வந்தியத் தேவன் (கதைமாந்தர்)

பொன்னியின் செல்வனில் வரும் கதாபாத்திரம் From Wikipedia, the free encyclopedia

வந்தியத் தேவன் (கதைமாந்தர்)
Remove ads

வந்தியத் தேவன் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் புதினத்தில் வருகின்ற வாணர்குல இளவரசன் ஆவார். வரலாற்றில் புனைவுடன் இணைத்து கதாபாத்திரமாக வடிவமைத்துள்ளார் கல்கி.

விரைவான உண்மைகள் வந்தியத் தேவன், உருவாக்கியவர் ...
Remove ads

கதாபாத்திரத்தின் இயல்பு

வந்தியத்தேவன் கதாபாத்திரத்தினை வீரம் மிகுந்தவனாகவும், முன்யோசனையின்றிச் செயலில் இறங்குபவனாகவும், குந்தவை மீதான காதலில் இன்புறுபவனாகவும் கல்கி வடிவமைத்துள்ளார்.

ஆதித்த கரிகாலனின் நண்பர்களில் ஒருவனாகவும் தூதுவனாக வந்தியத்தேவன் குந்தவையை சந்தித்து தன்பணி முடிவடைந்ததைத் தெரிவிக்க பழையாறைக்குச் செல்கிறான். பழையாறைக்கு செம்பியன் மாதேவியை காண செல்லும் மதுராந்தகத் தேவனை ஏமாற்றி, நிமித்தக்காரன் போல மாளிகைக்குள் நுழைகிறான். குந்தவையைக் காண வந்தியத்தேவன் முயலும் போது, பினாகபாணி பழுவூர் வீரர்களுடன் வந்து வந்தியத்தேவனை ஒற்றன் என்று கூறி கைது செய்யக் கூறுகிறான். அந்த வேளையில் ஆழ்வாா்க்கடியான் எனப்படும் திருமலையப்பன் வந்தியத் தேவனை நிமித்தகாரன் என்று ஊரார் நம்பும்படி செய்து குந்தவையை சந்திக்க வைக்கிறான்.

ஈழத்திற்கு சென்று இளவரசரை சந்தித்தது, பின் கப்பலில் ரவிதாசனிடம் மாட்டிக் கொண்டது, தன்னை காப்பாற்ற வந்த இளவரசா் அருள்மொழி வா்மரும் தானும் கடலில் சுழிகாற்றில் மாட்டிக் கொண்டது என்று அனைத்தினையும் வந்தியத்தேவன் குந்தவை தேவியிடம் கூறுகிறான். குந்தவையின் கட்டளைப்படியே, இளவரசரை சூடாமணி விகாரத்தில் சேந்தன் அமுதனும் சென்றிருப்பதை தெரிவிக்கிறான். இதற்குள் இளவரசர் இறந்துவிட்டதாக வதந்தி பரவி மக்கள் பழையாறை அரண்மனையில் கூடுகிறார்கள். அவர்களை சமாதானம் செய்யும் பொருட்டு மீண்டும் நிமித்தகாரன் போல நடிக்கிறான் வந்தியத்தேவன். அதைக் கண்ட பினாகபாணி வந்தியத்தேவனை நந்தினியின் ஒற்றன் என்கிறான். அதனால் கோபமடைந்த வந்தியத்தேவன் பினாகபாணியுடன் சண்டையிடுகிறான். அந்நேரத்தில் பழையாறைக்கு வருகைதரும் அநிருத்தர் தன் காவலர்களை விட்டு பினாகபாணியையும், வந்தியத்தேவனையும் சிறைபிடிக்கிறார். பின்பு குந்தவையுடன் பேசி, காஞ்சிக்கு சென்று ஆதித்த கரிகாலனுக்கு பாதுகாப்பாக இருக்க வந்தியத்தேவனை அனுப்ப திட்டமிடுகிறார். வந்தியத்தேவனுடன் திருமலையப்பனையும் உடன் அனுப்புகிறார்.

வந்தியத்தேவன் திருமலைக்காக காத்திருக்கும்போது, வானதி தேவி பல்லக்கில் செல்வதை காண்கிறான். திருமலை தன்னிடம் தேவையில்லாத காரியங்களில் ஈடுபட வேண்டாம் என்று அறிவுறுத்தியிருந்த காரணத்தால் வானதிதேவியை கண்டுகொள்ளாமல் குடந்தை சோதிடரிடம் செல்கிறான் வந்தியத்தேவன். அங்கு வந்தியத்தேவனைத் தொடர்ந்து வந்த வானதிதேவி இளவரசர் நாகைப்பட்டிணத்தில் இருப்பதை வந்தியத்தேவன் மூலம் அறிகிறார். குடந்தை சோதிடர் வீட்டிலிருந்து சென்ற வானதியை சில காளாமுக சைவா்கள் பிடித்துக் கொண்டார்கள்.


Remove ads

திரைப்படம்

மணிரத்னம் இயக்கத்தில் மதராசு தாக்கீசு, லைக்கா தயாரிப்பகம் தயாரிப்பில் 2022 இல் வெளிவந்த பொன்னியின் செல்வன் 1 திரைப்படத்திலும், 2023 இல் வெளிவந்த பொன்னியின் செல்வன் 2 திரைப்படத்திலும் வந்தியத்தேவன் கதாப்பாத்திரத்தில் கார்த்திக் நடித்திருந்தார். [1]

இவற்றையும் பார்க்கவும்

ஆதாரங்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads