அம்பி (நகரம்)

இந்தியாவிலுள்ள ஒரு நகரம் From Wikipedia, the free encyclopedia

அம்பி (நகரம்)map
Remove ads

அம்பி ( Hampi )அல்லது விஜயநகரம் ( Vijayanagara ) என்பது இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் விஜயநகர மாவட்டத்திலுள்ள ஒரு நகரம் ஆகும். [2] மாநிலத்தின் கிழக்கு மற்றும் மத்திய பகுதியில் துங்கபத்திரை ஆற்றங்கரையில் அமைந்துள்ள அம்பி ஹொசப்பேட்டை நகருக்கு அருகில் உள்ளது. ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனத்தின் உலக பாரம்பரியக் களமான அம்பி குழுமத்தின் நினைவுச்சின்னங்களுக்காக இது பிரபலமானது. [3]

விரைவான உண்மைகள் அம்பி விஜயநகரம், நாடு ...

மௌரிய பேரரசர் அசோகரின் கல்வெட்டுகளிலும், இராமாயணம் மற்றும் இந்து மதத்தின் புராணங்கள் போன்ற நூல்களில் “பம்பா தேவி தீர்த்த சேத்திரம்” என்று இந்நகரத்தைப் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. [4] [5] [6] 14 ஆம் நூற்றாண்டில் இந்து இராச்சியமான விஜயநகரப் பேரரசின் தலைநகரான விஜயநகரத்தின் ஒரு பகுதியாக அம்பி இருந்தது. [4] [7] இது தென்னிந்தியாவில் இசுலாமிய சுல்தான்களுக்கு எதிராக நிறுவப்பட்ட தக்காண பிராந்திய இராச்சியத்தின் பொருளாதார மற்றும் நிர்வாக நடவடிக்கைகளின் மையமாகவும் இருந்தது. இரண்டு நூற்றாண்டுகளுக்கு மேலான ஆட்சிக்குப் பிறகு, பேரரசு தோற்கடிக்கப்பட்டு கைவிடப்பட்டது. 19 ஆம் நூற்றாண்டிலிருந்து, அதன் இடிபாடுகள் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களுக்கும் வரலாற்றாசிரியர்களுக்கும் ஒரு முக்கிய இடமாக இருந்து வருகிறது. [7] [8]

Remove ads

நிலவியல்

அம்பி, துங்கபத்திரை ஆற்றங்கரையில், பாறை மலைகளுக்கு மத்தியில் அமைந்துள்ளது. இது பெங்களூரிலிருந்து 348 கிலோமீட்டர் (216 மைல்), ஐதராபாத்திலிருந்து 385 கிலோமீட்டர் (239 மைல்) மற்றும் பெல்காமிலிருந்து 266 கிலோமீட்டர் (165 மை) தொலைவில் உள்ளது. 13 கிமீ தொலைவில் உள்ள ஹொசபேட்டை நகரில் தொடருந்து நிலையம் உள்ளது. மேலும் 32 கிலோமீட்டர் (20 மை) தொலைவிலுள்ள தோரணகல்லு என்ற இடத்திலிருந்து பெங்களூர் கெம்பெகவுடா பன்னாட்டு வானூர்தி நிலையம் செல்லலாம். மேலும் அம்பியிலிருந்து கோவா மற்றும் பெங்களூருக்கு பேருந்து மூலமும் செல்லலாம். [9]

Remove ads

பொருளாதாரச் செயல்பாடு

நகரம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளின் முக்கிய பொருளாதாரமாக வேளாண்மை, சுற்றுலா மற்றும் இரும்புத்தாது , மாங்கனீசு போன்றவற்றை நம்பியுள்ளது. அம்பியின் சராசரி மழையளவு சராசரி மழையளவு சுமார் 660 மிமீ ஆகும். நெல், சோளம், கம்பு, நிலக்கடலை, சூரியகாந்தி, கரும்பு மற்றும் பருத்தி ஆகியவை முக்கிய பயிர்கள். அம்பியின் விளைநிலங்களுக்கான பாசன வசதிக்காக இதன் அருகில் ஒரு பெரிய அணை உள்ளது. [2]

சுற்றுலா

ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனத்தின் உலக பாரம்பரியக் களமான அம்பி குழுமத்தின் நினைவுச்சின்னங்களுக்காக அம்பி நகரம் அறியப்படுகிறது. [10]

1960 களில் மற்றும் அதற்குப் பிறகு, இந்த நகரம் இருசக்கர வாகனத்தில் செல்வோருக்கான ஈர்ப்பாகவும், அதன் உள்கட்டமைப்பு மோசமான நிலையில் இருந்தபோதும் சிறந்த சுற்றுலா தளமாகவும் மாறியது. சுற்றுலாப் பயணிகள் அருகிலிருக்கும் மலைகள் மற்றும் அதன் இடிபாடுகளுக்கு மத்தியில் விருந்துகள் மற்றும் ஆன்மீகக் கூடல்களை ஏற்பாடு செய்கின்றனர். இவாறான நடவடிக்கைகள் "அம்பி ஹிப்பிஸ்" என்று அழைக்கப்படுகின்றன. மேலும், சில வெளியீடுகளில் அம்பி நகரத்தை “இழந்த நகரம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. [11] [12]

விஜயநகரப் பேரரசின் ஆட்சிக்காலத்திலிருந்து ஆண்டுதோறும் “அம்பி உற்சவம்” அல்லது “விஜய விழா” கொண்டாடப்பட்டு வருகிறது. இது நாடா ஹப்பா (பண்டிகை) என கர்நாடக அரசால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. [13] 1 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் இந்த இடத்திற்கு வருகை தருகின்றனர்.

Remove ads

இதனையும் காண்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads