கனிஷ்கர்

வட இந்திய அரசன் From Wikipedia, the free encyclopedia

கனிஷ்கர்
Remove ads

கனிஷ்கர் (Kanishkar) (சமக்கிருதம்: कनिष्क), குசானக் குல பேரரசனாக கி. பி 127 முதல் 163 முடிய ஆட்சி செய்த வட இந்திய பேரரசன். போர்த் தொழில், அரசியல், ஆன்மீகம் இவரது ஆட்சியில் செழித்தோங்கியது.

விரைவான உண்மைகள் கனிஷ்கர், ஆட்சி ...
Thumb
கனிஷ்கர் வென்ற நடு ஆசியாவின் உஸ்பெஸ்கிஸ்தான், தஜிகிஸ்தான் பகுதிகள் & இந்தியாவின் மதுரா, உஜ்ஜைன், குண்டினபுரம், கௌசாம்பி, பாடலிபுத்திரம், ஜான்சிர்-சம்பா பகுதிகள்
Remove ads

தெற்காசியா & மத்திய ஆசிய படையெடுப்புகள்

கனிஷ்கர் மத்திய ஆசியாவின் ஆப்கானிஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெஸ்கிஸ்தான், தற்கால பாகிஸ்தான் பகுதிகளை வென்று, இந்தியாவின் குஜராத் மற்றும் பஞ்சாப் முதல் கங்கை சமவெளியின் பாடலிபுத்திரம் வரை விரிவு படுத்தினான். கனிஷ்கர் ஆட்சியின் முக்கிய தலைநகராக புருஷபுரம் எனும் தற்கால பாகிஸ்தானில் உள்ள பெஷாவர் ஆகும். மதுரா நகரையும் இரண்டாவது தலைநகராகக் கொண்டவர்.[1] பௌத்த சமயத்தை ஆதரித்துப் பரப்பியவர். பட்டுப் பாதை மூலம் பௌத்த சமயத்தை காந்தாரம் வழியாக சீனா உள்ளிட்ட முதலிய கிழக்கு ஆசியா நாடுகள் வரை பரப்பியவர்.

Remove ads

மரபுரிமைப் பேறுகள்

கனிஷ்கரின் தூபி

Thumb
சிற்பங்களுடன் கூடிய கனிஷ்கரின் தூபி, கிபி இரண்டாம் நூற்றாண்டு, பெசாவர் அருங்காட்சியகம்

தற்கால பாக்கிஸ்தானின் வடமேற்கு எல்லைப்புற மாகாணத்தில் உள்ள பெஷாவர் நகரத்திற்கு அருகில் உள்ள சாஜி கி தேரி எனுமிடத்தில் பௌத்த தூபியை நிறுவினார். இதனை தற்போது கனிஷ்கரின் தூபி என்று அழைக்கப்படுகிறது.[2][2] 13 தளங்களுடன், 400 அடி உயரத்துடன் கட்டப்பட்ட இத்தூபி, தற்போது உருக்குலைந்து காணப்படுகிறது.

கனிஷ்கர் பேழை

Thumb
கிபி 127 காலத்திய கனிஷ்கரின் பேழையின் மூடிப் பகுதியில், கௌதம புத்தரின் இருபுரங்களில் இந்திரன் மற்றும் பிரம்மா மற்றும் அடிப்பகுதியின் நடுவே நின்ற நிலையில் கனிஷ்கர், பெசாவர் அருங்காட்சியகம்
Thumb
கனிஷ்கர் பேழையின் அடிப்புறத்தில் கௌதம புத்தரைச் சுற்றிலும் தேவதைகளும், போதிசத்துவரும்

குசானப் பேரரசர் கனிஷ்கர், தற்கால பாகிஸ்தான் நாட்டின் கைபர் பக்துன்வா மாகாணத்தில் உள்ள பெஷாவர் நகரத்திற்கு அருகில் உள்ள சாஜி கி தேரி எனுமிடத்தில் நிறுவிய கனிஷ்கரின் தூபி இருந்த இடத்தில், [2][2] 1908 - 1909களில் அகழ்வாராய்ச்சி செய்த போது பௌத்தச் சின்னங்கள் கொண்ட அழகிய செப்புப் பேழை கிடைத்தது. அதற்கு கனிஷ்கர் பேழை எனப்பெயரிடப்பட்டது. பௌத்த நினைவுச் சின்னங்கள் கொண்ட இப்பேழை பேரரசர் கனிஷ்கரின் ஆட்சிக் காலத்தில் கிபி 127ல் உருவாக்கப்பட்டது.

Remove ads

பௌத்த சமயத்தை சீனாவிற்கு பரப்பல்

Thumb
நிற்கும் புத்தரின் வெண்கல சிலை, காந்தாரம், காலம் 3-4ஆம் நூற்றாண்டு

கி. பி இரண்டாம் நூற்றாண்டில் மத்திய ஆசியப்பகுதியான காந்தாரத்திலிருந்து, உலக நலத்திற்கான பிக்குகள் என்ற பெயரில் பௌத்த பிக்குகளை சீனா மற்றும் கிழக்கு ஆசியப் பகுதிகளுக்கு அனுப்பி பௌத்த சமயத்தை பரப்பினார்.

படக்காட்சியகம்

இதனையும் காண்க

அடிக்குறிப்புகள்

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads