அஞ்செட்டி வட்டம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
அஞ்செட்டி வட்டம் , என்பது தமிழ்நாட்டின் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள எட்டு வட்டங்களில் ஒன்றாகும். இந்த வட்டத்தின் தலைமையகமாக அஞ்செட்டி உள்ளது.[1] இந்த வட்டமானது தேன்கனிக்கோட்டை வட்டத்தைப் பிரித்து 15 வருவாய் கிராமங்களைக் கொண்டும், 182 குக்கிராமங்களைக் கொண்டதாகவும் 2018 திசம்பர் 13 அன்று உருவாக்கப்பட்டது.[2][3] இந்த வட்டத்தில் பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும் அதிகம் உள்ளனர். இவ்வட்டத்தில் தளி ஊராட்சி ஒன்றியம் உள்ளது.
Remove ads
வட்டத்துக்கு உட்பட்ட வருவாய் கிராமங்கள்
அஞ்செட்டி வட்டத்தை உருவாக்க தேன்கனிக்கோட்டை வட்டத்தில் இருந்து தொட்டமஞ்சு, நாட்றாம்பாளையம், அஞ்செட்டி கிழக்கு, அஞ்செட்டி மேற்கு, மாடக்கல், கோட்டையூர், உரிகம், தக்கட்டி, மஞ்சுகொண்டப்பள்ளி, ஆகிய 9 வருவாய் கிராமங்கள் ஒதுக்கப்பட்டன. மேலும் பெரிய வருவாய் கிராமங்களான அஞ்செட்டி கிழக்கில் இருந்து சீங்கோட்டை, அஞ்செட்டி மேற்கில் இருந்து வண்ணாத்திப்பட்டி, தொட்டமஞ்சுவில் இருந்து கொடகரை, நாறாறாம்பாளையத்தில் இருந்து கேரட்டி, கோட்டையூரில் இருந்து, அத்திலத்தம், மாடக்கல்லில் இருந்து கரடிக்கல் என 6 வருவாய் கிராமங்கள் பிரிக்கப்பட்டுள்ளன. இவற்றுடன் மொத்தம் 15 வருவாய் வட்டங்கள் சேர்ந்ததாக அஞ்செட்டி வட்டம் செயல்படுகிறது.[4]
Remove ads
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads