உரம்

From Wikipedia, the free encyclopedia

உரம்
Remove ads

உரம் (fertilizer) என்பது தாவர வளர்ச்சிக்கு இன்றியமையாத, சுண்ணாம்பு தவிர, ஒன்று அல்லது அதற்கும் மேற்பட்ட தாவர ஊட்டங்களை நிலத்துக்கு தாவர இழையங்களுக்குத் தரும் இயற்கை அல்லது செயற்கைத் தொகுப்புவழிப் பொருட்களைக் குறிப்பிடும். பல இயற்கை அல்லது தொழிலக உரங்கள் நடப்பில் உள்ளன.[1]

Thumb
உரம் பரப்பப்டுகிறது
Thumb
பெரிய தற்கால உரம் பரப்பி அல்ல்லது தூவி
Thumb
மென்தட வேளாண் உரப் பரப்பி, ஒரு வேளாண்காட்சியில்

உரம் (ஒலிப்பு) (fertiliser) என்பது விளை நிலத்தில் உள்ள ஊட்டச்சத்துகளைப் பெருக்கும் பொருட்டு இடப்படுவதாகும். மண்ணில் குறைந்து வரும் இயற்கையான சத்துப் பொருட்களை ஈடு செய்யும் பொருட்டு செயற்கையான சத்துப் பொருளை மண்ணுக்கு ஊட்டுவது 'உரம் இடுதல்' ஆகும். சாதாரணமாக மண்ணில் நைட்ரஜன், பொட்டாசியம், பாஸ்பரஸ், மக்னீசியம், கந்தகம், இரும்பு முதலிய வேதியல் பொருட்கள் கலந்துள்ளன. இவையே தாவரங்களுக்குத் தேவையான வேதியியல் சத்துப் பொருட்கள் ஆகும். காற்றிலிருந்தும் கூட சத்துப் பொருட்களைத் தாவரங்கள் சேமித்து வளர்கின்றன.

மண்ணில் உள்ள இவ்வியற்கைச் சத்துப் பொருட்கள் தாவரங்களின் வளர்ச்சிக்கு ஒவ்வொரு நிலையிலும் உறுதுணை புரிகின்றன. தாவரத்தின் தண்டும் இலைகளும் நன்கு வளர்ச்சி பெற நைட்ரஜன் பொருட்கள் பெருந்துணை புரிகிறது. தாவரங்களுக்கு நோய் ஏதும் வராமல் காக்கும் கேடயமும் இதுவேயாகும். பூக்கள் பூத்துக் குலுங்கவும் காய்கள் நன்கு திரட்சியடையவும் விதைகள் முதிர்ச்சி பெறவும் பாஸ்பேட்டுகள் அவசியம். அதே போன்று வேரும் பழமும் வித்தும் திரட்சி பெற பொட்டாஸ் என்னும் சாம்பல் சத்து இன்றியமையாத தேவையாகும்.

மண்ணிற்கு மேலும் வளமூட்ட பொதுவாக மாட்டுச் சாணம், இலை, தழை, எரு, ஆட்டுப் புழுக்கை போன்று இயற்கைக் கழிவுப் பொருட்கள் நிலத்திற்கு உரமாக இடப்படுகின்றன. இவையும் இயற்கை உரங்களே ஆகும். அன்றாடம் கூட்டிப் பெருக்கும் குப்பைக் கூளங்களை குழியிட்டு கழிவு நீரைப் பாய்ச்சி உரமாக்குவதும் உண்டு. இது கலப்பு உரம் அல்லது தொழு உரம் (கம்போஸ்ட்) என அழைக்கப்படுகிறது. சத்திழக்கும் மண்ணுக்கு மேலும் வளமூட்ட இயற்கை உரங்களின் தன்மைகளைக் கொண்ட செயற்கை உரங்களை வேதியியல் அடிப்படையில் தொழிற்சாலைகளில் தயாரிக்கிறார்கள். இவற்றை செயற்கை உரங்கள் என்கிறோம். இவ்வகை உரங்கள் நைட்ரசன் (தொழிற்சாலையிலும்), பாஸ்பரஸ், பொட்டாசியம் (சுரங்கத்திலுருந்து வெட்டியெடுக்கப்பட்டவைகளிருந்து) போன்ற வேதியியல் பொருளினின்றும் தயாரிக்கப்படுகிறது. இயற்கை உரம், கலப்பு உரம் இவற்றோடு வேதியியல் உரங்களும் மண்ணிற்குச் சத்தூட்டி தாவரப் பயிர்கள் செழித்து வளர வழி கோலுகின்றன. அறிவியலின் வளர்ச்சி காரணமாக உற்பத்தியைப் பெருக்க, நல்ல தரமான விளைபொருட்கள் கிடைக்க, செயற்கை உரங்கள் பெருமளவில் தயாரிக்கப்பட்டு பயன்படுத்தப்படுகின்றன.

உரம் தழை (நைட்ரசன்) மணி (பாஸ்பரஸ்), சாம்பல் (பொட்டாசியம்), ஆகிய முக்கிய முதல் நிலை பேரூட்டக் கனிம சத்துகளையும் கால்சியம், மக்னீசியம், கந்தகம் ஆகிய இரண்டாம் நிலை ஊட்டச் சத்துக்களையும் இரும்பு, துத்தநாகம், போரான், மாலிப்டினம், தாமிரம், மாங்கனீசு போன்ற தாதுப்பொருட்களையும் நிலத்திற்குத் தருகிறது. நிலத்தின் தன்மை விளைவிக்கப்படும் பயிரின் இயல்பு, தட்பவெப்ப சூழ்நிலை ஆகியவற்றைப் பொறுத்து தேவைப்படும் சத்தை எவ்வகை உரத்தின் மூலம் பெறுவது என்பதைத் தீர்மானித்து அவ்வகை உரத்தை நிலத்திற்கு இடவேண்டும். அப்போதுதான் விரும்பிய பலன் கிட்டும். உரமிடுவதற்கென தனி எந்திரங்கள் தற்போது பயன்படுத்தப்படுகின்றன.

அளவுக்கு மீறிய உரமிடுவதால், நிலம், பயிர் மற்றும் உணவு ஆகியவை நச்சுத் தன்மையடைவதுடன் அதிகப்படியான உரங்கள் அல்லது உரங்களிலுள்ள தேவையற்ற பொருட்கள் பாசன நீரால் கழுவிச்செல்லப்பட்டு ஆறுகளிலும் நீர் நிலைகளிலும் தேங்குகிறது. அவற்றிலுள்ள வேதியியற் கனிமங்களினால் நீர் நிலைகளும் நச்சுத் தன்மை அடைகின்றன. மேலும், கழிவிலுள்ள நைட்ரேட் நைதரசன் மற்றும் அதிகப்படியான ஊட்டச் சத்துக்கள் நீர் நிலைகளில் பாசிப் பெருக்கதிற்கும் (algal bloom) அதனால் ஏற்படும் ஆக்சிஜன் குறைவிற்கும் (eutrophication) காரணமாகின்றது. உரங்களில் இருந்து கிடைக்கும் கழிவுப் பொருட்களை நீர்நிலைகளில் சேர்ப்பதற்கு முன், உயிரியல் முறையில் நைட்ரேட்டுகளாக மாற்றியோ அல்லது நைதரசனை அகற்றியோ சூழல் மாசடையாது ஓரளவு காக்கமுடியும்.

Remove ads

வரலாறு

Thumb
எசுப்பானிய நாட்டில் உள்ள சலமங்கா நகரில் 1812 இல் மீரட்டில் நிறுவிய மிகப் பழைய உரத் தொழிலகம்.

மண்வள மேலாண்மை உழவர்களால் பல்லாயிரம் ஆண்டுகளகவே மேற்கொள்ளப்பட்டுவருகிறது. எகுபதியர்களும் உரோம்ர்களும் பாபில்லோனியர்களும் மிகமுந்திய கிரேக்கர்களும் பண்ணைகளுக்கு அவற்றின் விளைச்சல்திறனைக் கூட்ட, கனிமங்க அல்லது உரங்களைப் பயன்படுத்தியதாகப் பதிவுகள் செய்துள்ளனர்.[1] தாவர் ஊட்டம் சார்ந்த் அறிவியல் 19 ஆம் நூற்றாண்டில் செருமானிய வேதியியலாளர் யசுட்டசு வான் இலய்பிகு என்பவராலும் பிறராலும் தோன்றியது. பிரித்தானியத் தொழில்முனைவோராகிய ஜான் பென்னட் இலாவேசு 1837 இல் பானைகளில் வளர்த்த தாவரங்களுக்கு பலவகை உரங்களை இட்டு தரங்களின்பால் அவற்றின் விளைவுகளை அறியும் செய்முறைகளை மேற்கொண்டார், ஓரிரு ஆண்டுகளுக்குப் பிறகு இந்தச் செய்முறையை வயலில் உள்ள பயிர்களிலும் மேற்கொண்டார். இதன் விளைவாக, 1842 இல் ஓர் உரத்துக்குப் பதிவுரிமம் பெற்றார். இந்த உரம் பாசுவேற்றுகளைக் கந்தக அமிலத்துடன் வேதிவினை புரியச் செய்து உருவக்கப்பட்டது. இதுவே முதலில் உருவாகிய செயற்கை உரமாகும். அடுத்த ஆண்டே தான் அரை நூற்றாண்டுக்கும் மேலாக உரோதசுட்டெடு வறள்பயிர்கள் அராய்ச்சி நிறுவனத்ஹ்தில் உடனிருந்து பணிபுரிந்த யோசாப்பு என்றி கில்பர்ட்டு பணிகளைப் பட்டியலிட்டு வெளியிட்டார்.[2]

தழைச்சத்துவகை (காலகவகை) உரமாக்கத்தின் தொடக்கத்தில் பர்க்கிலாந்து-அய்தே வேதிவினைமுறை வல்லமை வாய்ந்த தொழிலகச் செயல்முறையாக விளங்கியது.[3]இந்தச் செயல்முறை வளிமண்டலக் காலக(N2) வளிமத்தை நைட்ரிக் அமிலத்துடன்) (HNO3) வினைபுரியவைத்தார். இம்முறை காலக நிலைப்படுத்தலுக்கான பல வேதிவினைகளில் ஒன்றாகும்மிதன் விளைபொருள் நைட்டிரேற்றுnitrate (NO3) ஆக்க வாயிலாக அமைந்தது. நார்வேயில் இயியுகானிலும் நோட்டோடென்னிலும் இந்தச் செயல்முறையை வைத்து ஒரு தொழிலகம் நைட்டிரேற்று உரமாக்க்கத்துக்க்காக உருவாக்கப்பட்டது. இது அங்கு கட்டியமைக்கப்பட்ட பெரிய புனல்மின்நிலையத்துடன் கூட்டாக அமைக்கப்பட்டது.[4]

1910 களிலும் 1920 களிலும் ஏபர் வேதிவினை முறையும் ஆசுட்டுவால்டு வேதிவினை முறையும் உருவாகின. ஏபர்முறை அம்மோனியாவை (NH3) மீத்தேன் (CH4) வளிமத்தில் இருந்தும் மூலக்கூற்று காலகத்தில் (N2) இருந்தும் தொகுத்தது. ஏபர்முறையில் இருந்து உருவாகிய அம்மோனியா பிறகு நைட்டிரிக் அமிலமாக(HNO3)றஆசுட்டுவால்டு முறைமூலம் மாற்றப்படுகிறது.[5] தொகுப்புர வளர்ச்சி உலக மக்கள்தொகையைப் பேரளவில் வளர்த்தது; பெரும்பாலும் புவியின் அரைமடங்கு மக்கள் தொகுப்புக் காலக உரத்தால் ஊட்டப்படுகிறது என மதிப்பிடப்பட்டுள்ளது.[6]

யூரியாவையும் பார்மால்டிகைடையும் இணைத்து உருவாக்கும் பலபடி உரம்வழி கட்டுபட்ட முறையில் காலகத்தை வெளியிடும் தொழில்நுட்பங்கள் முதலில் 1936 இல் அறிமுகமாகி, 1955 இல் வணிகமுறை படுத்தப்பட்டன.[7] முதலில் வெளியிட்ட உரத்தில் 100% தண்ணீரில் கரைந்த காலகத்தில் 60% அளவை வெளியிடவல்லதாகவும் 15% க்கும் குறைந்த அளவில் வினைபுரியாத பகுதியாகவும் எஞ்சியது. மெத்திலீன் யூரியா 1960 களிலும் 1970 களிலும் வணிகமுறைப் பயனுக்கு வந்தது. இதில் 25% முதல் 60% காலகம் தண்ணீரில் கரையாததாகவும் 15% முதல் 30% அளவுக்கு வினைபுரியாத யூரியா காலகமும் அமைந்தது.

Remove ads

இயங்குமுறை

Thumb
வளங்குன்றிய மணல்/களிமண் நிலத்தில் நைட்டிரேற்று உஅரமிட்டும் இடாமலும் ஆறுவகைத் தக்காளிகள் பயிரிடப்பட்டன. வளங்குன்றிய நிலத்தில் பயிரிட்ட ஒருவகைத் தக்களி இறந்துவிட்டது.

உரங்கள் தாவர வளர்ச்சியைக் கூட்டுகிறது. இந்த இலக்கு இருவழிகளில் அடையப்படுகிறது. ஒன்று மரபான முறையில் கூடுதல் ஊட்டங்களை அளிப்பது; மற்றொன்று உரங்கொண்டு மண்வளத்தைக் கூட்டுவதும் நீர்தங்கி நிற்றலையும் காற்றூட்டத்தையும் மிகுப்பதுமாகும்.


உரங்கள் பல்வேறு விகிதங்களில் பின்வரும் ஊட்டங்களைத் தருகின்றன:[8]

  • மூன்று முதன்மைப் பேரூட்டங்கள்:
    • காலகம் (நைட்டிரசன்) (N): இலை வளர்ச்சி
    • அவிர்வம் ( [[பாசுவரசு])] (P): வேர்,பூ,விதை, பழ வளர்ச்சி;
    • எரியம் (பொட்டாசியம்) (K): வலிவான தண்டு வளர்ச்சி, தாவர நீரியக்கம், பூத்தலையும் பழுத்தலையும் மேம்படுத்தல்;
Remove ads

மேலும் காண்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads