அரமேயம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
அரமேயம் (Aramaic;[1] אַרָמָיָא Arāmāyā, Classical Syriac: ܐܪܡܝܐ, அரபி: آرامية) என்பது ஒரு மொழி அல்லது மொழிக்குடும்பம் ஆகும். இது ஆப்பிரிக்க-ஆசிய துணை பிரிவை சேர்ந்த செமித்திய மொழி ஆகும். குறிப்பாக இது கானானிய மொழிகளான எபிரேயம் பொனீசியம் போன்றவை அடங்கிய வடமேற்கு செமித்திய குடும்ப பிரிவாகும் அரமேய எழுத்துமுறை பரவலாக பல மொழிகளிலும் எபிரேயம் சிரிக் அரேபிய எழுத்து முறைகளில் எடுத்தாளப்படுகிறது. 3000 ஆண்டுகள் பழைமையான வரலாற்றை கொண்ட செமித்திய மொழியான அரமேயம் [2] பல இராச்சியங்களின் ஆட்சி மொழியாகவும் வழிபாட்டு மொழியாகவும் காணப்பட்டது. மத்திய கிழக்கில் இருந்த செமித்திய மக்களின் பேச்சு மொழியாகவும் அரமேயம் இருந்தது. வரலாற்றுரீதியாக அரமேயம் சிரியாவிலும் புறாத்து ஆற்றின் வடபகுதி பள்ளத்தாக்குகளிலும் இருந்த அரமேய பழங்குடிகளின் மொழி. கிமு 1000 ஆண்டுவாக்கில் அரமேயர்கள் தற்போதய மேற்கு சிரியா பகுதியில் பல அரசுக்களை கொண்டிருந்தனர். புது அசிரியன்கள் பேரரசின் (கிமு 911-615) தலைமையில் அரமேயம் முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் மெசபடோமியா, சிரியா முழுவதும் வளர்ந்தது. அரமேயத்தின் புகழ் அதிகளவில் இருந்தபோது தற்கால ஈராக், சிரியா, லெபனான், இசுரேல், பாலத்தீனப் பகுதிகள், சோர்டான், ஈரானின் வடமேற்கு, குவைத், வடக்கு அரேபியா, கிழக்கு அரேபியா, தென்கிழக்கு தென் மத்திய துருக்கியில் அரமேயத்தின் பல வடிவங்கள் பேசப்பட்டது[3].
தானியே, எஸ்ரா என்ற விவிலிய நூல்களின் மூல மொழியாகும். அரமேயம் இயேசுவின் தாய்மொழியாக கருதப்படுகிறது.[4][5][6] புது அரமேயம் இன்று பல மக்கட் கூட்டங்களாற் பேசப்படுகிறது. இவர்கள் சிதறி வாழ்கிறார்கள். முக்கியமாக அசிரியாவில் வாழ்ந்த அசிரியர்களால் பேசப்பட்டது. புது அசிரியன் அதிகாரிகளின் எழுத்தர்கள் அரமேயத்தை பயன்படுத்தினார்கள், அதனாலும் சில நிருவாக பயன்களாலும் அவர்களுக்கு பின் வந்த புது பாபிலோனிய இராச்சியத்தினரும் (கிமு 605-539) மற்றும் அகாமனிசியர்களும் (கிமு 539-323) அரமேயத்தை நிருவாகத்திலும் வணிகத்திலும் பயன்படுத்தினார்கள்.[7][8]
தரப்படுத்தப்பட்ட அரேமியத்தை (இது அகாமனிசியர் பேரரசின் அரேமியம் என்றும் அழைக்கப்படுகிறது) அகாமனிசியர்கள் வணிகத்தில் பயன்படுத்தினார்கள். அதிகாரபூர்வமற்றதாக இருந்தாலும் அனைவராலும் அகாமனிசியர் பகுதிகளில் வணிகத்துக்கு பயன்படுத்தும் மொழியாக அரேமியம் இருந்தது. அரேமயத்தின் நெடிய வரலாறும் பன்முகமும் பரவலாக பேசப்பட்டதும் பல வட்டார வழக்குகள் தோன்ற காரணமாயின. இந்த வட்டார வழக்குகள் ஒன்றுக்கொன்று தொடர்பில்லாமல் இருந்தன அவற்றில் பல தனி மொழிகளாக வளர்ச்சி கண்டன. எனவே அரமேயம் என்பது தனி ஒரு மொழியை மட்டும் குறிக்காது. எந்த இடத்தில் எவ்வளவு காலம் பேசப்படுகிறது என்பதை பொறுத்து அதில் மாற்றம் இருக்கும். அதிகமான மக்களால் பேசப்படும் கிழக்கு அரமேயமும் மான்டய்க்கம் தற்காலத்தைய வட ஈராக், வட கிழக்கு சிரியா, வடமேற்கு ஈரான், தென் கிழக்கு துருக்கி என்று குர்துகள் வசிக்கும் பகுதியிலேயே பேசப்படுகின்றன. அழியும் தருவாயிலுள்ள வட அரமேயம் சிறு குழுக்களால் வட சிரியாவிலும் இசுரேலிலும் பேசப்படுகின்றது.
சில அரமேய மொழிகள் சில குழுக்களால் புனிதம் வாய்ந்தவையாக கருதப்பட்டு மத சடங்குகளில் பயன்படுத்தப்படுகின்றன. மான்டய்க் அப்படிப்பட்ட மொழி ஆகும். வாழும் அரேமிய மொழியான இது மாண்டேயிசம் எனப்படும் இனக்குழுவின் மொழியாகவும் உள்ளது. சிரிஅக் என்பது சிரியக் கிறுத்துவம், கிழக்கு அசிரியன் திருச்சபை, அசிரியன் மரபுவழி திருச்சபை, அசிரியன் பெந்தகொசுத்தே திருச்சபை, பழமையான கிழக்கு அசிரியன் திருச்சபை, சிரியக் கத்தோலிக்க திருச்சபை, மாரோநைட் திருச்சபை, இந்திய புனிதர் தாமசின் கிறுத்துவ திருச்சபை போன்றவை திகமாக சிரியக் என்ற அரேமய மொழியை புனிதமாக கருதி மத சடங்குகளில் பயன்படுத்துகின்றன.[9]
Remove ads
அரமேயம் ஆப்பிரிக்க-ஆசிய மொழி குடும்பத்தை சேர்ந்த மொழியாகும். இக்குடும்பத்துட் காணப்படும் பல தரப்பட்ட மொழிகளில் அரமேயம் செமித்திய மொழிக் கூட்டத்தை சேர்ந்ததாகும். மேலும் கானானிய மொழிகள் அடங்கும். அரமேய மொழி வடமேற்கு செமித்திய மொழிகள் கூட்டத்தை சேர்ந்தது.
- செமிடிக் மொழிகளின் வகை
- செமிடிக் மொழிகளின் பொதுவான வகைப்படுத்தல்
- தெற்கு செமிடிக் மொழிகளின் பொதுவான வகைப்படுத்தல்
குறிப்பு 1: தெற்கு செமிடிக் மொழிகளின் வகைப்படுத்தல் தொடர்பாகக் கருத்து வேறுபாடுகள் நிலவுகின்றன. முதன்மையான இரண்டு வகைகளும், சிவப்பு கோடுகளால் காட்டப்பட்டுள்ளன. பின்வரும் படிமம், தெற்கு செமிடிக் மொழிகளின் வகைப்படுத்தலைக் காட்டுகின்றன. பிற விபரங்களுக்கு, அத்தலைப்புகளில் உள்ள கட்டுரைகளைக் காணவும்.
Remove ads
இம்மொழியின் வரலாறு, மூன்று பெரும் பிரிவுகளைக் கொண்டுள்ளது.
- பண்டைய அரமேயம் - 1100 BCE–200 CE
- விவிலிய அரமேயம் - டனாக்.
- இயேசு பேசிய அரமேயம்.
- இடைக்கால அரமேயம் - 200–1200
- சிரிய இலக்கியம்.
- தல்மூத் அரமேயம், தார்கும், மிட்ராஸ்.
- மன்டலிக் மொழி.
- தற்கால அரமேயம் - 1200 முதல் இன்று வரை
- பல தற்கால பிரதேச வழக்குகள்.
இவற்றையும் பார்க்க
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads