அலுமினியம் நைட்ரேட்டு

From Wikipedia, the free encyclopedia

அலுமினியம் நைட்ரேட்டு
Remove ads

அலுமினியம் நைட்ரேட்டு (Aluminium nitrate) என்பது Al(NO3)3 என்ற மூலக்கூறு வாய்பாட்டைக் கொண்ட சேர்மமாகும். இது அலுமினியமும் நைட்ரிக் காடியும் சேர்ந்த ஓர் அலுமினிய உப்பு. பொதுவாக, இது படிக நீரேறியாகவும், பரவலாக அலுமினியம் நைட்ரேட்டு நோனாஐதரேட்டு (Al(NO3)3·9H2O) ஆகவும் காணப்படுகிறது.

விரைவான உண்மைகள் பெயர்கள், இனங்காட்டிகள் ...
Remove ads

தயாரிப்பு

வினை நடைபெறும் போது, அலுமினியம் வினை முடக்கும் அடுக்காக உருவாவதால் இதை நைட்ரிக் காடியுடன் சேர்த்து எளிதாக அலுமினியம் நைட்ரேட்டு தயாரிக்க இயல்வதில்லை.

எனவே நைட்ரிக் காடியை அலுமினியம் முக்குளோரைடுடன் சேர்த்து வினையை நிகழ்த்துகிறார்கள். நைட்ரோசில் குளோரைடு உடன் விளைப் பொருளாக உருவாகி கரைசலில் இருந்து குமிழ்களாக வெளியேறுகிறது.

இவ்வாறே காரீய நைட்ரேட்டு கரைசலை அலுமினியம் சல்பேட்டு கரைசலுடன் சேர்த்து அலுமினியம் நைட்ரேட்டு ஒன்பதாம் நீரேறியையும் தயாரிக்க இயலும். கரையாத காரீய சல்பேட்டு வீழ்படிவு கரைசலில் இருந்து பிரிக்கப்பட்டவுடன் அலுமினியம் நைட்ரேட்டு கரைசல் எஞ்சுகிறது.

அலுமினியம் சல்பேட்டு கரைசலுடன் கால்சியம் நைட்ரேட்டு கரைசலை கலந்தும் அலுமினியம் நைட்ரேட்டு ஒன்பதாம் நீரேறியைத் தயாரிக்க முடியும். கரையாத கால்சியம் சல்பேட்டு வீழ்படிவு கரைசலில் இருந்து பிரிக்கப்பட்டவுடன் படிகமாக்கல் முறையில் அலுமினியம் நைட்ரேட்டு ஒன்பதாம் நீரேறியை தூய்மைப் படுத்திக் கொள்ளலாம்.

பிற நேர்மின் அயனிகளான பேரியம், துரந்தியம், வெள்ளி போன்ற தனிமங்களும் அலுமினியம் நைட்ரேட்டு ஒன்பதாம் நீரேறியைத் தயாரிக்கப் பயன்படுத்துகிறார்கள். ஏனெனில், அவற்றின் சல்பேட்டு உப்புகளும் கரைவதில்லை.

Remove ads

பயன்கள்

அலுமினியம் நைட்ரேட்டு ஒரு வலிமையான ஆக்சிசனேற்றியாகும். தோல் பதனிடுதல், நாற்றம் நீக்குதல், அரிப்பி ஒடுக்குதல், யுரேனியம் பிரித்தெடுத்தல், பெட்ரோலிய சுத்திகரிப்பு மற்றும் நைட்ரசனேற்றி என பல்வேறு வகைகளில் இது பயன்படுகிறது.

அலுமினியம் நைட்ரேட்டு ஒன்பதாம் நீரேறி தவிர மற்ற அலுமினியம் நைட்ரேட்டின் நீரேறிகளும் பல பயன்களைத் தருகின்றன. இவற்றின் உப்புகள் அலுமினா தயாரிக்கப் பயன்படுகின்றன. காப்பிடும் காகிதம், எதிர்முனைக் கதிர்க்குழாயில் சூடேற்றும் மூலகம் மற்றும் மின்மாற்று உள்ளகங்களின் மேல்தகடுகள் தயாரிக்க அலுமினா உதவுகிறது. இவற்றின் நீரேறி உப்புகள் ஆக்டினைடு தனிமங்கள் பிரித்தெடுப்பதிலும் பயன்படுகின்றன.

ஆய்வகங்களிலும் வகுப்பறைகளிலும் பின்வரும் வேதிவினை நிகழ்த்த அலுமினியம் நைட்ரேட்டு பயன்படுகிறது.

Al(NO3)3 + 3NaOH → Al(OH)3 + 3NaNO3
Remove ads

மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads