குனர் மாகாணம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
குனர் மாகாணம், ஆப்கானிஸ்தானின் மாகாணங்களில் ஒன்று. இதன் தலைநகரம் அசதாபாத் ஆகும். இந்த மாகாணத்தில் 428,800 மக்கள் வாழ்கின்றனர்.[1] இவர்களில் பெரும்பாலானோர் பஷ்தூன் மக்கள் ஆவார்.[2]
Remove ads
புவியியல்

இந்த மாகாணம் ஆப்கானிஸ்தானின் வடகிழக்குப் பகுதியில் அமைந்துள்ளது. இதன் தெற்கில் நங்கர்கார் மாகாணம்.வடக்கில் நூரிஸ்தான் மாகாணம், மேற்கில் லக்மான் மாகாணம் ஆகியன அமைந்துள்ளன. கிழக்கில் பாக்கிஸ்தானுடன் எல்லையைக் கொண்டுள்ளது. இந்த மாகாணம் 4339 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்டது. இங்குள்ள பகுதிகளில் பத்தில் ஒன்பது பகுதிகள் மலைப்பாங்கானவை. எட்டில் ஒரு பாகம் மட்டுமே சமதள நிலம். இந்த மாகாணத்துக்கு உட்பட்ட நிலப்பரப்பில் இந்து குஷ் மலை அமைந்துள்ளது. குனர் ஆறு பாமிர் மலையில் தோற்றமெடுக்கிறது. இது சிந்து ஆற்றின் ஒரு பாகமாகும்.
Remove ads
வரலாறு
பாபர் தன்னுடைய பாபர் நாமா என்ற நூலில் குனர் நகரத்தைப் பற்றி எழுதியுள்ளார். இங்கு மிர் சையத் அலி ஹமதானி என்ற கவிஞரின் நினைவாக கோயில் இருந்ததாகக் குறிப்பிடுகிறார். இங்கு ஆரஞ்சு, கொத்தமல்லி, பூச்செயிகள் போன்றவை வளர்க்கப்பட்டதாகவும் குறிப்பிடுகிறார். சாகன் சராய் என்ற நிறுநகரம் இருந்ததாகவும், அதை தான் கைப்பற்றியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.[3]
1979ஆம் ஆண்டில், கேராலா என்ற ஊரில் ஆண்கள் அனைவரையும், ஆப்கானிஸ்தான் மக்கள் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்தவர்கள் கொன்றனர்.[4][5][6]
பின்னர், சோவியத் படைகள் ஊடுருவிய போது, பல ஆப்கானிய மக்கள் பாக்கிஸ்தானின் வடமேற்கு எல்லைப்புற மாகாணத்தில் தஞ்சம் புகுந்தனர்.[7]

2001 செப்டம்பர் 11ஆம் நாள் தாக்குதல்களுக்குப் பிறகு, ஆப்கானிஸ்தானுக்குள் அமெரிக்காவும், நேட்டோ உறுப்பினர்களும் ஊடுருவி, தாலிபன்களுக்கு எதிரான போரில் பங்கெடுத்தனர். இது பயங்கரவாதத்துக்கு எதிரான போரின் ஒரு பகுதியாக இருந்தது. ஹமித் கர்சாய்.தலைமையிலான ஆட்சிக்கு துணைபுரியும் செயலாகவும் அமைந்தது.

இந்த மாகாணம் மற்ற மாகாணங்களை விட சிறிது என்றபோதும், பாதுகாப்புக்காக அதிகளவிலான ஆப்கானிய காவல்படையினரும், அமெரிக்கப் படையினரும் குவிந்துள்ளனர்.[7][8]
பாக்கிஸ்தானின் உள்துறை அமைச்சராக இருந்த ரகுமான் மாலிக் என்பவர் 2009ஆம் ஆண்டின் போது, உசாமா பின் லாதின் பாக்கிஸ்தானில் இல்லை என்றும், ஆப்கனின் குனர் மாகாணத்தில் இருக்கக்கூடும் என்றும், அங்கிருந்து பாக்கிஸ்தானுக்கு எதிரான செயல்பாடுகள் இயக்கப்படுவதாகவும் தெரிவித்தார்.[9] இருந்தபோதும், பின் லேடன் பாக்கிஸ்தானில் உள்ள ஆப்டாபாத் என்ற இடத்தில் கொல்லப்பட்டான்.
Remove ads
அரசியல்
இந்த மாகாணத்தின் ஆளுநராக வஹிதுல்லா கலீசாய் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். அசாபாத் நகரமே குனர் மாகாணத்தின் தலைநகரம் ஆகும். அனைத்து சட்ட ஒழுங்கு விவகாரங்களும் ஆப்கன் தேசிய காவல்படையினரின் கட்டுப்பாட்டில் இருக்கும். பாக்கிஸ்தானின் வடமேற்கு எல்லைப்புற மாகாணத்தை ஒட்டிய எல்லையில் ஆப்கன் எல்லைக் காவல்படையினர் பாதுகாப்பில் ஈடுபடுவர். இந்த இரு படைகளையும் வழிநடத்த மாகாண அளவிலான காவல் தலைவர் நியமிக்கப்படுகிறார். இவர் உள்துறை அமைச்சகத்தின் மாகாண பிரதிநிதி ஆவார்.
மக்கள்

இங்கு 428,800 மக்கள் வசிப்பதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.[1] பஷ்தூன் மக்கள் பெரும்பான்மையினர் ஆவர். மொத்த மக்களில் இவர்கள் 95% எண்ணிக்கையில் உள்ளனர். 5% எண்ணிக்கையில் நூரிஸ்தானி மக்களும் வசிக்கின்றனர்.[2] இங்கு வாழும் மக்கள் பஷ்தூ மொழியில் பேசுகின்றனர். இவர்கள் சுன்னி இசுலாம் சமயத்தை பின்பற்றுகின்றனர். பெரும்பாலானோர் ஊரகப் பகுதிகளில் வசிக்கின்றனர்.[10]
கல்வி
2011ஆம் ஆண்டில் எடுத்த கணக்கெடுப்பில், 20% மக்களே கல்வியறிவு பெற்றிருப்பது தெரிய வந்தது.[11] மொத்த குழந்தைகளில் 43% பேர் பள்ளியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.[11]
மாவட்டங்கள்
இந்த மாகாணத்தில் கீழ்க்காணும் மாவட்டங்கள் உள்ளன.[12] அவை அசாதாபாத் மாவட்டம், பார் குனர் மாவட்டம், சப்பா தாரா மாவட்டம், டங்காம் மாவட்டம், தரா-ஈ-பேச் மாவட்டம், காசியாபாத் மாவட்டம், காஸ் குனர் மாவட்டம், மரவரா மாவட்டம், நரங் ஆவ் பதில் மாவட்டம், நரி மாவட்டம், நூர்கல் மாவட்டம், சாவ்கை மாவட்டம், ஷைகல் மாவட்டம், சீர்கனி மாவட்டம், வட்டாபூர் மாவட்டம் ஆகியன.
மேலும் பார்க்க
சான்றுகள்
இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads