அஞ்ஞாதவாசம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
அஞ்ஞாதவாசம் அல்லது தலைமறைவு வாழ்க்கை (சமசுகிருதம்:अज्ञातवास) என்பதற்கு தலைமறைமாக வாழ்தல் என்று பொருள். மகாபாரதத்தின் சபா பருவத்தின் இறுதியில் கௌரவர்களுடன் ஆடிய சூதாட்டத்தில் பாண்டவர்கள் தோற்றதால், துரியோதனன் ஏற்படுத்திய ஒப்பந்தப்படி, பாண்டவர்கள் 12 ஆண்டு கால வன வாச வாழ்க்கை முடிந்த பிறகு, ஒராண்டு அஞ்ஞாதவாசம் எனும் தலைமறைவு வாழ்க்கை வாழ வேண்டும். தலைமறைவு வாழ்க்கையின் போது திரௌபதி உள்ளிட்ட பாண்டவர்களின் அடையாளம் வெளிப்பட்டால் மீண்டும் பாண்டவர்கள் 12 ஆண்டு வன வாசம் மற்று ஒராண்டு அஞ்ஞாதவாசம் மேற்கொள்ள வேண்டும்.



சூதாட்ட ஒப்பந்தப்படி, 12 ஆண்டு வனவாசம் முடித்த பாண்டவர்கள் ஓராண்டு தலைமறைவு வாழ்க்கைக்காக மத்சய நாட்டின் மன்னர் விராடனின் அரண்மனைப் பணியில் சேர்கிறர்கள். ஓராண்டு தலைமறைவு வாழ்க்கையின் போது திரௌபதி உள்ளிட்ட பாண்டவர்கள் குறித்தான செய்திகள் விராட பருவத்தில் விரிவாகக் கூறப்பட்டுள்ளது.[1]
அஞ்ஞாதவாத முடிவுறும் போது காலத்தில், விராட மன்னரின் மைத்துனனும், தளபதியுமான கீசகன் கொல்லப்பட்ட செய்தி அறிந்த துரியோதனன், கர்ணன், பீஷ்மர், துரோணர் மற்றும் அஸ்வத்தாமன் தலைமையில் படைகளுடன் மத்சய நாட்டின் எல்லைப்புறத்தில் மேய்ந்து கொண்டிருந்த கால்நடைகளைக் கைப்பற்றினார்கள். இதனை அறிந்த மன்னர் விராடனின் மகன் உத்தரன், பிருகன்னளை தேர் ஓட்ட, போர்களத்திற்கு செல்கிறான். துரியோதனாதிகளின் படைகளை கண்ட உத்தரன் போரிலிருந்து பின் வாங்கினான். பின் உத்தரன் தேர் ஓட்ட, பிருகன்னளை வேடம் நீக்கிய அருச்சுனன் காண்டீபம் ஏந்தி எதிரிகளை வென்று கால்நடைகளை மீட்டான்.
ஒப்பந்தப்படி, ஓராண்டு தலைமறைவு வாழ்க்கைக்கு முன்னரே அருச்சுனன் வெளிப்பட்டதாக கூறிய துரியோதனன், மீண்டும் பாண்டவர்கள் 12 ஆண்டு வனவாசமும், ஓராண்டு தலைமறைவு வாழ்க்கையும் மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தினான்[2] . இதனை ஏற்க மறுத்த பீஷ்மர் முதலான பெரியவர்கள், காலக் கணக்கீட்டின்படி, பாண்டவர்களின் அஞ்ஞாத வாசம் நேற்றுடன் முடிவுற்றது என்றதுடன், பாண்டவர்களின் நாட்டை திருப்பி வழங்க வேண்டும் என்றும் எடுத்துரைத்தனர்.
பீஷ்மர் முதலான் பெரியவர்களின் ஆலோசனைகளை ஏற்க மறுத்த துரியோதனனிடம், பாண்டவர்களுக்கு ஐந்து கிராமங்கள் அல்லது ஐந்து வீடுகள் தர வேண்டி கிருஷ்ணன் தூது சென்றான்.[3]கிருஷ்ணனின் கோரிக்கை ஏற்க மறுத்ததால், பாண்டவர்கள் துரியோதனாதிகளை குருச்சேத்திரப் போரில் வென்று தங்களது நாட்டை மீட்டனர்.
Remove ads
இதனையும் காண்க
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads