சோழ நாடு
From Wikipedia, the free encyclopedia
Remove ads
சோழ நாடு (Chola Nadu, Cauver Delta) என்பது தற்போதைய இந்தியாவின், தென் பகுதியாகும் (தென்னிந்தியா). தென்னிந்தியாவின் பெரும் பகுதி சோழ மன்னர்களால் ஆளப்பட்டது. சோழர்கள் ஆண்ட காலம் பொற்காலம் என வரலாறு கூறுகிறது. சோழ நாட்டில் பேசப்பட்ட மொழி தமிழ் மொழியாகும். சோழ மன்னர்கள் சைவ மற்றும் வைணவ மதத்தை பின்பற்றினார்கள்.[சான்று தேவை]
இது திராவிடதேசத்திற்குத் தெற்கிலும், பாண்டியதேசத்திற்கு வடக்கிலும், விசாலமான பூமியில் பரவி இருந்த தேசம் ஆகும்.[1]
Remove ads
சோழ அரசர்களின் பட்டியல்
Remove ads
இருப்பிடம்
இந்த தேசத்தில் பூமி கிடைமட்டமாகவும், மேற்கிலிருந்து கிழக்கு நோக்கி சரிந்தும், மேடும், பள்ளமும், காணப்படும். இந்த தேசம் கிழக்கு மேற்கில் நீண்டும், தென்வடக்கில் குறுகியும் இருக்கும்.[3]
பொ.ஊ. 9 மற்றும் 13 ஆம் நூற்றாண்டுகளுக்கு இடையில் தென்னிந்தியாவின் பெரும்பகுதியையும் இலங்கை மற்றும் தென்கிழக்கு ஆசியாவின் சில பகுதிகளையும் சோழர்கள் ஆட்சி செய்தனர். உறையூர் (தற்போது திருச்சிராப்பள்ளி நகரத்தின் ஒரு பகுதி) ஆரம்பகால சோழர்களின் தலைநகரமாக இருந்தது. பின்னர் இடைக்கால சோழர்களால் தஞ்சாவூருக்கு மாற்றப்பட்டது. பின்னர் சோழ மன்னர் இராசேந்திர சோழன் 11 ஆம் நூற்றாண்டில் தலைநகரை கங்கைகொண்ட சோழபுரத்திற்கு மாற்றினார். பின்னர் சோழ மன்னர் மூன்றாம் இராஜராஜ சோழன் 13 ஆம் நூற்றாண்டில் தலைநகரை பழையாறைக்கு மாற்றினான்.[4]
Remove ads
மலை, காடு, விலங்குகள்
இந்த தேசத்தின் நான்கு பக்கங்களிலும் மலைகளை காணமுடியாது. இவை பெரும்பாலும் செழிப்பான பூமியாக இருக்கிறது.
நதிகள்
கருநாடக தேசத்தின் தெற்குபகுதியில் சகயம் என்னும் குடகு மலையில் உற்பத்தியாகும் காவிரி நதியானது, திருவரங்கம் அருகில் இரு நதியாகப் பிரிந்து வடபகுதி கொள்ளிடம் என்றும், தென்பகுதி காவிரி என்றும் சோழதேசத்தை செழிக்க வைக்கின்றது.
வேளாண்மை
இந்த சோழதேசத்தில் நெல், வாழை, கரும்பு, போன்றவைகளும், துவரை, கடலை போன்ற புன்செய் பயிர்களும் விளைகின்றது.
சிறப்பு
இந்த சோழதேசம் சோழ நாடு சோறுடைத்து சிறப்பு வாய்ந்த தேசமாகும்.[5]
கருவி நூல்
- புராதன இந்தியா என்னும் 56 தேசங்கள் - சந்தியா பதிப்பகம் - சென்னை-83- மூன்றாம் பதிப்பு-2009
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads