அம்மோனியம் பைகார்பனேட்டு

வேதிச் சேர்மம் From Wikipedia, the free encyclopedia

அம்மோனியம் பைகார்பனேட்டு
Remove ads

அம்மோனியம் பைகார்பனேட்டு (Ammonium bicarbonate) என்பது (NH4)HCO3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டை உடைய கனிமச் சேர்மம் ஆகும். இந்தச் சேர்மமானது இதன் நீண்ட வரலாற்றுக்கேற்ப பல்வேறு பெயர்களைக் கொண்டுள்ளது. வேதியியல்ரீதியாக கூறினால் இது அம்மோனியம் அயனியினுடைய பைகார்பனேட்டு உப்பாகும். இது நிறமற்ற திண்மமாகும். இது எளிதில் சிதைவடைந்து அம்மோனியா, நீர் மற்றும் கார்பனீராக்சைடாக சிதைவடைகிறது.

விரைவான உண்மைகள் பெயர்கள், இனங்காட்டிகள் ...
Remove ads

தயாரிப்பு

அம்மோனியம் ஐதராக்சைடானது அம்மோனியாவுடன் கார்பனீராக்சைடைச் சேர்ப்பதால் தயாரிக்கப்படுகிறது.

CO2 + NH3 + H2O → (NH4)HCO3

அம்மோனியம் பைகார்பனேட்டானது நிலையற்றதாக இருப்பதால் வினைக்கரைசலானது குளிர்ச்சியான சூழலில் வைக்கப்படுகிறது. இதன் காரணமாக விளைபொருளானது வெண்மை நிறத் திண்மமாக வீழ்படிவாகிறது. 1997 ஆம் ஆண்டில் 100,000 டன்கள் அம்மோனியம் பைகார்பனேட்டு இந்த முறையில் தயாரிக்கப்பட்டது.[3]

அம்மோனியா வாயுவானது வலிமையான செஸ்கிகார்பனேட்டின் நீர்க்கரைசலுள் செலுத்தப்படுகிறது. ( (NH4)HCO3, (NH4)2CO3, and H2O ஆகியவற்றின் 2:1:1 கலவை) அவ்வாறு செலுத்தப்பட்டவுடன் சாதாரண அம்மோனியம் கார்பனேட்டாக ((NH4)2CO3) மாறுகிறது. இது 30°செல்சியசு வெப்பநிலையில் தயாரிக்கப்பட்ட கரைசலிலிருந்து இது திட வடிவில் பிரித்தெடுக்கப்படலாம். இந்தச் சேர்மம் காற்றுடன் வினைபுரியச் செய்யும் போது அம்மோனியாவினை வெளியிட்டு அம்மோனியம் பைகார்பனேட்டாக மாறுகிறது.

ஆர்ட்சுஆர்ன் உப்பு

அம்மோனியம் கார்பனேட்டின் இயைபு மிக நீண்ட காலமாகவே அறியப்பட்டிருக்கிறது. ஒரு காலத்தில் அவை வணிகரீதியாகத் தயாரிக்கப்பட்டுள்ளது. முன்னதாக இது சால் வாலடைல் அல்லது ஆர்ட்சுஆர்ன் உப்பு என அழைக்கப்பட்டது. இது நைட்ரசனைக் கொண்டுள்ள கரிமப் பொருள்களான முடி, கொம்பு, தோல் போன்றவற்றை உலர் வடித்தலுக்கு உட்படுத்துவதன் மூலம் தயாரிக்கப்படுகிறது. இந்தப் பொருட்கள் அம்மோனியம் பைகார்பனேட்டுடன் கூடுதலாக அம்மோனியம் கார்பனேட்டையும் கொண்டுள்ளது. சில நேரங்களில் இது அம்மோனியம் செஸ்கிகார்பனேட்டு எனவும் அழைக்கப்படுகிறது. இது வலிமையான அம்மோனிய நெடியினை உடையது. ஆல்ககாலுடன் நொதிக்கச் செய்யப்படும் போது கார்பமேட்டானது கரைந்து அம்மோனியம் பைகார்பனேட்டின் வீழ்படிவை விட்டுச் செல்கிறது.[3]

இதே மாதிரியான ஒரு சிதைவானது செஸ்கிகார்பனேட்டானது காற்றுடன் வினைபுரிய அனுமதிக்கப்படும் போதும் நிகழ்கிறது.

Remove ads

பயன்கள்

அம்மோனியம் பைகார்பனேட்டானது உணவுத் தொழிலில், குறிப்பாக அடுமைனத் தொழிலில் மிருதுவாக்கும் காரணியாகப் பயன்படுகிறது. சீனாவில் ஆவியால் வேக வைக்கப்பட்ட பன் மற்றும் பாதாம் ரொட்டிகளில் பயன்படுகிறது. முன்னதாக, இன்றைய உலகின் சமையல் சோடா வருவதற்கு முன்பாக சமையலறைகளில் அதிகமாகப் பயன்படுத்தப்பட்டது. சீனாவில் இந்த உப்பு மணமுடைய உப்பு என அழைக்கப்பட்டது. இசுகாண்டிநேவியாவிலிருந்து வெளிவந்த பல சமையல் புத்தகங்களில் இதனை ஆர்ட்சுஆர்ன் அல்லது கொம்புப்பு என குறிப்பிடுகின்றன.[4][5] சமைக்கும் போது சிறிதளவு அம்மோனியாவின் நெடி இருப்பினும் அது வேகமாக மறைந்து சுவையற்றதாகி விடுகிறது. ரொட்டி சோடா மற்றும் ரொட்டி பொட்டாஷ் ஆகியவற்றுடன் ஒப்பிடும் போது ஒரே அளவான காரணிக்கு அதிக வாயுவை வெளியிடும் தன்மை கொண்டதாக இருக்கும் கூடுதல் நன்மையைக் கொண்டுள்ளது. அத்தோடு இந்தச் சேர்மம் முழுமையாக சிதைவடைந்து நீர் மற்றும் வாயுக்களாகி விடுவதாலும் வெப்பப்படுத்தும் போது அவையும் ஆவியாகிப்போய் விடுவதாலும், சோப்பு போன்ற வழவழப்புத் தன்மையையோ, உப்புத்தன்மையையோ இறுதியாகத் தயாரிக்கப்படும் உணவுப் பண்டத்தில் விட்டுச் செல்வதில்லை.

இது சீனாவில் செலவு குறைவான நைட்ரசன் உரமாக பயன்படுத்தப்பட்டு வந்தது. யூரியாவின் கண்டுபிடிப்பிற்குப் பின்ன அதன் தரம் மற்றும் நிலைத்தன்மையின் காரணமாக இதன் பயன்பாடு வழக்கொழிந்து போனது. இச்சேர்மமானது தீயணைப்புக் கருவிகளில் பயன்படும் சேர்மமாகவும், மருந்துப் பொருட்கள் தயாரிப்பின் போதும், சாயங்கள் மற்றும் நிறமிகளிலும், அடிப்படையான உரங்களிலும் இது பயன்படுகிறது. அம்மோனியம் பைகார்பனேட்டானது இன்றும் இரப்பர் மற்றும் நெகிழி தொழிற்சாலைகளில் பரவலாகப் பயன்படுகிறது. தோல் பதனிடுதல், பீங்கான் தயாரிப்பு மற்றும் வினைவேக மாற்றிகளின் தயாரிப்பு ஆகியவற்றிலும் பயன்படுகிறது.

Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads