அமாணா
From Wikipedia, the free encyclopedia
Remove ads
அமாணா அல்லது மலேசிய தேசிய நம்பிக்கை கட்சி (ஆங்கிலம்: National Trust Party (AMANAH); மலாய்: Parti Amanah Negara; சீனம்: 國家誠信黨) என்பது மலேசியாவில் உள்ள ஓர் அரசியல் கட்சியாகும்.[3] இந்தக் கட்சியின் தலைவராக முகமது சாபு இருக்கிறார்.
அரசியல் அடிப்படையில் இசுலாத்தின் சீர்திருத்தவாதத்தை ஆதரிக்கிறது. ஒரு காலக்கட்டத்தில் அப்போதைய ஆளும் பாரிசான் நேசனல் கூட்டணியை எதிர்க்கும் ஆற்றல் கொண்ட கட்சியாக அமாணா கட்சி விளங்கியது.[4][5]
2015-ஆம் ஆண்டில் இந்தக் கட்சியும், ஜனநாயக செயல் கட்சியும், மக்கள் நீதிக் கட்சியும் ஒன்றிணைந்து, பாக்காத்தான் அரப்பான் கூட்டணியை உருவாக்கின.
Remove ads
பொது
சூன் 2015 மலேசிய இசுலாமிய கட்சியின் தேர்தலில், அக்கட்சியின் முற்போக்கு இசுலாமியத் தலைவர்கள் சிலர் தோல்வியுற்றனர். அவர்களின் அப்போதைய குழுவான கெராக்கான் அராப்பான் பாரு (Gerakan Harapan Baru) எனும் குழுவிடம் அமாணா கட்சி, ஆகஸ்டு 2015-இல் ஒப்படைக்கப்பட்டது. அதற்கு முன்னர் அமாணா கட்சி மலேசிய தொழிலாளர் கட்சி (Malaysia Workers' Party) என அறியப்பட்டது.
பாஸ் கட்சியின் முந்தைய முற்போக்கு இசுலாமியத் தலைவர்களின் குழு, பின்னர் 16 செப்டம்பர் 2015-இல், மலேசிய தொழிலாளர் கட்சியை ஓர் இசுலாமிய சீர்திருத்தவாதக் கட்சியாக மறுவரையறை செய்தது. அமாணா கட்சி, மலேசிய மக்களவையில் தற்போது எட்டு உறுப்பினர்களைக் கொண்டுள்ளது. அத்துடன் ஆளும் பாக்காத்தான் அரப்பான் கூட்டணியின் நான்கு கூறு கட்சிகளில் அமாணா கட்சியும் ஒரு க்ட்சியாகச் செயல்படுகிறது..
Remove ads
மேலும் காண்க
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads