அலவாய்ப்பட்டி பாலசுப்ரமணியசுவாமி திருக்கோயில், நாமக்கல்
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள முருகன் கோயில் From Wikipedia, the free encyclopedia
Remove ads
அலவாய்மலை சுப்பராயர் கோயில் அல்லது அலவாய்ப்பட்டி பாலசுப்ரமணியசுவாமி திருக்கோயில் என்ற முருகன் கோயில், நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் அலவாய்பட்டி என்னும் ஊரில் அமைந்துள்ளது.
Remove ads
தல வரலாறு
அளவாய் மலை எனப்படும் உலைவாய்மலையான இங்கு சித்தர் மலை என்ற பகுதியில் அகத்திய முனிவரின் சீடர்களான சித்தர்கள் பலர் தங்கி பொன்னுலை வைத்து ரசவாதம் மூலமாக பொன் செய்து சேர்த்து வைத்தனர். அதை பழனி முருகப்பெருமான் கண்ணுற்று சித்தர்கள் பொன் செய்யும் வேலையில் இருந்து அவர்களை தடுத்தாட் கொள்ள விரும்பி திருவிளையாடல் செய்ய விரும்பினார். (பாலதண்டாயுதபாணியாக இறைவன் வந்து நின்ற இடம் மலை உச்சியாக இருப்பினும் பிற்காலத்தில் பொன்னி என்ற கர்ப்பிணி பெண்ணுக்கு அருள் புரிய உச்சி மலையில் இருந்து இறங்கி பாதி வழியில் குடிகொண்ட இடமே நடுமலை சுப்பிராயர் கோவில் ஆகும்.இங்கே பல சிறப்பு மிக்க தீர்த்தங்கள் உள்ளன.) பிறகு சித்தர்களிடம் சென்று ஆடுமேய்க்கும் இளைஞனைப் போன்ற வடிவத்தில் சீடனாக சேர்ந்து ஒரு நாள் அந்த பொன் மலையை தூக்கிக் கொண்டு ஓட்டம் பிடித்தார்.[சான்று தேவை] அதை தற்போது வையப்பமலை என்ற இடத்தில் வைத்தார் என்பது புராணவரலாறு ஆகும். பிற்காலத்தில் இங்கு கொங்கண சித்தர் வந்து தவம் புரிந்ததால், இது கொங்கணகிரி எனவும் வழங்கப்படுகிறது. உலைவாய் மலை அல்லது உலைவாய்கிரி எனப்படும் இந்த மலை பிற்காலத்தில் பேச்சு வழக்கில் அலைவாய் மலை என்று மருவி வழங்கப்படுகிறது.[சான்று தேவை] இந்த மலையினில் ஆங்காங்கே சித்தர்கள் தங்கி பல சித்துக்கள் செய்து வந்துள்ளனர். அவற்றில் ஒருவரான சுரங்க வழி சித்தர் குகை மலையின் மேற்கு பகுதியில் உள்ளது. சித்தர் மலை என்ற நடுப்பகுதியில் காகபுஜண்டர் மற்றும் பல சித்தர்கள் தங்கி வாழ்ந்துள்ளனர். அங்கே ஒரு நீர் சுனையும் குகையும் சித்தேஸ்வரர் கோவிலும் அமைந்துள்ளது.
Remove ads
திருவிழா
இக்கோவிலில் ஒவ்வோர் ஆண்டும் பங்குனி மாதம் பங்குனி உத்திரத் தேர் திருவிழா வெகுசிறப்பாக நடைபெற்று வருகின்றது. மேலும் சித்ரா பவுர்ணமி, வைகாசி விசாகம், தலை ஆடி, ஆடி 18, ஆவணி அவிட்டம், ஆடிவெள்ளிகள், விநாயக சதுர்த்தி, நவராத்திரி, சரஸ்வதி பூஜை, தீபாவளி, சூரசம்ஹாரம், கல்யாண உற்சவம், கார்த்திகை தீபம், மார்கழி மாத பூஜை, ஆங்கில புத்தாண்டு, தைப்பொங்கல், தைப்பூசம், சிவராத்திரி, கிருத்திகை, அமாவாசை, சஷ்டி ஆகிய நாட்களில் உற்சவம் நடக்கிறது. ஆண்டு முழுவதும் முறைப்படி பற்பல உற்சவங்கள் நடக்கிறது. தமிழ்ப் புத்தாண்டு விழாவின் போது, மிகவும் சிறப்பான உற்சவமாக கொண்டாடுகின்றனர்.
Remove ads
திறக்கும் நேரம்
காலை 6 மணி முதல் 12.30 மணி வரை,மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும். விசேஷ நாட்களில் 9 மணி வரை நடை திறந்திருக்கும்.
வெளி இணைப்புகள்
- [ http://temple.dinamalar.com/New.php?id=1493 கோயில் பற்றி தினமலர் நாளிதழில்]
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads