உத்பால வம்சம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
உத்பால வம்சம் (Utpala dynasty) இந்தியாவின் காஷ்மீர் சமவெளியை கி பி 885 முதல் 1003 முடிய ஆண்ட இந்து சமயத்தினர் ஆவர். கி பி 855இல் கார்கோடப் பேரரசை வீழ்த்தி, அவந்திவர்மன் காஷ்மீரில் உத்பால வம்ச அரசை நிறுவினார்.[1][2] உத்பால பேரரசில் தற்கால காஷ்மீர் மற்றும் ஆப்கானித்தான் மற்றும் பாக்கித்தான் பகுதிகள் அடங்கியிருந்தன. உத்பால வம்ச மன்னர்களால் காஷ்மீரில் அவந்திபோரா, சோப்பூர் நகரங்கள் நிறுவப்பட்டன. மேலும், விஷ்ணுவுக்கும் சிவனுக்கும் அர்ப்பணிக்கப்பட்ட இந்துக் கோவில்களும் புத்த விகாரகங்களும் கட்டப்பட்டது. [3] அவந்திபூரில் முறையே சிவன் மற்றும் விஷ்ணுவுக்கு அர்ப்பணிக்கப்பட்ட அவந்தீசுவர் மற்றும் அவந்திசுவாமி கோயில்கள் குறிப்பிடத்தக்கவை.[3]
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads