மலேசியத் தேர்தல்கள்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
மலேசியத் தேர்தல்கள் (மலாய்: Pilihan Raya Umum Malaysia; ஆங்கிலம்: Elections in Malaysia) என்பது 1955-ஆம் ஆண்டில் இருந்து 2024-ஆம் ஆண்டு வரை மலேசியாவில் நடைபெற்ற மக்களவை தேர்தல்கள்; மற்றும் மாநிலச் சட்டமன்றத் தேர்தல்களைக் குறிப்பிடுவதாகும்.[1]
மலேசியாவில் இரண்டு நிலைகளில் தேர்தல்கள் நடைபெறுகின்றன. முதலாவது மத்திய அரசு தேர்தல்; இது நாடாளுமன்றத்தின் மக்களவைத் தேர்தல் என்று அழைக்கப்படுகிறது. இரண்டாவது மாநில அளவிலான தேர்தல்; மலேசிய மாநிலங்களின் சட்டமன்றங்களுக்காக நடைபெறும் தேர்தல். மத்திய அரசாங்கத்தின் நிர்வாகத் தலைவராகப் பிரதமர் தேர்வு செய்யப்படுகிறார்.
நாடாளுமன்றத்தில் இரண்டு அவைகள் உள்ளன. முதலாவது அவை மலேசிய மக்களவை; மற்றோர் அவை மலேசிய மேலவை. இந்த அவைகளில் மலேசிய மக்களவை டேவான் ராக்யாட் என்று அழைக்கப்படுகிறது. மலேசிய மேலவை டேவான் நெகாரா என்று அழைக்கப்படுகிறது.
மலேசிய மக்களவையின் 222 உறுப்பினர்களும் தேர்தல் மூலமாகத் தேர்ந்தெடுக்கப் படுகின்றனர். நாடாளுமன்றத்தில் எந்தக் கட்சிக்கு அதிகப் பெரும்பான்மை உறுப்பினர்கள் இருக்கிறார்களோ, அந்தக் கட்சி அரசாங்கத்தை அமைக்கின்றது. நாடாளுமன்றத்தின் மேலவைக்கு தேர்தல் நடைபெறுவது இல்லை. மேலவை உறுப்பினர்கள் மலேசிய அரசர் அவர்களால் நியமனம் செய்யப்படுகிறார்கள்.
Remove ads
ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல்
ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை பொதுத் தேர்தல் நடைபெற வேண்டும். எனினும், அந்த ஐந்தாண்டுகள் முடிவடைவதற்கு முன்னாலேயே, நாடாளுமன்றத்தை பேரரசரின் அனுமதியுடன் பிரதமர் கலைக்க முடியும். நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு இரண்டு மாதங்களில் மேற்கு மலேசியாவில் தேர்தல் நடத்தப்படவேண்டும். கிழக்கு மலேசியாவில் மூன்று மாதங்களில் தேர்தல் நடத்தப்படவேண்டும்.[2]
மேற்கு மலேசியாவில் பெர்லிஸ். கெடா, பினாங்கு, பேராக், சிலாங்கூர், நெகிரி செம்பிலான், மலாக்கா, ஜொகூர், பகாங், கிளாந்தான், திரங்கானு, கோலாலம்பூர், புத்ராஜெயா கூட்டரசுப் பிரதேசங்கள் உள்ளன. கிழக்கு மலேசியாவில் (சபா, சரவாக்) மாநிலங்கள் உள்ளன. இதில் லபுவான் ஒரு கூட்டரசுப் பிரதேசமாகும்.[3]
Remove ads
மலாயா/மலேசியாவில் நடைபெற்ற பொதுத் தேர்தல்களின் பட்டியல்
Remove ads
மேற்கோள்கள்
மேலும் காண்க
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads