அஸ்மகம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
அஸ்மகம் (Assaka) (சமஸ்கிருதம்: अश्मक), பிந்தைய வேத கால பதினாறு மகாஜனபத நாடுகளில் ஒன்றாகும். விந்திய மலைத்தொடருக்கு தெற்கில், தென்னிந்தியாவில் அமைந்த மகாஜனபத நாடு அஸ்மகம் ஆகும்.


அஸ்மக நாடு கோதாவரி ஆற்றுக்கும், மஞ்சிரா ஆற்றுக்கும் இடைப்பட்ட, தற்கால தெலங்கானாவின் நிஜாமாபாத் மாவட்டம், அதிலாபாத் மாவட்டம் மற்றும் மகாராஷ்டிரம் மாநிலத்தின் நாந்தேட் மாவட்டம் மற்றும் யவத்மாள் மாவட்டம் ஆகிய பகுதிகளை கொண்டது.
பௌத்த நூலான மகாகோவிந்த சுத்தாந்தாவில் அஸ்மக நாட்டு ஆட்சியாளர் பிரம்மதத்தன், பொதாலி நகரத்தை தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்தார் என அறியப்படுகிறது.[1]
மகத நாட்டின் சிசுநாகர்களின் சமகாலத்தில், அஸ்மக நாட்டை ஆண்ட 25 ஆட்சியாளர்களைக் குறித்து மச்ச புராணத்தில் (ch.272) குறிப்பிடப்பட்டுள்ளது.[2]
பிற்காலத்தில் அஸ்மக நாட்டினர் தெற்கில் குடியேறி தற்கால மகாராஷ்டிரா மாநிலத்தில் இராஷ்டிரகூடர் பேரரசை நிறுவினர்.
Remove ads
இதனையும் காண்க
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads