இப்னு சீனா

இடைக்கால பாரசீக மருத்துவர், அறிவியல் விற்பன்னர் From Wikipedia, the free encyclopedia

இப்னு சீனா
Remove ads

இபின் சீனா (Ibn Sina) அல்லது அவிசென்னா (Avicenna) எனச் சுருக்கமாக அழைக்கப்படும் அபு அலி அல்-ஹுசெய்ன் இபின் அல்லா இபின் சீனா (கிபி 980 - கிபி 1037) பாரசீகத்தைச் சேர்ந்த, பல்துறை அறிவு கொண்டவரும், புகழ்பெற்ற மருத்துவரும், மெய்யியலாளரும் ஆவார். இவர் வானியல், வேதியியல், நிலவியல், ஏரணம், தொல்லுயிரியல், கணிதம், இயற்பியல், கவிதை, உளவியல், அறிவியல் போன்ற பல துறைகளிலும் வல்லுனராக இருந்ததுடன், ஒரு போர்வீரராகவும், அரசியலாளராகவும், ஆசிரியராகவும் இருந்தார்.

விரைவான உண்மைகள் பாரசீக அறிஞர், பெயர்: ...

இபின் சீனா, ஏறத்தாழ 450 நூல்களை எழுதியுள்ளார். இவற்றுள் 240 நூல்களே இப்போது கிடைக்கின்றன. இவற்றுள் 150 நூல்கள் மெய்யியல் சார்ந்தவை, 40 மருத்துவ நூல்கள்.

இவர் முன்னை நவீன மருத்துவத் தந்தையாகப் போற்றப்படுகிறார்.[3][4][5]. முக்கியமாக உடலியக்கவியல் ஆராய்ச்சியில் முறைப்படியான பரிசோதனைகளையும், அளவீடுகளையும் முதன்முறையாகப் பயன்படுத்தினார்.[6]. தொற்றுநோய்களைக் கண்டறிந்தும், அவை தொற்றும் முறைகளை வகைப்படுத்தியும், அவற்றைக் கட்டுபடுத்தும் முறைகளைக் கண்டறிந்தும் அக்கால மருத்துவத் துறைக்குப் பெரும் பங்களிப்புகளைச் செய்தார்.[7]

இவர் 370/980இல் புகாராவில் அவரது தாய் வீட்டுக்கு அருகில் இருந்த அஃபிஷானாவில் பிறந்தார். அவரது தாய்மொழி பாரசீகம். மருத்துவராகவும் மீஇயற்பியலாராகவும் விளங்கிய அவர் மாபெரும் பாரசீகச் சிந்தனையாளர் ஆவார். அவிசென்னாவின் பெயர் இரானிய மெய்யியலார் காலவரிசையில் முதலில் வைக்கப்பட்டிருந்தாலும் அண்மைய ஆய்வுகள், இவரதையொத்த அல்லது சற்றும் குறையாத அமைப்புடைய இசுமிலி மெய்யியல் அமைப்புகள் முன்பே நிலவியதைக் கண்டுபிடித்துள்ளன. இவர் பலதுறையறிஞர், அரசியலாளர், ஐரோப்பாவிலும் மத்திய கிழக்கிலும் [[இசுலாமியப் பொற்காலம் சார்ந்த மிகச்சிறந்த சிந்தனையாளராகவும் எழுத்தாளராகவும் மதிப்பிடப்பட்டவர்.[8]

மிகவும் பெயர்பெற்ற அவரது இரண்டு நூல்கள் பின்வருமாறு:

இது செந்தர மருத்துவப் பாடநூலாக பல இடைக்காலப் பல்கலைக் கழகங்களில் விளங்கியது.[12] அது 1650 வ்ரை பயன்பாட்டில் இருந்தது.[13] அவிசென்னாவின் ’மருத்துவ நெறிமுறைகள்’ நூல் 1973இல் நியூ யார்க்கில் மறுஅச்சடிக்கப்பட்டது.[14]

மருத்துவம், மெய்யியல் தவிர, அவிசென்னாவின் புலமைப்பரப்பில் இடைக்கால இசுலாமிய வானியலும் இடைக்கால இசுலாமிய வேதியியலும் இடைக்கால இசுலாமியப் புவியியலும் புவிப்பரப்பியலும் நிலவரையியலும் இடைக்கால இசுலாமிய உளவியலும் இடைக்கால இசுலாமிய இறையியலும் இடைக்கால இசுலாமிய மெய்யியலும் ஏரணவியலும் இடைக்கால இசுலாமியக் கணிதவியலும் இடைக்கால இசுலாமிய இயற்பியலும் இசுலாமிய இடைக்காலக் இசுலாமியக் கவிதையும் அடங்கும்.[15]

Remove ads

சூழ்நிலைகள்

இசுலாமியப் பொற்காலத்தே அவசென்னா ஏராளமான நூல்களை எழுதினார். இப்பணிக்காக கிரேக்க, உரோமானிய, பாரசீக, இந்திய நூல்களின் மொழிபெயர்ப்புகள் விரிவாக அலசப்பட்டன. அக்காலத்தே கிரேக்க, உரோமானியச் சிந்தனையி புலமைப்பரப்புகள், குறிப்பாக இடைநிலைப் பிளாட்டொனியமும்புதுப் பிளாட்டோனியமும் அரிசுட்டாட்டிலியமும் சார்ந்த பனுவல்கள் அல்-கிந்திச் சிந்தனைப் பள்ளியால் மொழிபெயர்க்கப்பட்டு அவற்றுக்கு இசுலாமிய அறிஞர்களால் உரைவிளக்கமும் மீளாக்கமும் கணிசமான புத்துருவாக்கங்களும் உருவாக்கப்பட்டன .இவர் பாரசீக, இந்திய வானியல், கணிதவியல், கோண அளவியல் மருத்துவம் சார்ந்த மரபுவழி அமைப்புகளை வளர்த்தெடுத்தனர்.[16]

இப்புலமைப் பின்னணியில் குர்ஆனும், ஹதீஸும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. மெய்யியலும் இறையியலும் மேலும் வளர்த்தெடுக்கப்பட்டன. இவை அவிசென்னாவாலும் அவரது எதிரிகளாலும் மேற்கொள்ளப்பட்டன. அவிசென்னா பால்க், குவாரழ்சுமி, இரே (இரான்), இசுஃபாகன், அமடான் கார்கான் போன்ற பல நூலகங்களை அணுகி, பல பனுவல்களைப் பார்வையிட முடிந்துள்ளது. 'Ahd with Bahmanyar’ போன்ற பல்வேறு நூல்கள் இவர் அக்காலத்தின் மிகப் பெரிய பேரறிஞர்களுடன் வாதிட்டதைக் குறிப்பிடுகின்றன.

Remove ads

வாழ்க்கை

இளமை

அவிசென்னாவின் இளமையைப் பற்றி அவரது மாணவர் ஜுழ்சானி எழுதிய தன்வரலற்றில் இருந்து மடுமே அறிய முடிகிறது. வேறு ஏதும் வாயில்கள் கிடைக்காதவரையில் அதில் எவ்வளவு உண்மை என்பதை மதிப்பிட இயலாது. அதில் அவர் தனது அறிவுக் கோட்பாட்டை கூறுகிறார். ஒவ்வொரு மாந்தனும் அறிவை அடைதலும் ஆசிரியர் இல்லாமலே அரிசுட்டாட்டிலிய அறிவியல் புலங்களைப் புரிதலும் இயலும் என்கிறார்.அதில் கூறப்படும் நிகழ்ச்சிகள் அரிசுட்டாட்டிலியப் படிமத்துக்கு நெருக்கமாக அமையும்படி நேர்செய்து காட்டப்படுகிறதா, மாறாக, பொருள்களைச் சரியான ஒழுங்குமுறையிலே, தான் ஆய்வதாக விளக்குகிறாரா என்ற கேள்வி இயல்பாகவே எழுகிறது. எனினும், மற்ற சான்றுகள் ஏதும் இல்லாதநிலையில் அதிலுள்ளவற்றை முகமதிப்புக்காக மட்டுமே கருதலாம்.[17]

Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads