கிழக்கு மாகாணம், இலங்கை

இலங்கையின் மாகாணம் From Wikipedia, the free encyclopedia

கிழக்கு மாகாணம், இலங்கை
Remove ads

இலங்கையின் கிழக்கு மாகாணம் (Eastern province) திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை ஆகிய மூன்று மாவட்டங்களை உள்ளடக்கியுள்ளது. இம் மாகாணத்தின் தலைநகர் திருகோணமலை ஆகும். மட்டக்களப்பு கிழக்கு மாகாணத்தின் பெரிய நகர் ‌ஆகும். தமிழீழத்தின் இரண்டாவது பெரிய நகரமாகும். இம் மாகாணமானது இலங்கைத் தீவின் கிழக்குக் கரையோரத்தில் அமைந்துள்ளது. வடக்கே, வட மாகாண எல்லையிலிருந்து, தெற்கே, தென் மாகாண எல்லைவரையுள்ள நீண்ட கரையோரம் இம் மாகாணத்தின் கீழ் வருகின்றது.

விரைவான உண்மைகள் கிழக்கு மாகாணம் Eastern Provinceනැගෙනහිර පළාත, நாடு ...
Thumb
பெரு வெள்ளத்தின் போது மட்டு வாவி

இலங்கை பிரித்தானியரிடமிருந்து அரசியல் விடுதலை பெற்ற பின்னர் உருவான இன அரசியலில் கிழக்கு மாகாணம் முக்கியமான ஒன்றாக இருந்து வருகின்றது. விடுதலைக்குப் பின் ஆட்சிக்கு வந்த அரசாங்கங்களினால் நடைமுறைப் படுத்தப்பட்ட அரசுசார்புக் குடியேற்றத்திட்டங்கள், தமிழ்ப் பெரும்பான்மை மாகாணமாக இருந்துவந்த கீழ் மாகாணத்தின் இனப்பரம்பலில் பெரும்பான்மைச் சிங்களவர்களுக்குச் சார்பான நிலையைக் கொண்டுவர முயற்சிப்பதாகக் கூறித் தமிழ் மக்களிடையே அதிருப்தியைத் தோற்றுவித்தது. 1987 இல் ஏற்படுத்தப்பட்ட இலங்கை - இந்திய ஒப்பந்தம் கிழக்கு மாகாணத்தை, வட மாகாணத்துடன் தற்காலிகமாக இணைத்து வடக்கு கிழக்கு மாகாண சபை என்ற ஒரே மாகாணசபை நிவாகத்தின் கீழ் கொண்டு வந்தது. அத்துடன் இணைந்த மாகாணங்களின் நிர்வாக மையமும், கிழக்கு மாகாணத்திலுள்ள திருகோணமலையிலேயே அமைக்கப்பட்டது. இந்தத் தற்காலிக இணைப்பு 2006 அக்டோபர் 16 ஆம் நாள் இலங்கை உச்சநீதிமன்றத்தினால் நீக்கப்பட்டு இரண்டு மாகாணங்களும் பிரிக்கப்பட்டன.

இந்த மாகாணம் தொடர்பில் தமிழர், சிங்களவர்களுக்கிடையிலான முரண்பாடுகள் ஒருபுறமிருக்க, நாட்டில் முஸ்லிம்கள் செறிந்து வாழும் முக்கிய பகுதியாகவும் கிழக்கு மாகாணமே விளங்குவதாலும், மாகாணத்தின் சனத்தொகையில் அண்ணளவாக 30% முஸ்லிம்களாக இருப்பதாலும் தீர்வு விடயத்தில் சிக்கல்கள் அதிகமாக உள்ளது.

Remove ads

புவியியல்

கிழக்கு மாகாணம் கிட்டத்தட்ட 9.996 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்டது.[1] இது வடக்கே வட மாகாணம், கிழக்கே வங்காள விரிகுடா, தெற்கே தென் மாகாணம், மற்றும் மேற்கே ஊவா மாகாணம், மத்திய மாகாணம், வடமத்திய மாகாணம் ஆகியவற்றை எல்லைகளாகக் கொண்டுள்ளது.

இம்மாகாணத்தின் கரைப்பகுதிகள் பெரும்பாலும் கடற் காயல்களைக் கொண்டுள்ளன. இவற்றில் மட்டக்களப்பு வாவி, கொக்கிளாய் வாவி, உப்பாறு, உல்லைக்கழி ஆகியவை குறிப்பிடத்தக்கவை.

Remove ads

நிருவாக அலகுகள்

கிழக்கு மாகாணம் 3 மாவட்டங்களாகவும், 45 பிரதேச செயலாளர் பிரிவுகளாகவும், 1,085 கிராமசேவகர் பிரிவுகளாகவும் பிரிக்கப்பட்டுள்ளது.

மேலதிகத் தகவல்கள் மாவட்டம், பி.செ பிரிவுகள் ...
Remove ads

முக்கிய நகரங்கள்

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads