அச்சமின்றி (திரைப்படம்)
2016 ஆண்டைய திரைப்படம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
அச்சமின்றி (achamindri) 2016 இல் வெளிவந்த தமிழ் அதிரடித் திரைப்படமாகும். "என்னமோ நடக்குது" புகழ் ராஜபாண்டி இத்திரைப்படத்தை இயக்கியிருந்தார். இத்திரைப்படத்தில் விஜய் வசந்த், சமுத்திரக்கனி, ஸ்ருதி டாங்கே, வித்யா பிரதீப், சரண்யா பொன்வண்ணன், ராதா ரவி ஆகியோர் முன்னணிக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜீ. ராதாகிருஷ்ணன் இத்திரைப்படத்திற்கான வசனங்களை எழுதியுள்ளார். பிரேம்ஜி அமரன் இத்திரைப்படத்திற்கான இசையை அமைத்துள்ளார் [1][2].இவ்வியக்குனரின் 2014 ல் வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற "என்னமோ நடக்குது" திரைப்படத்தில் நடித்த பலரே இத்திரைப்படத்திலும் நடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. வி. வினோத் குமார் இத்திரைப்படத்தை தயாரித்திருந்தார்.
Remove ads
கதைச்சுருக்கம்
இப்படத்தின் கதை 4 நபர்களிடைப்பட்டது. பிற்பொக்கட் சக்தி (விஜய் வசந்த்) நடுத்தர குடும்பப் பெண்ணான மலர்விழியை (ஸ்ருதி டாங்கே) விரும்புகிறான். ஒரு நேர்மையான காவல் அதிகாரியான சத்யாவின் (சமுத்திரகனி) உறவினரே ஸ்ருதி (வித்யா பிரதீப்). இவர்களுள் சத்யா, சக்தி, மலர்விழி ஆகிய மூவரும் ஒரு குழுக்களால் துரத்த படுகிறார்கள். சத்தியா அவனுடைய நண்பனும் காவல் அதிகாரியுமான சரவணனினாலும் (பரத் ரெட்டி) மேலும் சத்யா ஸ்ருதியின் மரணத்தில் உள்ள மர்மங்களையும் வெளிக்கொணர முயலுகிறான். ஒரு தாதாவிடம் காசுப்பையை திருடும் சக்தி, கல்வி அமைச்சரின் உதவியாளரிடம் இருந்து தப்பித்து வரும் மலர்விழி. படத்தின் இரண்டாம் பாதியில் இவர்கள் ஏன் துரத்தபடுகிறார்கள் என்பதற்கான முடிச்சுகள் அவிழ்க்கப்படுகின்றன. கல்விச்சமுகத்தில் நடைபெறும் சம்பவங்களை அடிப்படையில் கொண்டு கதை தயாரிக்கப்பட்டுள்ளது.
Remove ads
நடிகர்கள்
- விஜய் வசந்த் - சக்தி
- ஸ்ருதி டாங்கே - மலர்விழி
- சமுத்திரக்கனி - இன்ஸ்பெக்டர் சத்யா
- வித்யா பிரதீப்- ஸ்ருதி
- சரண்யா பொன்வண்ணன் - ராஜலட்சுமி
- ராதாரவி - கல்வி அமைச்சர் கரிகாலன்
- பரத் ரெட்டி - ஏ. சி சரவணன்
- ஜயகுமார் - கதிர் (அமைச்சரின் பீ. ஏ)
- தலைவாசல் விஜய்- மாவட்ட ஆட்சியர்
- றோகினி - வக்கீல்
- கருணாஸ் - பட்டு (சக்தியின் நண்பன்)
- தேவதர்சினி - சக்தியின் தங்கை (செல்லம்)
- சண்முகசுந்தரம் - பட்டுவின் தந்தை (வரப்பிரசாதம்)
- அஸ்வின் - திருமால்
Remove ads
இசை
இத்திரைப்படத்திற்கு பிரேம்ஜி அமரன் இசையமைத்துள்ளார். இத்திரைப்படத்தின் பாடல்வரிகளை யுகபாரதி எழுதியுள்ளார்.
மேற்கோள்கள்
வெளிப்புற இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads