullah Omarzai, பஷ்தூ மொழி: عظمت الله عمرزی; பிறப்பு: 24 மார்ச் 2000) ஓர் ஆப்கானியத் துடுப்பாட்ட வீரர் ஆவார். இவர் கிழக்கு ஆப்கானித்தானின் குனர் மாகாணத்தைச் சேர்ந்தவர். இவர் 2021 சனவரியில் ஆப்கானித்தான் துடுப்பாட்ட அணியில் பன்னாட்டுத் துடுப்பாட்டத்தில் சேர்க்கப்பட்டார்.[1]

விரைவான உண்மைகள் தனிப்பட்ட தகவல்கள், பிறப்பு ...
Remove ads

பன்னாட்டுத் துடுப்பாட்டம்

2017 திசம்பரில், 19-வயதிற்குட்பட்டோருக்கான 2018 உலகக்கிண்ணத் தொடரில் ஆப்கானித்தான் அணியில் சேர்க்கப்பட்டார்.[2] 2018 திசபரில், 23-வயதிற்குட்பட்டோருக்கான 2018 ஏசிசி வளர்ந்துவரும் அணிகளின் ஆசியக் கிண்ணத் தொடரில் விளையாடினார்.[3] 2019 நவம்பரில், வங்காளதேசத்தில் நடைபெற்ற 2019 ஏசிசி வளர்ந்துவரும் அணிகளின் ஆசியக் கிண்ணத்தில் ஆப்கானித்தான் அணியில் விளையாடினார்.[4] 2020 பெப்ரவரியில், ஆப்கானித்தானின் பன்னாட்டு இருபது20 அணியில் இணைந்து அயர்லாந்துக்கெரிதான தொடரில் விளையாடினார்.[5] 2021 சனவரியில், அயர்லாந்துக்கு எதிரான பன்னாட்டு ஒருநாள் தொடரில் விளையாடினார்.[6][7]

Remove ads

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads