அறம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
அறம் (ⓘ) அல்லது ஒழுக்கநெறி (Morality) என்பது ஒருவர் சமூகத்தில் எவ்வாறு நடக்க வேண்டும் என்பது தொடர்பான பார்வைகளை குறிக்கிறது. இதை நல்லவை, தீயவை என்பன தொடர்பில் ஒரு சமூகத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்ட நடத்தைகளின் தொகுப்பு எனலாம். ஒழுக்கநெறிகள் எல்லாச் சமுதாயங்களிலுமே ஒன்றுபோல இருப்பதில்லை. காலம், நம்பிக்கைகள், பண்பாடு என்பவற்றைப் பொறுத்து இவை வேறுபடுகின்றன. ஒழுக்கநெறிகள், சமூகம், மெய்யியல், சமயம், தனிமனிதரின் மனசாட்சி போன்றவற்றால் வரையறுக்கப்படுகின்றன. 'அறம்' என்பதே தமிழ் சொல் ஆகும். ஆனால், இன்றைய நிலையில் 'அறம்' சொல்லுக்கு மாற்றாக பிறமொழி சொல்லான 'நீதி' என்றச் சொல் பேச்சு வழக்கிலும், எழுத்து வழக்கிலும் பயன்படுத்தப்படுகிறது.
அற முறைமையில் செயற்படும் போது தனியன்கள் எதிர்பார்க்கக் கூடிய வகையிலும், ஒத்திசைவாகவும், முரண்பாடுகளை குறைக்கும் வண்ணமும் செயற்படுவர் என்பது எதிர்பாப்பு ஆகும்.[1] நெடுங்காலமாக அறம் மெய்யியல் நோக்கில், சமய நோக்கில் ஆயப்பட்டு வந்துள்ளது. அண்மைக்காலத்தில் அறம் அறிவியல் வழிமுறைகளைப் பின்பற்றியும் ஆயப்படுகிறது.
நெறி சார்ந்ததும், உலகம் தழுவியதுமான பொருளில், ஒழுக்கநெறி என்பது, குறிப்பிட்ட சூழ்நிலைகளில், ஒவ்வொருவரும் கடைப்பிடிக்கவேண்டிய இலட்சிய நடத்தைகளின் தொகுப்பைக் குறிக்கிறது. இவ்வாறான "விதிமுறை" சார்ந்த ஒழுக்கநெறிகளின் அடிப்படையிலேயே "கொலை ஒழுக்கநெறிக்கு மாறானது" போன்ற முடிவுகள் மேற்கொள்ளப்படுகின்றன.
Remove ads
இவற்றையும் பார்க்க

விக்கிமேற்கோள் பகுதியில், இது தொடர்புடையவைகளைக் காண்க: அறம்
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads