சுவாமி அஜராத்மானந்தா

From Wikipedia, the free encyclopedia

Remove ads

சுவாமி அஜராத்மானந்தா (1950 - மே 21, 2011[1]) கிழக்கிலங்கையில் மட்டக்களப்பு இராமகிருஷ்ண மட முதல்வராக இருந்தவர்.

வாழ்க்கைச் சுருக்கம்

மட்டக்களப்பு வாழைச்சேனையின் தளவாய் என்ற ஊரைச் சேர்ந்த இவரின் இயற்பெயர் முத்துக்குமார். மட்டக்களப்பு சிவானந்தா தேசிய பாடசாலையில் கல்வி பயின்ற இவர் அங்கு படித்துக்கொண்டிருந்தபோதே ஆன்மிகத்தில் ஈடுபட்டார். பின்னர் இந்தியா சென்று அங்குள்ள இராமகிருஷ்ண மடத்தில் பணியாற்றியதுடன் குருப்பட்டத்தையும் அங்கேயே பெற்றுக்கொண்டார். இதனைத் தொடர்ந்து தனது 50வது வயதில் சுவாமியாக அறிவிக்கப்பட்டதுடன் இந்தியா மற்றும் கொழும்பில் உள்ள இராமகிருஷ்ண மடங்களில் பணியாற்றினார்[2].

1987 ஆம் ஆண்டு தொடக்கம் மட்டக்களப்பு இராமகிருஷ்ண மடத்தில் ஆன்மிகப் பணியாற்றி வந்த அஜராத்மானந்தா, சுவாமி ஜீவானந்த மகராஜ் மகாசமாதி அடைந்ததையடுத்து மட்டக்களப்பு இராமகிருஷ்ண மடத்தின் தலைவராகப் பணியாற்றி வந்தார்.

Remove ads

மறைவு

சுவாமி அஜராத்மனாந்தா இந்தியாவிலுள்ள மருத்துவ மனையொன்றில் சிகிச்சை பெற்று மட்டக்களப்பிற்கு வந்த நிலையிலேயே மீண்டும் சுகயீனமுற்று மட்டக்களப்பு தனியார் மருத்துவ மனையில் 2011, மே 15 இல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு மே 21 இல் காலமானார்.

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads