அருள்மொழிவர்மன் (கதைமாந்தர்)
பொன்னியின் செல்வனில் வரும் கதாபாத்திரம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
அருள்மொழிவர்மன் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் புதினத்தில் வருகின்ற சோழர் குல இளவரசர் ஆவார். வரலாற்றில் இடம்பெற்ற இராசராச சோழனைச் சற்று புனைவுடன் இணைத்து கதாபாத்திரமாக வடிவமைத்துள்ளார் கல்கி.
![]() | இக்கட்டுரையைச் சரிபார்ப்பதற்காக மேலதிக மேற்கோள்கள் தேவைப்படுகின்றன. |
Remove ads
கதாப்பாத்திரத்தின் இயல்பு
சுந்தர சோழரின் மகனாகவும், ஆதித்த கரிகால சோழன் மற்றும் குந்தவை தேவியின் தம்பியாகவும் அருள்மொழிவர்மன் வருகிறார். ஓவிய, சிற்ப கலைகளை அலாதியான விருப்பம் கொண்டவராகவும், யானைகளின் மொழியை புரிந்தவராகவும், மதம் கொண்ட யானையை இலகுவாக கட்டுப்படுத்தும் திறன் வாய்த்தவராகவும் இருக்கிறார். அரச காரியங்களில் ஈடுபடும் போது நண்பர்களின் கருத்துகளையும், மந்திரிகளின் ஆலோசனைகளையும் அறிந்து முடிவெடுப்பவராகவும், பெரியவர்களின் சொற்படி நடப்பவராகவும் அருள்மொழிவர்மனின் கதாப்பாத்திரத்தினை கல்கி அவர்கள் செதுக்கியுள்ளார்.
Remove ads
பொன்னியின் செல்வன்
சிறுபிராயத்தில் அருள்மொழிவர்மன், இளைய பிராட்டி குந்தவை நாச்சியார், ஆதித்த கரிகாலன், இவர்களது தந்தை சுந்தர சோழர் மற்றும் தாய் மலையமான் குமாரி ஆகியோர் காவிரி நதியில் பயணப்பட்டுக் கொண்டிருக்கையி்ல் அருள்மொழிவர்மன் படகிலிருந்து தவறி விழுந்துவிடுகிறார். அவரை காப்பாற்றி மீண்டும் படகில் சேர்த்தவரை யாருமே அறிந்திருக்கவில்லை. அருள்மொழி தேவருக்கு மட்டும் அந்த மங்கையின் திருவுருவம் கண்களிலேயே இருக்கிறது. மற்றவர்கள் இளவரசரை காப்பாற்றியது பொன்னி நதிதான் என்று முடிவுக்கு வருகிறார்கள். அன்றைய தினத்திலிருந்து அருள்மொழிவர்மனை பொன்னியின் செல்வன் என்றே அழைக்கின்றார்கள்.
Remove ads
ஈழப்போர்
சுந்தர சோழருக்கும், வீரபாண்டியருக்கும் நடந்த போர்களில் ஈழத்திலிருந்து மகிந்தன் எனும் அரசனின் படைகள் வீரபாண்டியருக்கு உதவிகள் செய்தன. ஆதித்த கரிகாலன் வீரபாண்டியரை வெற்றி கொண்டபின்பு, சோழ சைன்யம் ஒன்றை இலங்கைக்கு அனுப்பிச் சிங்கள மன்னர்களுக்குப் புத்தி கற்பிக்க எண்ணினார். கொடும்பாளூர்ச் சிற்றரசர் குடும்பத்தைச் சேர்ந்த பராந்தகன் சிறிய வேளான் என்னும் தளபதியின் தலைமையில் ஒரு பெரும் படையைச் சிங்களத்துக்கு அனுப்பினார். மகிந்தராசனுடைய தளபதி சேனா என்பவனின் தலைமையில் சிங்களப்படை எதிர்பாராத விதத்தில் வந்து சோழப் படையுடன் நடந்த தாக்குதலில் சோழ சேனாதிபதியான பராந்தகன் சிறிய வேளான் தன் வீரப்புகழை நிலைநிறுத்திவிட்டு இன்னுயிரைத் துறந்தான்!
அதன்பிறகு ஈழப்போருக்கு அருள்மொழிவர்மனின் தலைமையில் பெரும்படை சோழதேசத்திலிருந்து செல்வதென முடிவெடுக்கப்பட்டது. பத்தொன்பதே வயதான அருள்மொழிவர்மனுக்கு பெரும் விடையளிப்பு நிகழ்ச்சி நடந்தது. அதில் குந்தவை தேவி தன்னுடைய தோழிகளுடன் கலந்து கொண்டார். அதிலொருத்தி ஈழத்தில் இறந்துபோன சிறிய வேளார் மகள் வானதி. அவள் இளவரசன் அருகே வந்ததும் மூர்ச்சையாகி கீழே விழுந்தாள். ஈழத்திற்கு செல்லும் முன் வானதியின் உடல்நிலை குறித்து அறிந்து கொண்டார் அருள்மொழிவர்மன். வானதிக்கு அது பெரும் வியப்பினையும், தான் மூர்ச்சையுற்று விழுந்தது வெட்கத்தினையும் தந்தது.
ஈழத்திற்கு சென்ற அருள்மொழிவர்மன், மகிந்தனை பெரும் இடங்களில் வெற்றி கொண்டார். சில இடங்கள் இன்னும் கைப்பற்றப்படாமல் இருந்தன. அவர் புதிய முறைகளை கையாண்டார். சோழ தேசத்திலிருந்தே சோழ வீரர்களுக்கு உணவுகள் அனுப்பபட்டன. போரினால் சிதலமடைந்த புத்த கோவில்கள் மீண்டும் சரிசெய்யப்பட்டன. மகிந்தராசனுடைய போர்வீரர்களுடன் மட்டுமே சோழபோர்வீரர்கள் சண்டையிட்டனர். ஈழத்தில் மக்களின் வாழ்வில் எவ்வித இடையூறும் இந்தப் போரினால் ஏற்படவில்லை.
இளவரசருக்கு செய்தி
பழையாறையிலிருந்து குந்தவை வந்தியத்தேவனிடம் இளவரசர் அருள்மொழிவர்மனை பழையாறைக்கு அழைத்துவரச் சொல்லி ஓலை தந்தனுப்புகிறார். அநிருத்தப் பிரம்மராயர் இளவரசரை ஈழத்திலேயே இருக்கச் சொல்லி ஆழ்வார்க்கடியான் நம்பியிடம் ஓலை தந்தனுப்புகிறார். காஞ்சியில் இருக்கும் ஆதித்த கரிகாலன் இளவரசரை காஞ்சிக்கு வரச் சொல்லி பார்த்திபேந்திர பல்லவனை அனுப்புகிறார். இதற்கிடையே சுந்தர சோழரின் ஆணை என்று பழுவேட்டரையர்கள் இளவரசரை சிறைப் பிடிக்க ஈழத்திற்கு வருகிறார்கள். நாற்புறமும் செய்திகள் வந்தமையாலும், அனைவருமே தன்னைவிட மூத்தவர்கள் என்பதாலும், யாருடைய சொற்படி நடப்பது என்று புரியாமல் தவிக்கிறார் அருள்மொழிவர்மர். இறுதியாக தந்தையின் கட்டளைக்கு கீழ்படிவதே சிறந்தது என்று பழுவேட்டரையர் வீரர்களுடன் செல்ல உத்தேசிக்கிறார்.
பூங்குழலி யானையின் மீதேறி வர அதன் பாகனாக அருள்மொழிவர்மன் வருகிறர். யானையின் பாஷை புரிந்தவர் என்பதால், அதன் காதில் ஏதோ கூறி மதம் பிடிக்க வைக்கிறார். யானை மிகவேகமாக பழுவேட்டரையர்கள் இருந்த இடத்தினை அடைகிறது. அங்கு, பெரும் புயலடித்து பழுவேட்டரையர்களின் வீரர்கள் வந்த கப்பல் சிதைந்துவிடுகிறது. மற்றொரு கப்பலொன்று கடலில் திரும்பி செல்வதும் தெரிகிறது. வல்லவரையன் வந்தியத்தேவன் திரும்பி செல்லும் கப்பலில் மாட்டிக் கொண்டதை அறிந்து இளவரசர் அவனை மீட்க பார்த்திபேந்திரன் கப்பலில் புறப்படுகிறார். இரு கப்பல்களும் சுழிக்காற்றில் சி்க்குகின்றன. பார்த்திபேந்திரன் கப்பலில் தப்பித்துச் செல்ல, இளவரசரும், வந்தியத்தேவனும் கடலில் நீண்ட நேரம் மிதக்கின்றார்கள். அங்கே பூங்குழலி வந்து மீட்கின்றாள்.
கோடிக்கரையில் பழுவேட்டர் இருப்பதாலும், இளவரசருக்கு சுரம் வந்துவிட்டதாலும், நாகைப்பட்டனத்தில் உள்ள சூடாமணி விகாரத்திற்கு பூங்கொடி அழைத்து சென்று சேர்க்கின்றாள். மூன்று நாட்கள் சிகிச்சை எடுத்துக் கொண்டு இளவரசர் மீள்கிறார்.
Remove ads
இவற்றையும் பார்க்கவும்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads