அரசாங்கம்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

அரசாங்கம் (Government) என்பது நாடு அல்லது சமுதாயத்தை கட்டுப்படுத்தும் அமைப்பாகும். [1] நாடுகளின் பொதுநலவாயத்தில் (Commonwealth of Nations) “அரசாங்கம்” என்ற சொல்லானது ஒரு மாநிலத்தில் நிறைவேற்று அதிகாரத்தைச் செயல்படுத்தும் மக்களின் கூட்டு குழுவை குறிக்கவும் பயன்படுத்தப்படுகிறது.[2][3][4] இந்தச் சொல் பயன்பாட்டுக்கு ஒத்ததாக அமெரிக்க ஆங்கிலத்தில் "நிர்வாகம்" என்று அழைக்கப்படுகிறது. மேலும், குறிப்பாக அமெரிக்க ஆங்கிலத்தில், "அரசு" மற்றும் "அரசாங்கம்" ஆகியவற்றின் கொள்கைகள் அரசியல் ரீதியாக ஒழுங்கமைக்கப்பட்ட பிரதேசத்தின் மீது அதிகாரம் செலுத்தும் நபர் அல்லது குழுவினரைக் குறிக்கிறது.[5][6] அரசாங்கம் (government) என்பது அரசைக் கட்டுப்படுத்தும் சட்டமியற்றுவோர், நிர்வகிப்போர், நிர்வாக அதிகாரமுள்ளோரைக் கொண்ட ஒழுங்கமைக்கப்பட்ட முறையாகும்.[7][8] அரசாங்கம் அரசின் கொள்கையினை நடைமுறைப்படுத்தும் ஒன்றாகவும், அரச கொள்கையினை வரையறுக்கும் பொறிமுறையாகவும் உள்ளது. அரசாங்கத்தின் அமைப்பு என்பது ஒர் அரசின் அரசாங்கத்தினால் ஒழுங்கமைக்கப்பட்ட அரசியல் நிறுவனங்களின் அமைப்பாக நோக்கப்படுகின்றது. இது ஆட்சி முறை வடிவம், அரசாங்கத்தின் முறை என்பவற்றை உள்ளடக்கியது.

Remove ads

வரையறை மற்றும் சொற்பிறப்பியல்

அரசு என்பது ஒரு நாடு அல்லது மாநிலத்தை அல்லது சமூகத்தை நிர்வகிக்கும் அமைப்பு ஆகும்.[9]

"கவர்மெண்ட்" என்ற ஆங்கிலச் சொல்லானது κυβερνάω [kubernáo] ["கபர்னெளவ்"] என்ற கிரேக்க வினைச்சொல்லில் இருந்து வந்த வார்த்தை ஆகும் .[10]

கொலம்பிய கலைக்களஞ்சியத்தில் அரசாங்கம் என்பது "சமூக கட்டுப்பாட்டின் ஒரு முறைமை, சட்டத்தின் கீழ் இயங்கும் உரிமையைக் கொண்டது, அவற்றைச் செயல்படுத்துவதற்கான உரிமை, சமூகத்தின் ஒரு குறிப்பிட்ட குழுவில் உள்ளதாகும்" என்று குறிப்பிடப்படுகிறது.[11]

அனைத்து வகையான அமைப்புகளும் ஆட்சிக்கு வந்தாலும், புவியில் சுமார் 200 சுயாதீன தேசிய அரசாங்கங்களையும் அவற்றின் துணை நிறுவனங்களை குறிப்பதற்கும் பயன்படுகிறது.[12]

இறுதியாக அரசாங்கம் (Government) என்பது சில வேளைகளில் நிர்வாகம் (Governance) என்ற பொருள்படும் வகையிலும் ஆங்கிலத்தில் பயன்படுத்தப்படுகிறது.

Remove ads

அரசறிவியல்

அரசு அறிவியல் என்பது நாடு, அரசாங்கம், அரசியல் மற்றும் அரசுக் கொள்கைகள் போன்றவற்றைப் பயிலும் ஒரு சமூக அறிவியல் கற்கை நெறி ஆகும்.[13] இது குறிப்பாக அரசியல் கொள்கை, மற்றும் நடைமுறை, அரசாட்சி முறைமைகளைப் பற்றிய ஆலசல், அரசியல் போக்கு, கலாசாரம் போன்றவற்றைப் பற்றி விரிவாக ஆராய்கிறது. அரசறிவியல் பொருளியல், சட்டம், சமூகவியல், வரலாறு, மானிடவியல், பொது நிர்வாகம், பன்னாட்டு உறவுகள், உளவியல், மற்றும் அரசியல் தத்துவம் போt்ற பல நெறிகளுடன் பிணைந்துள்ளது. இது ஒரு நவீன கற்கையாக விளங்குகின்ற போதிலும் இதன் தோற்றத்தை பண்டைய கிரேக்கத்தின் வரலாற்றிலிருந்தே அறிந்து கொள்ள முடிகின்றது. அரசியலின் ஆங்கிலப் பதமான பாலிடிக்ஸ் (politics) என்பது கிரேக்கப் பேரரசு நிலவிய காலத்தில் நகர அரசு எனும் பொருளுடைய ‘பொலிஸ்’ (Polis) எனும் பதத்திலிருந்தே தோன்றியதாகும்.

ஆரம்பகால கிரேக்கத்தின் அரசியல் ஒழுங்கமைப்பின் அடிப்படை அலகுகளாகவும், சமூக வாழ்வின் சுயதேவைப் பூர்த்தியுடைய அலகுகளாகவும் காணப்பட்ட இந் நகர அரசுகள் மனித வாழ்வின் மேம்பாட்டிற்கான சிறந்த ஒழுங்கமைப்பாகவும் கருதப்பட்டது. நில அளவால் மிகச் சிறியனவாகக் காணப்பட்ட இந் நகர அரசுகளை அக்கால சமுதாயத்திலிருந்தும் வேறுபடுத்திப் பார்க்க முடியவில்லை. அதாவது இவை அரசுகளாக மட்டுமன்றி சமுதாயமாகவும் விளங்கியதால் மக்களின் பொதுநடத்தையையும், தனி நடத்தையையும், அரசியல் நடத்தையையும் வேறுபடுத்திப் பார்க்க முடியவில்லை. ஏதோ ஒரு வகையில் இந் நகர அரசுகளில் வாழ்ந்த மக்களின் நடத்தைகள் யாவும் அரசியல் சம்பந்தப்பட்டதாகவே அமைந்திருந்தன.

ஆரம்ப காலங்களில் அரசு பற்றிய விஞ்ஞானம் என்றும், அரசின் கடந்தகால – நிகழ்கால – எதிர்கால நிலை பற்றியும் அவ்வரசு சார்ந்த அமைப்புகள், நிறுவனங்கள், கோட்பாடுகள் பற்றிய கல்வியே அரசறிவியல் என்றும் அரசினை முன்னிலைப்படுத்தி அரசறிவியலுக்கு விளக்கங்கள் முன்வைக்கப்பட்டன. இவ்வாறு அரசினை முதன்மைப்படுத்தி கூறும் விளக்கத்தினை அரசியலறிஞர்களான பிளன்ற்சிலி (Bluntchili), கார்ணர் (Garner), கெட்டல் (Gettal), பிராங்குட்நோவ் (Frankgutnov), பொலொக் (Pollock), ஸ்ட்ரோங் (Strong) முதலானோர் ஆதரிக்கின்றனர்.

19ம் 20ம் நூற்றாண்டுக் காலப்பகுதிகளில் அமெரிக்கா, பிரித்தானியா ஆகிய நாடுகளின் அரசியற் கல்வியில் அரசு நிலை சார்ந்த இக் கருத்துநிலைகள் கூடிய செல்வாக்குப் பெற்றனவாகத் திகழ்ந்தன.

அரசியலானது அரசுடன் தொடர்புடைய எல்லா அம்சங்களையும் குறிப்பதாக அமைகின்ற போதிலும் அரசியலும், அரசியல் விஞ்ஞானமும் ஒரே கருத்துடையவையாகா. அவை ஒன்றிலிருந்து ஒன்று தம்மிடையே வேறுபட்டவை. அரசியல் என்பது அரசு, அரசாங்கம் என்பவற்றுடன் தொடர்புடைய நாளாந்த நடவடிக்கைகளை மட்டும் குறிப்பிடுகின்றது. ஆனால் அரசியல் விஞ்ஞானம் என்பது அரசியலோடு தொடர்புடைய யாவற்றையும் ஆராய்கின்றது. அதாவது அரசியல்வாதி எனப்படுபவர் நாளாந்த அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுபவராவார். பொதுவாக அவர் குறிப்பிட்ட கட்சி ஒன்றை சார்ந்தவராகவோ அல்லது சட்டமன்ற உறுப்பினராகவோ இருக்க முடியும். ஆனால் அரசியல் விஞ்ஞானி என்பவர் அரசுடன் தொடர்புடைய சரித்திரம், சட்டம், கோட்பாடு, நடைமுறை போன்ற யாவற்றையும் ஆராய்கின்ற ஒருவராவார். அதே வேளை அரசியல் விஞ்ஞானிகளும் நேரடியாக அரசியலில் ஈடுபட்ட சந்தர்ப்பங்களையும் எடுத்துக் காட்டலாம்.

  • பண்டைய அரசியல் சிந்தனையாளரான பிளேட்டோ சிசிலியின் சைசாகஸ் அரசர்களுக்கு சேவை செய்தவராவார்
  • அரிஸ்ரோட்டில் மகா அலெக்ஸாண்டருக்கு சேவை செய்தவராவார்.
  • மாக்கியவல்லி புளோரன்ஸ் குடியரசின் செயலாளராக பணிபுரிந்தவராவார்.

J.W. கார்ணர் (Garner) என்பவர் மிகச் சுருக்கமாக “அரசியல் விஞ்ஞானத்தின் தொடக்கமும் முடிவும் அரசு” என்கிறார். அவ்வாறெனின் அரசு என்பது யாது எனின், ஒரு மனித குழு ஒரு சமூகமாக இயங்குவதற்கு தனது நடத்தைகளையும் தொடர்புகளையும் உறவுகளையும் ஏற்றக் கொள்ளப்பட்ட கோட்பாடுகளின் அடிப்படையில் ஒழுங்கமைப்பதற்குரிய நபர்களை வேண்டி நிற்கின்றது. இந்நபர்களையும் இணைத்த வகையில் ஒழுங்கமைக்கப்பட்ட அச் சமூகம் அரசு என வர்ணிக்கப்படலாம். அதில் நடத்தைகளை ஒழுங்கமைப்பதற்குரிய விதிகள் அல்லது கோட்பாடுகள் சட்டம் எனப்படலாம். அச் சட்டத்தினை நடைமுறைப்படுத்தும் நபர்களை அரசாங்கம் எனலாம். எனவே அரசு என்பதை மிகச் சுருக்கமாக கூறின் - “ஒழுங்கமைக்கப்பட்ட சமூகம்” என்று குறிப்பிடலாம்.

Remove ads

பொருளாதார நிர்வாக அமைப்புகள்

பண்டங்கள் மற்றும் சேவைகளின் உற்பத்தி,பகிர்வு,மற்றும் நுகர்வு போன்றவை ஒர் குறிப்பிட்ட சமூகத்தில் நிர்வகிக்கபடும் விதத்தினை பொருளாதார அமைப்புகள் (Economic systems) தீர்மானிக்கின்றன.

பொருளாதார அமைப்புக்களானது கிடைப்பருமையான வளங்களின் ஒதுக்கீடு, பாவனை தொடர்பில் மக்களையும் உற்பத்தி நிறுவனங்களையும் இணைக்கின்றது. ஒவ்வொரு சமூக அமைப்பும், நாடுகளும் சில அடிப்படை பொருளியல் பிரச்சனைகளான எதனை உற்பத்தி செய்தல்?,எவ்வாறு உற்பத்தி செய்தல்?, யாருக்காக உற்பத்தி செய்தல்?, எவ்வளவு உற்பத்தி செய்தல்? போன்றவற்றிக்கு விடையளித்தல் அவசியமாகின்றது. எல்லா சமூகங்களிலும்,நாடுகளிலும் இப்பிரச்சனை பொதுவானது எனினும் அந்தந்த நாடுகள்,சமூகங்களில் இவற்றிக்கு விடையளிப்பதற்காக கடைப்பிடிக்கும் வழிமுறைகள்,சட்டதிட்டங்கள் அதாவது பொருளாதார அமைப்புகள் வேறானவைகள் ஆகும்.

உலகில் பொதுவாக காணப்படுகின்ற பொருளியல் அமைப்புகளாவன:

மேலதிகத் தகவல்கள் சொல், விளக்கம் ...
Remove ads

வரைபடங்கள்

Thumb
நாடுகள் மற்றும் அவற்றின் அரசு அமைப்புகள்.
Thumb
பொருளியல் புலனாய்வு பிரிவின் 2016 ஆம் ஆண்டு ஜனநாயக குறியீடு [19]

முழுமையான மக்களாட்சி
  9–10
  8–9
குறை ஜனநாயக நாடுகள்
  7–8
  6–7
கலப்பு ஆட்சி
  5–6
  4–5
அதிகாரவய ஆட்சி
  3–4
  2–3
  1–2
  Not determined
Thumb
உலக நிர்வாக மட்டங்கள்
Thumb
நீல நிறத்தில் காட்டப்பட்டுள்ள நாடுகள் தேர்தல் ஜனநாயக நாடுகளைக் குறிக்கிறது. இது சுதந்திர இல்லம் என்ற அமைப்பு 2017 ஆம் ஆண்டு “உலகில் சுதந்திரம்” என்ற கணக்கீட்டில் எடுத்த புள்ளிவிபரமாகும்.[20] . இந்த ஆய்வை மேற்கொண்டது ஐக்கிய அமெரிக்காவைச் சேர்ந்த அரசு சாரா அமைப்பு ஆகும்.
  தேர்தல் ஜனநாயக நாடுகள்
  மற்றவை

[[File:Map of unitary and federal states.svg|left|600px|thumb|உலக வரைபடத்தில் கூட்டமைப்பு நாடுகளை (பச்சை) நிறத்தையும் ஐக்கிய நாடுகளை ஒருமுக அரசை (நீல) நிறத்தையும் குறிக்கிறது.


  ஒருமுக அரசு

{{legend|#346733;[[கூட்டமைப்பு}}]]

Thumb
உலகலாவிய நிர்வாகம் மற்றும் கலாச்சார ஒருமுகத்தன்மை அரசுகளைக் காட்டுகின்றன.

  சீனக்கோளம்
  இந்தியக் கோளம்
  மேற்கு கலாச்சாரக் கோளம்
  இசுலாமிய கலாச்சாரக் கோளம்
  இலத்தின் அமெரிக்க மற்றும் தெற்கு அமெரிக்க கலாச்சார கோளம்
  கிழக்கு ஐரோப்பிய கலாச்சார கோளம்
  ஆப்ரிக்க கலாச்சார கோளம்
Remove ads

குறிப்பு

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads