அயோத்தியா காண்டம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
அயோத்தியா காண்டம் கம்ப இராமாயணாத்த்தில் அயோத்தியா காண்டம், 13 படலங்கள் கொண்டது. அவைகள்: [1]
- மந்திரப் படலம்
- மந்தரை சூழ்ச்சிப் படலம்
- கைகேயி சூழ்வினைப் படலம்
- நகர் நீங்கு படலம்
- தைலம் ஆட்டு படலம்
- கங்கைப் படலம்
- குகப் படலம்
- வனம் புகு படலம்
- சித்திரகூடப் படலம்
- பள்ளிபடைப் படலம்
- ஆறு செல் படலம்
- கங்கை காண் படலம்
- திருவடி சூட்டு படலம்

Remove ads
அயோத்தி காண்டச் சுருக்கம்
இராமருக்கும் – சீதைக்கும் திருமணமாகி 12 ஆண்டுகள் கழிந்த பின்னர், கோசல நாட்டு மன்னர் தசரதன், முதலமைச்சர் சுமந்திரர் உள்ளிட்ட குல குரு வசிட்டர், பிரபுக்கள் மற்றும் குடிமக்கள் உள்ளிட்ட அரசவையைக் கூட்டி, மூத்த இளவரசரான இராமருக்கு அயோத்தியைத் தலைநகராகக் கொண்ட கோசல நாட்டின் மன்னராக மணிமகுடம் சூட்டும் தனது விருப்பத்தை தெரிவித்தார்.
ஆனால், கைகேயியின் பணிப்பெண்களில் ஒருத்தியான கூனி எனும் மந்தரை என்பாள் இராமன் மீது வெறுப்புற்றிருந்தாள். இராமன் அரசனாவதை அவள் விரும்பவில்லை. அதனால், கைகேயியைத் தூண்டி விட்டு இராமன் அரசனாவதைத் தடுக்க எண்ணினாள். கைகேயியும் கூனியின் வலையில் விழுந்தாள். முன்னொருபோது தசரதனின் உயிரைக் கைகேயி காத்தமைக்காக இரண்டு வரங்கள் தருவதாகத் தசரதன் வாக்களித்திருந்தான்.
அவ்விரு வரங்களையும் கேட்டு வாங்கும்படி கூனியான மந்தரை கைகேயிக்கு ஆலோசனை கூறினாள். அவ்வரங்களின் படி, தனது மகன் பரதன் அரசனாக வேண்டும், இராமன் பதினான்கு ஆண்டுகள் காட்டில் வாழவேண்டும் என்னும் இரண்டு வரங்களைக் கைகேயி தசரதரிடம் கேட்டாள். மனதை மாற்றிக்கொள்ளும்படி தசரதர் வேண்டியும் கைகேயி பிடிவாதமாக மறுத்துவிட்டதனால், தான் சொன்ன சொல்லைக் காப்பாற்றுவதற்காக வேறு வழியின்றி அவளுடைய கோரிக்கைக்குத் தசரதன் இணங்க வேண்டியதாயிற்று. தசரதரின் முடிவைக் கேள்வியுற்ற இராமன், சீதை மற்றும் இலட்சுமணனும் காட்டுக்குக் கிளம்பினர். இராமன் காட்டுக்குப் போய்விட்டான் என்பதைக் கேள்வியுற்ற தசரதர் கவலை தாங்காமல் உடனேயே இறந்துவிட்டார்.
இராமன் சரயு நதியை கடந்து பின் வனம் புகுந்தார். பின்னர் குகனின் துணையுடன் கங்கை ஆற்றைக் கடந்து சித்திரகூடம் சென்று காட்டில் தங்கினார். கேகய நாட்டில் தன் மாமனுடன் தங்கியிருந்த பரதனும், சத்துருக்கனும், தந்தையின் இறப்புச் செய்தி கேள்வியுற்று அயோத்தி வந்தடைந்தனர்.
இராமர் காட்டிற்கு சென்றது கையேயியே காரணம் என்பதை அறிந்த பரதன் கோபம் கொண்டு, முடி சூட்டிக்கொள்ள மறுத்து, இராமனைத் திரும்பவும் அயோத்திக்கு கூட்டி வருவதற்காகக் காட்டுக்குச் சென்றான். தந்தையின் சொல்லைக் காப்பாற்றுவதற்காக அயோத்திக்கு வர இராமன் மறுக்கவே, பரதன், இராமனின் காலணிகளை கேட்டுப் பெற்று, தன் தலை மேல் சுமந்து கொண்டு அயோத்திக்கு திரும்பி, இராமனின் பாதுகைகளை அரியணையில் வைத்து இராமன் காட்டிலிருந்து மீளும் வரை அவனுக்காகப் பரதன் ஆட்சி நடத்தினான்.
Remove ads
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads