அஸ்திரம் (தெய்வீக ஆயுதம்)

From Wikipedia, the free encyclopedia

Remove ads

அஸ்திரம்[1]', இந்து தொன்மவியலில் கூறப்படும் தெய்வீக ஆற்றல் கொண்ட ஆயுதம் ஆகும்.[2] [3] [4] குறிப்பிட்ட தெய்வஙகளுக்கான அஸ்திரங்கள் அதற்குரிய மந்திரங்களை மனதில் ஓதி வில் அல்லது கையால் கையாளப்படும் வாள், வேல் அல்லது ஈட்டி அல்லது கதாயுதம் போன்றவை ஆகும். [5][6]

இந்துக் கடவுளரின் புகழ்பெற்ற அஸ்திரங்களில் விஷ்ணுவுக்குரிய சக்கராயுதம், சிவ பெருமான் மற்றும் துர்க்கைக்குரிய திரிசூலம், முருகப் பெருமானுக்குரிய வேலாயுதம் மற்றும் இந்திரனுக்குரிய வஜ்ஜிராயுதம் ஆகும். தவம் இயற்றி பிரம்மா, சிவன், பார்வதி போன்ற கடவுளர்களிடமிருந்து கிடைக்கப் பெறும் அஸ்திரங்களில் முக்கியமானது பிரம்மாஸ்திரம், பாசுபத அஸ்திரம், நாகாஸ்திரம், கோடாரி, வருணாஸ்திரம் ஆகும்.

Remove ads

இதிகாசங்களில்

இராமாயணம் மற்றும் மகாபாரதம் ஆகிய காவியங்களில் தெய்வீக ஆயுதங்கள் குறித்து பேசுகின்றது. இராம-இராவணப் போரில் இராமர், இலக்குமணன், இராவணன், இந்திரஜித் மற்றும் குருச்சேத்திரப் போரில் பீஷ்மர், துரோணர், கர்ணன், அசுவத்தாமன் மற்றும் அருச்சுனன் ஆகியோர் தெய்வீக ஆற்றல் கொண்ட அஸ்திரங்களைக் கொண்டு போரிட்டனர். [7][8]

பாகவத புராணத்தில் கிருஷ்ணர் சக்கராயுதத்தைக் கொண்டு சிசுபாலனின் தலையை கொய்தார். மகாபாரதத்தில் அருச்சுனன் சிவ பெருமானை வேண்டி தவம் இயற்றி பாசுபத அஸ்திரம் பெற்றதை வன பருவத்தில் கூறப்பட்டுள்ளது.[9][10]

மேலும் அசுவத்தாமன் உரிய மந்திரம் ஓதி, ஒரு புல்லை பிரம்மாஸ்திரமாக பயன்படுத்தி உத்தரையின் கருவறையில் இருந்த குழந்தையை கொன்ற கதை மகாபாரதம் கூறுகிறது.

Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads