அவசரக் கல்யாணம்

1972 தமிழ்த் திரைப்படம் From Wikipedia, the free encyclopedia

அவசரக் கல்யாணம்
Remove ads

அவசரக் கல்யாணம் (Avasara Kalyanam) என்பது 1972 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ் நகைச்சுவைத் திரைப்படமாகும். சுபலட்சுமி மூவிஸ் தயாரித்த இப்படத்தை வி. டி. தியாகராஜன் இயக்கினார்.[1] படத்தின் திரைக்கதையை பால முருகன் எழுதினார். இத்திரைப்படத்தில் ஜெய்சங்கர், நாகேஷ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடத்தனர். வாணிஸ்ரீ ரமா பிரபா, வி. கே. ராமசாமி ஆகியோர் துணை வேடங்களில் நடித்தனர்.[2] இது 1972 சூன் 29 அன்று வெளியானது.[3]

விரைவான உண்மைகள் அவசரக் கல்யாணம், இயக்கம் ...
Remove ads

கதை

நண்பர்களான சேகரும் ராகுவும் வேலை தேடி சென்னை வருகின்றனர். ஆனால் வந்ததும் பணத்தை பறிகொடுக்கின்றனர். ராகு பணக்காரப் பெண்ணான கமலாவிடம் பணக்காரனாக நடித்து ஏமாற்றி திருமணம் செய்து கொள்கிறான். சேகர் ராகுவின் மனைவியிடம் உண்மையைச் சொல்கிறான். இதனால் முதலிரவு அன்றே ரகு வெளியேற்றப்படுகிறான். இதனால் ராகுவுக்கு சேகர் மீது கோபம் ஏற்படுகிறது. இதற்கிடையில் வழக்கறிஞரான வசந்தியை சேகர் காதலிக்கிறான். சேகரைப் பழிவாங்க காத்திருந்த ரகு சேகருக்கு ஏற்பனவே திருமணமாகிவிட்டதாக வசந்தியிடம் சொல்கிறான். இதனால் வசந்தி சேகரைப் பிரிகிறாள். இந்த இரு இணையரும் மீண்டும் எப்படி இணைகின்றனர் என்பதே கதையாகும்.

Remove ads

நடிப்பு

இசை

திரைப்படத்திற்கு டி. ஆர். பாப்பா இசையமைத்துள்ளார், பாடல் வரிகளை கண்ணதாசன் எழுதியுள்ளார்.[4]

மேலதிகத் தகவல்கள் பாடல், பாடகர் ...

வெளியீடு

இப்படம் 1972 சூன் 29 அன்று வெளியானது. படத்திற்கு வித்தியாசமாக "அழகான காதல் காட்சிகள் உண்டு. அசிங்கத்தைக் காண மாட்டீர்கள்! சோகக் காட்சிகள் உண்டு. கண்ணீர் விடமாட்டார்கள்! திடீரென்று பேர் வரும். திடுக்கிட மாட்டீர்கள்! சண்டைக் காட்சிகளும் உண்டு. அதிர்ச்சி அடைய மாடீர்கள்" என்று விளம்பரப்படுத்தினர். அந்த ஆண்டு ஜ்சங்கர் நடித்து 15 படங்கள் வெளியாயின. அனைத்துப் படங்களும் வெற்றிபெற்றன.[5]

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads