அலெக்சாண்டர் ஆமில்டன்

From Wikipedia, the free encyclopedia

அலெக்சாண்டர் ஆமில்டன்
Remove ads

அலெக்சாண்டர் ஆமில்டன் (Alexander Hamilton, சனவரி 11, 1755 அல்லது 1757 – சூலை 12, 1804) ஐக்கிய அமெரிக்காவின் நிறுவனத் தந்தையர்களில்,[1] ஒருவராகவும் தளபதி வாசிங்டனுக்கு முதன்மை அலுவலராகவும் அரசியலமைப்பை ஊக்குவித்த மற்றும் தெளிவுபடுத்தக்கூடிய மிகவும் செல்வாக்குள்ளவர்களில் ஒருவருமாகவும் இருந்தவர். மேலும் நாட்டின் நிதி முறைமையை நிறுவியவரும் முதல் அமெரிக்க அரசியல் கட்சியை தோற்றுவித்தவரும் இவரே.

விரைவான உண்மைகள் அலெக்சாண்டர் ஹாமில்டன், முதல் நிதி அமைச்சர் ...

முதல் கருவூலச் செயலராக (அமெரிக்க நிதி அமைச்சர்) பொறுப்பேற்ற ஆமில்டன் சியார்ச் வாசிங்டன் நிர்வாகத்தின் பொருளாதாரக் கொள்கைகளை வடித்ததில் முதன்மைப் பங்காற்றினார். குறிப்பாக மாநிலங்களின் கடன்களை தீர்க்க கூட்டரசின் உதவி, தேசிய வங்கி உருவாக்கம், வரிவிதிப்பு முறைமைகள், பிரித்தானியாவுடன் நட்பான வணிக உறவு என்பன இவரது முக்கிய பங்களிப்புகளாகும். இவருடன் ஒத்தக் கருத்துடையோருடன் உருவான பெடரலிஸ்ட்டு கட்சிக்குத் தலைவராகவும் விளங்கினார். இவரது கருத்துக்களை தாமஸ் ஜெஃவ்வர்சன் மற்றும் ஜேம்ஸ் மாடிசன் தலைமையேற்ற மக்களாட்சி-குடியரசுக் கட்சி எதிர்த்து வந்தது.

Remove ads

மேற்சான்றுகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads