வி. கே. ராமசாமி

பழம்பெரும் தமிழ்த் திரைப்பட நகைச்சுவை நடிகர் (1926–2002) From Wikipedia, the free encyclopedia

வி. கே. ராமசாமி
Remove ads

வி.க. இராமசாமி (V. K. Ramasamy, 1 சனவரி 1926 – 24 திசம்பர் 2002) ஒரு பழம்பெரும் தமிழ்த் திரைப்பட நகைச்சுவை நடிகர் ஆவார். 1950 மற்றும் 1990 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் நடிப்புலகில் இவர் உச்சத்தில் இருந்தார்[1]

விரைவான உண்மைகள் வி. கே. இராமசாமி, பிறப்பு ...

1940களில் பாய்ஸ் கம்பெனி என்று அறியப்பட்ட நாடக உலகிலிருந்து திரையுலகிற்கு வந்தடைந்தவர்களில் இவரும் ஒருவர். 1947ஆம் ஆண்டு வெளிவந்த நாம் இருவர் என்ற திரைப்படத்தில் தமது 21ஆம் அகவையில் 60 அகவை கிழவராக நடித்து அனைவரின் கவனத்தையும் பெற்றார். விகேஆர் என பரவலாக அறியப்பட்டார். புகழடைந்தாலும் முதுமை வேடங்களில் மட்டுமே நடிக்க வாய்ப்பு கிடைத்தது. ஐம்பது ஆண்டுகள் திரைவாழ்வில் 500இற்கும் மேற்பட்ட திரைப்படங்களில் துணைப் பாத்திரங்களில் நடித்துள்ளார்.

1960களிலும் 1970களிலும் முன்னணியில் இருந்த டி. ஆர். மகாலிங்கம், எம். ஜி. ஆர், சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன், எஸ். எஸ். ராஜேந்திரன், முத்துராமன், ஜெய்சங்கர், ரவிச்சந்திரன், ரஜினிகாந்த், கமலஹாசன் மற்றும் 90களின் முன்னணி தமிழ் நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார்.

இவருடைய வாக்குநடை, இவரை நகைச்சுவை வேடத்திலோ எதிர்மறை வேடத்திலோ சிறப்பாக நடிக்க வழி செய்தது. நகைச்சுவை நடிகை மனோரமாவுடன் இணைந்து இவர் பணிபுரிந்த திரைப்படங்கள் குறிப்பிடத்தக்கவை. பின்னாட்களில் 15 திரைப்படங்களைத் தயாரித்துள்ளார்.

இவர் நடித்த கடைசிப் திரைப்படம் டும் டும் டும் ஆகும்.

Remove ads

குடும்பம்

இவருக்கு நான்கு மகன்களும் மூன்று மகள்களும் உள்ளனர்.

விருதுகள்

தமிழக அரசின் கலைமாமணி விருது, 1970

நடித்த திரைப்படங்கள்

மேலதிகத் தகவல்கள் ஆண்டு, திரைப்படம் ...
Remove ads

மேற்கோள்கள்

உசாத்துணை

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads