காண்டீபம்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

காண்டீபம் (சர்வதேச சமசுகிருத ரோமனாக்க அரிச்சுவடி: Gāṇḍīva; சமக்கிருதம்: गाण्डीव) என்பது மகாபாரதத்தில் அருச்சுனனின் ஆயுதமான வில்லைக் குறிக்கும்.[1] இது பிரம்மனால் உருவாக்கப்பட்டு அவர் ஆயிரம் ஆண்டுகள் இதனை வைத்திருந்தார். பின்னர் பிரஜாபதி ஐநூற்று மூன்று ஆண்டுகளும், இந்திரன் ஐநூற்று எண்பது ஆண்டுகளும் வைத்திருந்தனர். அதன் பின்னர் வருணன் நூறு ஆண்டுகள் வைத்திருந்தார். காந்தவ காட்டை அழிப்பதற்காக அக்னி தேவனின் வேண்டுகோளின் படி, வருணன் இக்காண்டீபத்தை அர்ச்சுனனுக்கு வழங்கினார். காண்டீபம் சொர்க்கத்தில் உள்ள காண்டீ என்ற மரத்தின் மூலம் உருவாக்கப்பட்டது.

இந்த வில்லை கந்தர்வர்களும், தேவர்களும் வழிபட்டனர். காண்டீபத்தில் எய்யப்படும் அம்பு இடிமுழக்கத்தை ஏற்படுத்தும். இதைக் கொண்டே ஜயத்திரதன் தலையை கொய்தும், கர்ணனைக் கொன்றும், பீஷ்மரை காயப்படுத்தியும் வென்றான் அருச்சுனன்.

Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads