அர்காங்கெல்சுக் மாகாணம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
அர்காங்கெல்சுக் மாகாணம் (Arkhangelsk Oblast, உருசியம்: Арха́нгельская о́бласть, அர்காங்கெல்சுக்யா ஓபிலாஸ்து) என்பது உருசியாவின் நடுவண் அலகு ஆகும். இம்மாகாணம் ஆர்க்டிக் தீவுக்கூட்டங்களான பிரான்சு யோசெப் நிலம், நோவயா செம்லியா, மற்றும் வெள்ளைக் கடலில் சொலொவெத்சுகி தீவுகளையும், நெனெஸ்தியா தன்னாட்சி வட்டாரத்தையும் உள்ளடக்கியது.

அர்காங்கெல்சுக் மாகாணம் நெனெஸ்தியா தன்னாட்சி வட்டாரத்தின் நிருவாகத்தையும் கவனிக்கிறது. செனஸ்தியா உபட அர்காங்கெல்சுக் மாகாணத்தின் பரப்பளவு 587,400 கிமீ2 ஆகும். 2010 கணக்கெடுப்பின் படி, இதன் மக்கள்தொகை 1,227,626 ஆகும்.[8]
இம்மாகாணத்தின் தலைநகர் அர்காங்கெல்சுக் ஆகும். இதன் மக்கள்தொகை 348,716 (2010).[8] இதன் இரண்டாவது பெரிய நகரம் செவெரோத்வின்சுக் ஆகும். இங்கு உருசியக் கடற்படையின் முக்கிய கப்பல் கட்டுமிடம் அமைந்துள்ளது. இம்மாகாணத்தைச் சேர்ந்த சொலொவெத்சுகி தீவுகள் உலகப் பாரம்பரியக் களங்களில் ஒன்றாகும்.
Remove ads
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads