அதிரசம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
அதிரசம் (Adhirasam) அல்லது கொங்கு தமிழ் மற்றும் கன்னடத்தில் கஜ்ஜயா/கஜ்ஜாயம் அல்லது தெலுங்கில் அரிசெலு அல்லது மராத்தியில் அனர்சா அல்லது ஒடியாவில் அரிசா பிதா என்பது தமிழ் உணவு, கன்னட உணவு, தெலுங்கு உணவு மற்றும் மராத்தி உணவு மற்றும் ஒடியா உணவு வகைகளில் ஒன்றாகும். இது டோனட் போன்ற இனிப்பு தின்பண்டமாகும். கன்னடம், தெலுங்கு, மகாராஷ்டிரா, ஒடிசா மற்றும் தமிழ் நாகரிகங்களில் பிரபலமடைந்த நீண்ட வரலாற்றை இந்த உணவு வகை கொண்டுள்ளது. இவை வடை போன்ற வடிவமுடையது, ஆனால் இனிப்பு சுவையுடையது. தனித்து உண்ணக்கூடியது.
தீபாவளி பண்டிகையின்போது ஒவ்வொரு வீட்டிலும் தயாரிக்கப்படும் அதிரசம், தமிழ்நாடு மற்றும் கர்நாடக கோவில்களிலும் பிரசாதமாக வழங்கப்படுகிறது.
Remove ads
வரலாற்று மற்றும் கலாச்சார முக்கியத்துவம்
கல்வெட்டுச் செய்திகளின்படி 16 ஆம் நூற்றாண்டில் விஜயநகர பேரரசர் கிருஷ்ணதேவராயரின் காலத்தின் அரிசி மாவு, வெல்லம், வெண்ணெய் மற்றும் மிளகு ஆகியவற்றினைக் கொண்டு இந்த இனிப்பு தயாரிக்கப்பட்டதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. ஆண்டுதோறும் கும்பகோணம் அருகே உள்ள நல்லூரில் உள்ள பஞ்சவர்னேசுவரர் கோயில் திருவிழாவில் 6000 அதிரசம் 6000 வடைகளுடன் தெயவத்திற்குக் காணிக்கையாகத் தயாரிக்கப்படுகிறது. நள்ளிரவில் நடைபெறும் பிரார்த்தனைகளுக்காக, சூரிய உதயத்திற்கும் இரவு 11 மணிக்கும் இடையில் கோவில் சமையலறையில் சமைக்கப்படுகிறது. தமிழ் மக்களுக்கு மிகவும் பிடித்தமான பொதுவான தீபாவளி இனிப்பு தயாரிப்பு இதுவாகும்.[1]
Remove ads
செய்முறை
சுவையான இந்த அதிரசம் தயாரிப்பு ஒரு வாரம் காலம் ஆகும். முதலில் அரிசியினைத் தண்ணீரில் ஊறவைத்து நிழலிலும் தரையிலும் உலர்த்தி, அரிசியானது 3/4 அளவில் காய்ந்து சிறிது ஈரப்பதத்தை வைத்திருக்கும். இப்பொழுது அரிசியினை திரித்து மாவாக மாற்றவேண்டும். வெல்லத்தினை பாகுபதத்திற்கு மாற்றி, அரிசி மாவுடன் சிறிது தூளாக்கப்பட்ட ஏலக்காயுடன் சேர்த்து அடர்த்தியான மாவுக் கலவையினைத் தயாரிக்கவும்.பந்துபோன்ற இம்மாவினை மண் பாண்டத்திற்கு மாற்றி, பானையின் மேற்பகுதியினை மெல்லிய வெள்ளை துணியால் மூடவேண்டும். பின்னர் பகல் நேரத்தில் சூரிய ஒளியில் வைப்பதன் மூலம் சுமார் 3-5 நாட்கள் புளிக்க அனுமதிக்கப்படுகிறது. இறுதியாகத் தயாரான, மாவினைச் சிறிய பந்துகள் போன்று உருட்டி எடுத்துத் தட்டி, கொதிக்கும் எண்ணெய்யில் வறுத்தெடுக்கவும்.[2]
- அதிரசம்
- அதிரசம்
- சேலத்தின் அதிரசம்
Remove ads
புகழ்பெற்ற இடங்கள்
- வெள்ளியணை - கரூர் மாவட்டம் வெள்ளியணை அதிரசம் புகழ் பெற்றதாகும்.
மேலும் காண்க
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads