அவந்திபோரா

From Wikipedia, the free encyclopedia

அவந்திபோராmap
Remove ads

அவந்திபோரா (Awantipora) அல்லது அவந்திபூர் [1] அல்லது அவாந்திபூர், [2] காஷ்மீரியில் ஊந்த்பூர் எனவும் அழைக்கப்படும் இது, இந்தியாவின் ஒன்றியப் பிரதேசமான ஜம்மு-காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் ஜீலம் ஆற்றங்கரையிலுள்ள ஒரு நகரமாகும். இது ஸ்ரீநகர் ஜம்மு தேசிய நெடுஞ்சாலையில் (இப்போது தேசிய நெடுஞ்சாலை 44 என அழைக்கப்படுகிறது) ஸ்ரீநகருக்கு தெற்கிலும், அனந்தநாக்கின் வடக்கிலும் உள்ளது. அவந்திபோராவுக்கு காஷ்மீர் மன்னர் அவந்திவர்மனின் பெயரிடப்பட்டது. மேலும் அவர் கட்டிய 9 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இரண்டு இந்துக் கோவில்களின் இடிபாடுகள் இன்றும் உள்ளன.

விரைவான உண்மைகள் அவந்திபோரா ஊந்த்பூர்அவந்திபூர், அவாந்திபூர்,, நாடு ...

அவந்திபோரா வட்டமானது புல்வாமா மாவட்டத்தின் துணைப்பிரிவாகும். [3] இது காஷ்மீரிலிருந்து 30 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. [4]

Remove ads

வரலாறு

உத்பால வம்சத்தின் முதல் மன்னராக இருந்த அவந்திவர்மனால் இந்த நகரம் நிறுவப்பட்டது என்றும் அவன் கி.பி 855 முதல் 883 வரை காஷ்மீரை ஆண்டதாகவும் கூறப்படுகிறது. [5] அவந்திவர்மன் அவந்திபோராவில் விஷ்ணுவுக்கு அர்ப்பணிக்கப்பட்ட "அவந்திசுவாமி கோயில் " என்று அழைக்கப்படும் ஒரு இந்துக் கோவிலைக் கட்டினான். தான் அரசனாவதற்கு முன்பு அவந்திபோராவில் "அவந்தீசுவரர்" என்று அழைக்கப்படும் இரண்டாவது இந்து ஆலயத்தை சிவனுக்கு அர்ப்பணித்தார். இரண்டு கோயில்களும் விசாலமான செவ்வக நடைபாதை முற்றங்களில் கட்டப்பட்டன. அவை பிற்காலத்தில் அழிவைச் சந்தித்தன. 20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் தொல்லியல் ஆய்வாளர் தயாராம் சகானி என்பவரால் இது கண்டுபிடிக்கப்பட்டது. அவந்திசுவாமி கோயில் 33 ° 55′24 ″ வடக்கிலும் 75 ° 00′46 ″ கிழக்காகவும், அவந்தீசிவரர் கோயில் 33 ° 55′41 ″ வடக்கிலும் 75 ° 00′16 ″ கிழக்கிலும் அமைந்துள்ளது. அவை இந்திய தொல்லியல் ஆய்வுத் துறையால் பாதுகாக்கப்பட்டு பராமரிக்கப்படுகின்றன.

Remove ads

புள்ளிவிவரங்கள்

2001 இந்திய மக்கள்தொகை கணக்கெடுப்புப்படி,[6] அவந்திபோராவில் 6,250 என்ற அளவில் மக்கள் தொகை இருந்தது. இதில் ஆண்களில் 54% பேரும் பெண்களில் 46%எனவும் உள்ளனர். 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, அவந்திபோராவின் சராசரி கல்வியறிவு விகிதம் 84.38% ஆகும். இது தேசிய சராசரியான 74% ஐ விட அதிகமாகும். ஆண்களின் கல்வியறிவு 91.84% ஆகவும், பெண் கல்வியறிவு 82.55% ஆகவும் 9% மக்கள் தொகையில் 6 வயதுக்குட்பட்டவர்கள்.

மேலதிகத் தகவல்கள் அவந்திபோராவில் சமயம் ...
Remove ads

மேலும் காண்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads