அம்பர்நாத் தாலுகா
From Wikipedia, the free encyclopedia
Remove ads
அம்பர்நாத் தாலுகா (Ambernath taluka) இந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்தின், கொங்கண் கோட்டத்தில் அமைந்த தானே மாவட்டத்தின் 7 வருவாய் வட்டங்களில் ஒன்றாகும்.[1]இதன் நிர்வாகத் தலைமையிடம் அம்பர்நாத் நகரம் ஆகும். இத்தாலுகாவின் மற்றொரு நகரம் பத்லாப்பூர் ஆகும். இத்தாலுகாவில் வாங்கனி எனும் பேரூராட்சி உள்ளது. இத்தாலுகா 76 வருவாய் கிராமங்களைக் கொண்டது. 328.12 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இத்தாலுகாவின் மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பில் 1,723 பேர் வீதம் வாழ்கின்றனர். 60% மக்கள் கிராமப்புறங்களில் வாழ்கின்றனர்.

Remove ads
மக்கள் தொகை பரம்பல்
2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, 1,30,986 வீடுகளும் கொண்ட அம்பர்நாத் தாலுகாவின் மொத்த மக்கள் தொகை 5,65,340 ஆகும். மக்கள் தொகையில் ஆண்கள் 295358 மற்றும் பெண்கள் 269982 ஆக உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 929 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் எண்ணிக்கை 65,053 (11.51%) ஆகும். சராசரி எழுத்தறிவு 77.05% ஆகும். பட்டியல் மக்கள் மற்றும் பழங்குடிகள் முறையே 13.39% மற்றும் 6.41% ஆகவுள்ளனர். இதன் மக்கள் தொகையில் இந்துக்கள் 81.64%, இசுலாமியர்கள் 6.88%, பௌத்தர்கள் 7.65%, சமணர்கள் 0.47%, கிறித்துவர்கள் 2.79% மற்றும் பிற சமயத்தினர் 0.38 ஆக உள்ளனர்.[2]
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads