அநிருத்தப் பிரம்மராயர் (கதைமாந்தர்)

பொன்னியின் செல்வனில் வரும் கதாபாத்திரம் From Wikipedia, the free encyclopedia

Remove ads

அநிருத்தப் பிரம்மராயர், கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் புதினத்தின் கதாப்பாத்திரம். இவர் சோழப் பேரரசின் முதன்மை அமைச்சர் ஆவார். வரலாற்றில் இடம்பெற்ற அநிருத்தப் பிரம்மராயரை சற்று புனைவுடன் இணைத்து கதாபாத்திரமாக வடிவமைத்துள்ளார் கல்கி.

விரைவான உண்மைகள் அநிருத்தப் பிரம்மராயர், உருவாக்கியவர் ...
Remove ads

அநிருத்திரர் குலம்

மும்முடிச்சோழ பிரம்மராயர், ஸ்ரீகிருட்டிணராமன் என்கிற இயற்பெயர் கொண்டவர். அன்பில் அனந்தாழ்வார் சுவாமி என்கிற ரங்கநாதருக்குப் பணி செய்வதையே வாழ்வின் பயனாகக் கொண்டிருந்த அன்பில் அநிருத்தப் பட்டாச்சாரி எனும் நாராயணன் புகழ் பரப்பிய அந்தணரின் கொள்ளுப் பேரன். ஆழ்வார்களின் பாடல்களைப் பாடி பக்தர்களை மகிழ்விக்கும் நாராயண பட்டாச்சாரியார் என்பவரின் மகன்.

சுந்தர சோழரின் நட்பு

அந்தணர் சமூகத்தினைச் சார்ந்தவர் என்ற போதும், சுந்தர சோழரின் நட்புக்காக வீரதீர செயல்கள் புரிந்தவர். தனது சமூகத்தின் வரன்முறைகளை மீறி கடல்கடந்து செல்பவராக பொன்னியின் செல்வனில் உள்ளார். இவர் சுந்தர சோழரின் பால்ய நண்பர். சுந்தர சோழரும் அநிருத்தப் பிரம்மராயரும் ஒரே குருகுலத்தில் கல்வி பயின்றவர்கள். சுந்தர சோழர் தான் அரியணை ஏற வேண்டுமென்றால் அநிருத்தப் பிரம்மராயர் உடனிருக்க வேண்டுமென நண்பருக்கு கோரிக்கை விடுத்தார். அதனால் அநிருத்தப் பிரம்மராயர் சுந்தர சோழருக்குத் துணையாக சோழ அரசில் பங்கெடுத்துக் கொண்டார்.

Remove ads

வந்தியத்தேவனை தூது அனுப்புதல்

அநிருத்தருக்கு வந்தியத்தேவன் மேல் நல்ல அபிப்பிராயம் இல்லை. பழையாறைக்குள் நுழையும் போது, வந்தியத்தேவனும், பினாகபாணியும் சண்டையிட்டுக் கொண்டிருப்பதை பார்க்கிறார். இளவரசர் இறந்துவிட்டார் என்ற வதந்தியால் கூடியிருக்கும் மக்கள் முன் இவ்வாறு சண்டையிடுவது வீண் பிரச்சனையை ஏற்படுத்துக் கூடுமென எண்ணி இருவரையும் கைது செய்கிறார். பழையாறை அரண்மனையில் செம்பியன் மாதேவியை சந்தித்து மதுராந்த தேவனுக்கே சுந்தர சோழர் பட்டம் கட்ட ஆசைப்படுவதாய் கூறுகிறார். செம்பியன் மாதேவி ஒப்புக் கொள்ள மறுக்கிறார். இடையே மதுராந்தகன் வந்துவிடுவதால், குந்தவை சந்திக்கிறார்.

இளவரசர் அருள்மொழிவர்மன் நாகைப்பட்டினத்தில் இருப்பதை குந்தவை அறிந்தும் அதை அநிருத்தருக்கு தெரியப்படுத்தவேண்டாம் என்று நினைக்கிறார். அதை புரிந்து கொண்ட அநிருத்தர் இளவரசரை உயிரோடு இருப்பது பற்றி பேசாமலேயே இருந்துவிடுகிறார். அநிருத்தர் சிறைபிடித்த வந்தியத்தேவனை விடுவிக்க சொல்கிறார் குந்தவை. வந்தியத்தேவன் குந்தவையின் ஓலையுடன் ஈழத்திற்கு சென்றது நாடே அறிந்த ரகசியமாயிற்று என்றும், வந்தியத்தேவன் பழுவூர் இளையராணி சந்தித்து வந்தது குறித்து எடுத்துரைக்கிறார். இன்றைய காலகட்டத்தில் யாரையும் நம்ப முடியவில்லை என்று கவலையுறுகிறார்.

பழுவூர் இளையராணி சம்புவரையர் மாளிகையில் ஆதித்த கரிகாலனை சந்திக்கத் திட்டமிட்டிருப்பதைத் தவிர்க்கவோ, இல்லை மீறி சம்புவரையர் மாளிகைக்கு சென்றால், உடனிருந்து பாதுகாக்கவோ சரியான ஆள் வந்தியத்தேவன் என்பதை குந்தவையிடம் சொல்கிறார். குந்தவையின் தயக்கத்தினை உணர்ந்து ஆழ்வார்க்கடியானையும் துணைக்கு அனுப்புகிறார். இருந்தும் ஆதித்த கரிகாலன் கொல்லப்பட்டு விடுகிறான். கொலைப்பழியை வந்தியத்தேவன் மேல் சுமத்தி, அவனை சிறையில் அடைக்கின்றனர். அவன் பக்கத்து அறையில் இருக்கும் பைத்தியம், தனக்கு பாண்டிய கிரீடம் இருக்கும் இடம் தெரியும் என்று கூறியதால், பினாகபாணியைவிட்டு பைத்தியத்தினை அழைத்துவரும்படி கூறுகிறார் முதல்மந்திரி. பின்னாலேயே ஆழ்வார்க்கடியானை அனுப்பி வைக்கிறார். வந்தியத்தேவன் தப்பிவிடுகிறான். அதற்கு முதன் மந்திரியின் ஆள் பினாகபாணிதான் காரணம் என்று கூறுகிறார்கள். அதன்பிறகு அமைச்சரவையில் கூடி அடுத்த அரசர் யார் என்றும், ஆதித்த கரிகாலனை கொன்றவர்கள் யார் என்பதையும் விவாதிக்கின்றார்கள்.

இதற்கிடையே செம்பியன் மாதேவி தன் மகன் மதுராந்தகனை காணாமல் தவிப்பதாக சுந்தர சோழரிடம் முறையிடுகிறார். செம்பியன் மாதேவியின் மகன் மதுராந்தகன் அல்ல, சேந்தன் அமுதன் என்ற உண்மையை அறிந்து, சேந்தன் அமுதனை அவைக்கு அழைத்துவருகிறார் முதல் மந்திரி.

Remove ads

அறிவுமிகுந்த அமைச்சர்

ஆழ்வார்க்கடியான் நம்பி எனும் வீர வைணவரை ஒற்றனாக நியமித்து, அரசியல் நிலவரங்களை அவ்வப்போது அவர் மூலம் அறிந்து கொள்கிறார். அருள்மொழிவர்மன் எவ்வாறு நடக்க வேண்டும் என்பதை அரசியல் சூழ்ச்சிகளை உணர்ந்து வழிநடத்துகின்றார். தனக்கு ஆயிரம் கண்கள் இருக்கிறதென்றும், அவைகள் சோழ தேசம் மட்டுமல்லாது, அருகேயுள்ள தேசங்களிலும் பரவியிருக்கிறது என்றும் குந்தவை தேவியிடம் சொல்கிறார். இதன் மூலம் தனக்கு தெரியாமல் ஒன்றும் நடக்கவில்லை என்று கர்வம் கொண்டுள்ளதாகவும் கூறுகிறார்.

Remove ads

வெளி இணைப்புகள்

இவற்றையும் பார்க்கவும்

ஆழ்வார்க்கடியான் நம்பி

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads