அஸ்வகோசர்
2ஆம் நூற்றாண்டு பௌத்தக் கவி From Wikipedia, the free encyclopedia
Remove ads
அஸ்வகோசர் (Aśvaghoṣa) (தேவநாகரி: अश्वघोष) (கி பி 80 – 150)வட இந்தியாவின் சாகேதம் எனும் ஊரில், அந்தண குலத்தில் பிறந்த இந்தியத் தத்துவவாதியும், சமசுகிருத கவிஞரும், தருக்கவாதியும் ஆவார்.[1] இந்துவாகப் பிறந்து பின்னர் பௌத்த பிக்குவாக மாறியவர். குசானப் பேரரசர் கனிஷ்கரின் அரசவையில் அஷ்வகோசர் பௌத்த ஆன்மீகத் தலைவராக இருந்தவர்.[2]அஸ்வகோசர் மகாயான பௌத்தத்தை வளர்த்தவர்.
காளிதாசருக்கு முன்னர் சமசுகிருத மொழியின் முதல் நாடக ஆசிரியரும், மகா கவி எனப் போற்றப்படுபவர் அஷ்வகோசர் ஆகும். பௌத்த எழுத்தாளரான அஸ்வகோசரின் இலக்கியப் படைப்புகள் புத்தசரிதம், சௌந்தரானந்தா மற்றும் சூத்திர அலங்காரம் ஆகும்.[3] அஸ்வகோசர் காலத்திற்கு முன்னர் கலப்பட சமசுகிருத மொழியில் இருந்த பௌத்த இலக்கியங்களை, பௌத்த சமயத்திற்கு மாறிய அஸ்வகோசர், செம்மைப்படுத்தப்பட்ட சமசுகிருத மொழியில் மொழிபெயர்த்து எழுதினார்.[4]
Remove ads
பெயர்க்காரணம்
அஸ்வம் + கோஷம் = அஸ்வகோஷர் எனும் சமசுகிருத மொழிச் சொல்லிற்கு குதிரையின் சப்தம் என்று பொருளாகும்.
துறவு வாழ்க்கை
அஸ்வகோச சரித்தரம் எனும் நூலில் கூறியவாறு,[5][6], சமணர்களையும், பௌத்தர்களையும் தருக்கத்தில் வென்று விரட்டிய அஸ்வகோசருக்கு, பார்ஸ்வா எனும் பௌத்த ஞானி அஸ்வகோசருக்கு பௌத்த தத்துவங்களை உபதேசித்தார். பின்னர் பௌத்த சமயத்திற்கு மாறிய அஸ்வகோசர் வட இந்தியா முழுவதும் சுற்றிச் வந்து மகாயான பௌத்ததை வட இந்தியாவில் பரப்பியவர். .
படைப்புகள்
- அஸ்வகோசரின் படைப்புகளில் மிகவும் சிறந்த புத்தசரிதம் எனும் நூல், சமசுகிருத மொழியில் எழுதப்பட்ட காவியக் கவிதைத் தொகுப்பாகும்.[7][8]
- இவரது மற்றொரு படைப்பான சௌந்தரானாந்தா எனும் காவியக் கவிதை நூல், புத்தரின் ஒன்று விட்ட சகோதரனான நந்தன் என்பவன் பௌத்த பிக்குவாக மாறி விடுதலை அடைந்த வரலாற்றை விளக்குகிறது.[9][10]
- மகா அலங்காரம் (Mahalankara) எனும் நூலின் ஆசிரியராக அஸ்வகோசர் கருதப்படுகிறார்.
இதனையும் காண்க
மேற்கோள்கள்
ஆதார நூற்பட்டியல்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads