தலைவாசல் விஜய்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
தலைவாசல் விஜய் தமிழ் திரைப்பட நடிகர். மற்றும் குரல்-ஒலிச்சேர்க்கை கலைஞர் ஆவார்.[1] இவர், தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கு மொழி திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்களில் நடித்துள்ளார்.
இவர், 1992இல் வெளிவந்த தலைவாசல் படத்தில் அறிமுகமானார். அதில் இவர் ஏற்று நடித்த கதாபாத்திரத்தின் மூலம் பிரபலமடைந்ததால் தனது பெயருக்கு முன்னால் தான் நடித்த முதல் படத்தின் பெயரை அடைமொழியாக வைத்து "தலைவாசல் விஜய்" என அழைக்கப்படுகிறார். இவர் திரைப்படங்களில் துணை கதாபாத்திரம் அல்லது குணசித்திர வேடங்களில் நடிப்பதின் மூலமாக அறியப்படுகிறார். குறிப்பாக, 2010இல் வெளியான ஆர். சுகுமாரனின் "யுகபுருஷன்" மலையாளப் படத்தில் இவர் ஏற்று நடித்த நாராயண குரு கதாபாத்திரம் பெரும் பெயரைப் பெற்றது.[2] இவர், தனது 25 வருட தொழில் வாழ்க்கையில் 200 திரைப்படங்களுக்கு மேலாக நடித்துள்ளார்.[3]
Remove ads
திரைப்படங்களின் பட்டியல்
தமிழ்
தெலுங்கு
மலையாளம்
குரல்-ஒலிச்சேர்க்கை செய்த படங்கள்
- புரூனோ சேவியர் - ("நள தமயந்தி")
- மலையாள நடிகர் முரளி - "அரசு" (2003 திரைப்படம்)
- ஸ்ரீஹரி - (வேட்டைக்காரன்)
- திர்லோக் மாலிக் - ("மேஜிக் மேஜிக் 3D)
- ஜெ. டி. சக்ரவர்த்தி - (கன்னத்தில் முத்தமிட்டால்)
- ஆஷூதோஷ் ராணா - (வேட்டை (திரைப்படம்))
- பிரதீப் ரவட் (கஜினி)
- தீப்ராஜ் ராணா - (கடம்பன் (திரைப்படம்))
Remove ads
தொலைக்காட்சி தொடர்கள்
- தமிழ்
- ஆளவந்தான் கொலை வழக்கு
- கங்கா யமுனா சரஸ்வதி - (ராஜ் தொலைக்காட்சி)
- அழகு (சன் டிவி)
- மலையாளம்
- நீலாமாலா - (தூர்தர்ஷன் மலையாளம்)
- கோபிகா - (தூர்தர்ஷன் மலையாளம்)
- படவுகள் - (தூர்தர்ஷன் மலையாளம்)
விருதுகள்
கேரள மாநில திரைப்பட விருதுகள்:
- 2010 - (கேரள மாநில திரைப்பட விருது| சிறப்பு ஜூரி விருது ) - "யுகபுருஷன்"
- 2012 - சிறந்த துணை நடிகருக்கான விருது - "கர்மயோகி" (2012 திரைப்படம்)
- 2018 - "அழகு" தொலைக்காட்சித் தொடரில் சிறந்த தந்தையாக நடித்ததற்காக சன் குடும்பம் விருது
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads