அவனியாபுரம் கல்யாண சுந்தரேசுவரர் கோயில்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
கல்யாண சுந்தரேஸ்வரர் கோயில் தமிழ்நாட்டில் மதுரை, அவனியாபுரம், மதுரை என்னுமிடத்தில் உள்ளது.
Remove ads
தல வரலாறு
இக்கோவிலில் கல்யாண சுந்தரேஸ்வரர் (செவ்வந்தீஸ்வரர் ) மூலவராகவும், பாலாம்பிகை தயாராகவும் அருள் பாலிக்கின்றனர். இத்தல விருட்சம் வில்வம் ஆகும். மலையத்துவச பாண்டியனின் மகளாக அவதரித்த மீனாட்சி தனது குழந்தைப் பருவத்தில் பிள்ளையார் பாளையம் என்று அழைக்கப்பட்ட இன்றைய அவனியாபுரத்தில் தோழியருடன் விளையாடி மகிழ்ந்தாள். தனது பருவ வயதில், சுந்தரேஸ்வரரை மணம் முடித்துச் செல்லும் போது தோழியர்கள் கேட்டுக் கொண்டதின் பேரில், மணக்கோலத்தில் கணவர் கல்யாண சுந்தரருடன் இத்தலத்தில் காட்சியளித்ததாக வரலாற்றுச் செய்திகள் கூறுகின்றன. இதுவே இத்தல வரலாறு ஆகும்.
Remove ads
தெய்வங்கள்
- விநாயகர்
- முருகன் உடன் வள்ளி, தெய்வானை
- ஐயப்பன்
- தட்சணாமூர்த்தி
- சண்டிகேஸ்வரர்
- விஷ்ணு துர்க்கை
- பைரவர்
- சரஸ்வதி
- பிரம்மா
- 63 நாயன்மார்கள்
- நவக்கிரகங்கள்
முக்கிய பண்டிகைகள்
இங்கு தமிழ் புத்தாண்டு, சித்திரா பௌர்ணமி, திருவாதிரை, ஆடிப்பெருக்கு ஆடி அமாவாசை, ஆருத்ரா தரிசனம்,சிவராத்திரி, நவராத்திரி, ஆங்கிலப் புத்தாண்டு, பிரதோஷம், வைகாசி விசாகம், தை அமாவாசை , விநாயகர் சதுர்த்தி, மாசி மகம், கார்த்திகை தீபம் போன்ற விழாக்கள் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads