அரிசந்த் தாகூர்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

அரிசந்த் தாகூர் (Harichand Thakur) (Bengali: হরিচাঁদ ঠাকুর) (11 மார்ச் 1812 – 5 மார்ச் 1878), பிரித்தானிய இந்தியாவின் வங்காள மாகாணத்தில் வாழ்ந்த ஒடுக்கப்பட்ட நாமசூத்திரர் இந்து சமய மக்களின் சமூகத் தகுதியை மேம்படுத்தும் நோக்கில் இந்து சமயத்தின் வைணவத்தை அடிப்படையாகக் கொண்ட மாத்துவ மகாசங்கத்தை நிறுவினார்.[1]

வாழ்க்கை

வைணவ்க் குடும்பத்தில் 1812-ஆம் ஆண்டில் அரிசந்த் தாகூர் [2] தற்போதைய வங்காளதேசத்தின் கோபால்கஞ்ச் மாவட்டத்தில் உள்ள ஓரகண்டி எனும் ஊரில் தாகூர் சமூகத்தில் பிறந்தார்.[3]

ஆத்ம தர்சனம் பெற்ற அரிசந்த் தாகூர் தன்னை, ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்காக, பகவான் விஷ்ணுவின் அவதாரமாக அவதரித்தாக உணர்ந்து கொண்டார். [4]

அரிசந்த் தாகூர் இந்து சமயத்தின் வைணவ தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டு மாத்துவ மகாசங்கம் எனும் அமைப்பை நிறுவினார். இந்த அமைப்பில் வங்காள மாகாணத்தில் வாழ்ந்த தீண்டக்கதகாத மற்றும் ஒடுக்கப்பட்ட நாமசூத்திரர்கள் எனும் சமூகத்தினர் சேர்ந்தனர்.[2][5] மாத்துவ மகாசங்கம் இந்து சமூகத்தில் சாதிய ஒடுக்குமுறையை எதிர்த்ததுடன், ஒடுக்கப்பட்ட மக்களின் கல்வி மற்றும் சமூக முன்னேற்றத்திற்கு வழிவகுத்தது. இதனால் பிற ஒடுக்கப்பட்ட சமூகத்தினரும் அரிசந்த் தாகூர் நிறுவிய மாத்துவ மகாசங்கத்தில் இணைந்தனர். [6]

அரிசந்த் தாகூரைப் பின்பற்றும் சமூகத்தினர் அவரை கடவுளாகவே பார்த்தனர். [7][8]அரிசந்த் தாகூர் - ஜெகத் மாதா சாந்தி தேவி தம்பதியருக்கு இரண்டு மகன்கள் இருந்தனர். தாகூர் 1878-இல் பரித்பூர் மாவட்டத்தில் மறைந்தார்.

Remove ads

மரபுரிமைப் பேறு

அரிசந்த் தாகூரின் மறைவிற்குப் பின்னர், அவரது மகன்களில் ஒருவரான குருசந்த் தாகூர், ஒடுக்கப்பட்ட நாமசூத்திரர் மக்களின் கல்வி வளர்ச்சிக்காக பல கல்வி நிறுவனங்களை நிறுவினார்.[9][10]வரலாற்று ஆசிரியர் சேகர் பன்தோபாத்தியாவின் கூற்றுபடி, குருசந்த் தலைமையிலான நாமசூத்திரர்களின் மாத்துவ மகாசங்கம், 1872-இல் சாதிய எதிர்ப்பு இயக்கத்துடன் தொடர்புடையது என்பதால், அதன் கோட்பாட்டு ஒத்திசைவு மற்றும் நிறுவனம் உந்துதலை அடைந்தது.[3]இந்து சமயக் கருத்துகள் கலந்த சாதிய வேறுபாடுகளை நீக்கும் தாகூர், தலித் இலக்கியங்களைப் படைத்ததுடன், நாமசூத்திரர் சமூகத்தில் மாத்துவ பூசாரிகளையும் உருவாக்கினார். [6]

Remove ads

இதனையும் காண்க

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads