அவந்திவர்மன்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
அவந்திவர்மன் ( Avantivarman ) என்பவன் உத்பால வம்சத்தை நிறுவிய ஒரு மன்னன். பொது ஊழி 855 முதல் 883 வரை காஷ்மீரை ஆண்ட இவன் அவந்திசுவாமி கோவிலைக் கட்டினான். ஐன்-இ-அக்பரியின் கூற்றுப்படி, அவந்திவர்மன் காஷ்மீரின் சாமர் ஆட்சியாளர்.
Remove ads
ஆட்சிக் காலம்
அவந்தி வர்மன் கார்கோடப் பேரரசை வீழ்த்தி [2] அதன் சிம்மாசனத்தின் கட்டுப்பாட்டைக் கைப்பற்றிய ஐந்து சகோதரர்களில் ஒருவரான உத்பாலபிதன் என்பவனின் பேரனாவான். உத்பாலனின் அமைச்சர் சூராவால் வளர்க்கப்பட்ட அவந்தி வர்மன் காஷ்மீரின் அரியணையில் ஏறி, உத்பால வம்சத்தை நிறுவி, கார்கோடர்களின் ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவந்தான். அவந்தி வர்மன் ஒரு பொறியாளரும் கட்டிடக் கலைஞருமான சுய்யா என்பவரை தனது பிரதமராக நியமித்தான். [3] இவனது நாற்பதாண்டு ஆட்சிக்காலத்தில் ஏராளமான உள்நாட்டுப் போர்களை சந்தித்ததால் பொருளாதாரத்தை மீட்டெடுக்க முடியாமல் நாடு மோசமாக பாதிக்கப்பட்டது. ஜுலம் ஆறின் வறட்சி காரணமாக சுய்யா அதன் போக்கை திசை திருப்பினார். [4]
Remove ads
கலையும் கட்டிடக்கலையும்
அவந்தி வர்மன் கலைகளின் புரவலராக இருந்தான். இவனது காலத்தில் "துவன்யலோகா" என்ற மிகவும் குறிப்பிடத்தக்க நூலின் ஆசிரியரும் அறிஞருமான அனந்தவர்தனன் என்பவர் இருந்தார். மேலும், இவன், அவந்திபூர் மற்றும் சுய்யாபூர் நகரங்களை நிறுவினான். இதற்கு தனது பிரதமர் சுய்யாவின் பெயரிடப்பட்டது. [4] விஷ்ணுவுக்கும் சிவனுக்கும் அர்ப்பணிக்கப்பட்ட இந்துக் கோவில்களையும் புத்த விகாரகங்களையும் கட்டினான். [5] அவந்திபூரில் முறையே சிவன் மற்றும் விஷ்ணுவுக்கு அர்ப்பணிக்கப்பட்ட அவந்தீசுவர் மற்றும் அவந்திசுவாமி கோயில்கள் இவன் கட்டியக் கோயில்களில் குறிப்பிடத்தக்கவை.[5] அவந்திவர்மனின் ஆட்சி காஷ்மீரில் சமசுகிருத கற்றலின் குறிப்பிடத்தக்க போட்டியைக் கண்டது. பேரழிவு தரும் வெள்ளத்திலிருந்து தனது இராச்சியத்தை காப்பாற்ற விட்டாஸ்டா ஆற்றில் ஒரு அணையைக் கட்டினான்.
இவனது ஆட்சிக் காலத்தில் எழுதப்பட்ட குறிப்பிடத்தக்க புத்தகங்களில் இரத்னாகரர் என்பவர் எழுதிய "ஹரவியஜா " என்ற நூலும், ஆனந்தவர்தனன் என்பவர் எழுதிய "துவன்யலோகா" ஆகியவை அடங்கும்.
Remove ads
இறப்பு
அவந்திவர்மன் பொ.ச. 883-ல் இறந்தான். இவனது மரணம் இவனது சந்ததியினரிடையே மற்றொரு உள்நாட்டுப் போரைத் தொடர்ந்தது. பொ.ச. 885இல் சங்கரவர்மன் அரியணையை இறுதியாக கைப்பற்றினான் அவன் பொ.ச. 902 வரை காஷ்மீரை ஆட்சி செய்தான். [3]
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads