அப்பத்தாவ ஆட்டய போட்டுடாங்க

2021இல் வெளியான தமிழ் திரைப்படம் From Wikipedia, the free encyclopedia

Remove ads

அப்பத்தாவ ஆட்டய போட்டுடாங்க (Appathava Aattaya Pottutanga ) என்பது இசுடீபன் ரங்கராஜ் இயக்கத்தில் சந்திரஹாசன், ஷீலா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து 2021ஆம் ஆண்டு வெளியான தமிழ் மொழி நாடகத் திரைப்படமாகும். இது ஜிபி ஸ்டுடியோ பிலிம்ஸ் தயாரிப்பில் 8 அக்டோபர் 2021 அன்று வெளியானது [1]

விரைவான உண்மைகள் அப்பத்தாவ ஆட்டய போட்டுடாங்க, இயக்கம் ...
Remove ads

நடிகர்கள்

தயாரிப்பு

கமல்ஹாசனின் அண்ணன் சந்திரஹாசன் அவரது முதல் முக்கியக் கதாபாத்திரத்தில் தோன்றி, 2016ஆம் ஆண்டு "அப்பத்தாவ ஆட்டையாபோட்டுடாங்க" படத்தின் தயாரிப்பைத் தொடங்கினார். ஒரு முதியோர் இல்லத்தில் நடக்கும் காதல் கதையை மூத்த குடிமக்களின் உறவினர்கள் எப்படி எதிர்க்கிறார்கள் என்பதை கதை விவரிக்கிறது. நடிகர் விக்ராந்தின் தாய் ஷீலா கதாநாயகியாக நடித்தார். காத்தாடி ராமமூர்த்தி, சண்முகசுந்தரம் உட்பட பல மூத்த நடிகர்கள் துணை வேடங்களில் நடித்தனர். படத்தயாரிப்புக்குப் பிந்தைய பணிகள் சனவரி 2017 இல் தொடங்கியது. சந்திரஹாசன் மார்ச் 2017இல் இறந்தார் [2][3]

Remove ads

வெளியீடு

படம் நான்கு வருட தாமதத்திற்குப் பிறகு, 8 அக்டோபர் 2021 அன்று SonyLIV தளத்தில் வெளியிடப்பட்டது. சினிமா எக்ஸ்பிரஸ் படத்திற்கு ஒரு கலவையான விமர்சனத்தை அளித்தது. இது "அந்திம வருடங்களைப் பற்றிய ஒரு சுறுசுறுப்பு இல்லாத கதை" என்று கூறியது.[4] தினமலரில் ஒரு விமர்சகர் படத்திற்கு ஐந்தில் இரண்டு நட்சத்திரங்களைக் கொடுத்தார்.[5] OTPlay குறிப்பிட்டது, "தயாரிப்பாளர்கள் சிறந்த திரைக்கதையில் கவனம் செலுத்தியிருந்தால், படத்தில் அனுபவம் வாய்ந்த கலைஞர்களின் எண்ணிக்கையைக் கருத்தில் கொண்டு, கண்ணியமான கதை வேலை செய்திருக்கும்".[6]

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads