அஞ்சலி நாயர் (1995 இல் பிறந்த நடிகை)
இந்திய நடிகை From Wikipedia, the free encyclopedia
Remove ads
அஞ்சலி நாயர், இந்தியாவின், கேரள மாநிலத்தை பூர்விகமாகக் கொண்ட, தமிழ்த் திரைப்படங்களில் நடித்து வரும் ஒரு இந்திய நடிகை ஆவார்.நெடுநல்வாடை (2019) என்ற தமிழ்த் திரைப்படத்தில் அறிமுகமானதைத் தொடர்ந்து, டாணாக்காரன் (2022) மற்றும் எண்ணித்துணிக (2022) உள்ளிட்ட குறிப்பிடக்கூடிய தமிழ் படங்களில் நடித்துள்ளார்.
Remove ads
தொழில்
அஞ்சலி, தமிழில் 2019-ம் ஆண்டு வெளியான நெடுநல்வாடை என்கிற திரைப்படம் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார், இப்படத்தில் இயல்பான கிராமத்து பெண் கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களிடமும் திரைவிமர்சகர்களிடமும் நேர்மறையான பாராட்டுகளைப் பெற்றுள்ளார், தி இந்து பத்திரிகையில் ஒரு விமர்சகர் இவரின் நடிப்பை ''சிறந்த வெளிப்பாடு'' என்று பாராட்டியுள்ளார்.[1] மேலும், தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸின் ஒரு விமர்சகர், "அறிமுக நடிகை அஞ்சலி நாயர் இந்தப் படத்தை தாங்கி பிடித்துள்ளார்." என்று குறிப்பிட்டார், அதே நேரத்தில் டைம்ஸ் ஆஃப் இந்தியா , "அஞ்சலியின் கண்ணியமான நடிப்பால் இப்படம் ஆதரிக்கப்பட்டுள்ளது" என்று தனது விமரிசனத்தில் குறிப்பிட்டுள்ளது.[2][3]
2022 ம் ஆண்டில் , அஞ்சலி மூன்று தமிழ் படங்களில் நடித்துள்ளார்.
- நடிகர் விக்ரம் பிரபுவிற்கு இணையான கதாநாயகியாக டாணாக்காரன் படத்தில் நடித்துள்ளார். இந்தப்படம் 2022 ஏப்ரல் 8 அன்று டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் நேரடியாக வெளியிடப்பட்டது. படத்தில் அஞ்சலியின் நடிப்பு விமர்சகர்கள் மற்றும் பார்வையாளர்களிடமிருந்து நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றுள்ளது.
- எண்ணித்துணிக - 4 ஆகத்து 2022 அன்று திரையரங்குகளில் வெளியிடப்பட்ட இந்த விறுவிறுப்பான திரைப்படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.[4]
- காலங்கள் அவள் வசந்தம் - 28 அக்டோபர் 2022 அன்று திரையரங்குகளில் வெளியிடப்பட்ட இந்த காதல் கதையை களமாகக் கொண்ட திரைப்படத்தில் முன்னணி கதாநாயகியாக நடித்துள்ளார்.[5]
இவருக்கு முன்னதாகவே மலையாள பின்னணியைக் கொண்ட அஞ்சலி நாயர் என்ற பெயரில் இன்னொரு நடிகையும் இருப்பதால், இவரது பெயரை மாற்ற சொன்னதற்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ள இவர், அதற்கு மறுத்தும் விட்டது குறிப்பிடத்தக்கது.[6]
Remove ads
திரைப்படவியல்
- திரைப்படங்கள்
ஆண்டு | திரைப்படம் | பங்கு | குறிப்புகள் |
2019 | நெடுநல்வாடை | அமுதா | |
2022 | தனக்காரன் | ஈஸ்வரி | |
எண்ணித்துணிக | ஜெனிபர் | ||
காலங்களில் அவள் வசந்தம் | ராதே |
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads