அண்ணாநகர், பெட்டமுகிளாலம் ஊராட்சி
From Wikipedia, the free encyclopedia
Remove ads
அண்ணாநகர் என்பது தமிழ்நாட்டின், கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை வட்டம், பெட்டமுகிளாலம் ஊராட்சியில் உள்ள ஒரு சிற்றூர் ஆகும்.[1]
இவ்வூர் கிருஷ்ணகிரி தருமபுரி மாவட்ட எல்லையில் அமைந்துள்ளது. இவ்வூரின் பழைய பெயர் தோழன்கிணறு(Tholankinaru) ஆகும் . இவ்வூரின் வேறு பெயர் பால்சுனை ஆகும்.கல்பதுக்கை
கல்பதுகை
அண்ணாநகர் கிராமம் அருகே பெட்டமுகிளாலம் கிராமத்திலிருந்து மாரண்டஅள்ளி செல்லும் சாலையில் மாவட்ட எல்லை பகுதியில் இரண்டு கல்பதுக்கைகள் அமைந்துள்ளது இக்கல்பதுகைகள் சுமார் 4000 ஆண்டுகளுக்கு முற்பட்ட பெருங்கற்கால கத்திடைகள் என கருதலாம்.
புவியியல் அமைவிடம்:
ஆள்கூறுகள்: 12°21'12.9''N 77°56'53.0''E
அமைவிடம்
இந்த ஊரானது தருமபுரி மாவட்டம் மாரண்டஅள்ளியிலிருந்து பெட்டமுகிளாலம் செல்லும் சாலையில் அமைந்துள்ளது. இவ்வூர் பெட்டமுகலாளத்திலிருந்து 6 கி.மீ தொலைவிலும் மாரண்டஅள்ளியிலிருந்து 10 கி.மீ தொலைவிலும் அய்யனார் கோட்டையிலிருந்து 7கி.மீ தூரத்திலும் அமைந்துள்ளது. இவ்வூர் கடல் மட்டத்திலிருந்து சுமார் 2800 மீட்டர் உயரத்தில் உள்ளது.
சுற்றுலா
பெட்டமுகிளாலம் பகுதியிலிருந்து மாரண்டஅள்ளி செல்லும் சாலையில் அண்ணாநகர் கிராமத்தில் அண்ணாநகர் காட்சி முணை உள்ளது. இது சிறந்த சுற்றுலா தளம் ஆகும். தோழன்கிணறு குட்டை போன்றவை இப்பகுதியின் பொழுது போக்கு இடங்களாகும்
குறிப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads