வைகாசி விசாகம்
முருகக் கடவுள் அவதரித்த நாள் From Wikipedia, the free encyclopedia
Remove ads
வைகாசி விசாகம் என்பது முருகக் கடவுள் அவதரித்தத் திருநாளாகும். வைகாசித் திங்களில் வரும் விசாக நாள் இதுவாகும். விசாகம் ஆறு நட்சத்திரங்கள் ஒருங்கு கூடியதொன்று. இதனால் முருகனும் ஆறு முகங்களோடு திகழ்பவர் என்பது நம்பிக்கை. இந்நாள் சோதி நாள் எனவும் அழைக்கப்படுவதுண்டு. உயிர்களுக்கு நேரும் இன்னலை நீக்கும் பொருட்டு சிவபெருமான் தனது ஐந்து முகங்கள் மற்றும் எவரும் காணாத ஆறாவது முகத்தின் நெற்றிக்கண்களிலிருந்து திருவிளையாடலாய் ஆறு குழந்தைகளை நெருப்பாக இந்நாளில் படைத்தார். அந்த ஆறுகுழந்தைகளே பின்னாளில் உமையம்மையின் அணைப்பால் ஒன்றாகி முருகன் எனப் பெயர் பெற்றது. மக்கள், விலங்குகள், தாவரங்கள் எல்லாம் ஓருயிராகி இணைக்கப்பட்டிருக்கும் உண்மையை விளக்குதலே இந்நாளின் கருத்தாகும். இதனால் சைவர்கள் இந்நாளில் நோன்பிருத்து கோவில்களில் சிறப்பாகக் கொண்டாடுவர்.
![]() | இக்கட்டுரையைச் சரிபார்ப்பதற்காக மேலதிக மேற்கோள்கள் தேவைப்படுகின்றன. |
புத்த பெருமான் பிறந்ததும் ஞானம் பெற்றதும் இந்த வைகாசி விசாகத்திலேயே ஆகும். இந்நாளிலேயே நம்மாழ்வாரும் பிறந்தார்.
Remove ads
இவற்றையும் காண்க
* சைவ விழாக்களின் பட்டியல்
|
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads