சர்வாஸ்திவாத பௌத்தம்
பெளத்தப் பள்ளி From Wikipedia, the free encyclopedia
Remove ads
சர்வாஸ்திவாத பௌத்தம் (Sarvāstivāda); சீனம்: 說一切有部; பின்யின்: Shuō Yīqièyǒu Bù), துவக்கக் கால பௌத்த தத்துவச் சிந்தனைகளில் ஒன்றாகும். தருமங்கள் இறந்தகாலம், நிகழ்காலம், வருங்காலம் எனும் முக்காலங்களிலும் நிலைத்திருக்கும் தன்மை கொண்டது எனும் சித்தாந்ததைக் கொண்டது. சர்வாஸ்திவாதப் பள்ளியை நிறுவியவர் கிமு இரண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த நாகசேனர் ஆவார். இதனை வளர்த்தவர் உபகுப்தர் ஆவார்.

பின்னர் சர்வாஸ்திவாதிவாத பௌத்த தத்துவத்தை 4-5ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த பௌத்த அறிஞரான அசங்கருடன் இணைந்து வசுபந்து, தாம் இயற்றிய அபிதர்ம கோசம் (Abhidharmakośa-bhāṣya) எனும் நூலில், தருமங்கள் முக்காலங்களிலும் நிலைத்திருக்கும் தன்மை கொண்டது என வலியுறுத்திகிறார். [1]இத்தர்மங்களைப் பின்பற்றுபவர்களை சர்வாஸ்திவாதிகள் என்பர்.
சர்வாஸ்திவாதிவாத பௌத்த தத்துவம், வட இந்தியா, வட மேற்கு இந்தியா மற்றும் நடு ஆசியாவில் வாழ்ந்த பிக்குகளிடையே புகழ் பெற்று விளங்கியது.
சர்வாஸ்திவாதி பௌத்தம், மூல சர்வாஸ்திவாதி பௌத்தத் தத்துவத்திலிருந்து பிறந்ததாக கருதப்படுகிறது. ஆனால் இக்கருத்து இதுவரை உறுதி செய்யப்படவில்லை.
பேரரசர் கனிஷ்கர் சர்வாஸ்திவாத பௌத்த தத்துவப்பள்ளியை ஆதரித்துப் பரப்ப உதவினார். [2]
Remove ads
பெயர்க் காரணம்
சர்வாஸ்திவாதம் என்ற சமசுகிருதச் சொல்லிற்கு அனைத்துப் பொருட்களின் இருப்பை உள்ளது உள்ளவாறு ஏற்றுக்கொள்பவர்கள் என்பர்.
சர்வாஸ்திவாதம் என்பதை சர்வம்+அஸ்தி+வாதம் எனப்பிரிப்பர். சர்வம் என்பதற்கு அனைத்தும் என்றும்; அஸ்தி என்பதற்கு இருப்பையும்; வாதம் என்பதற்கு கொள்கை என்பர். அனைத்துப் பொருட்களின் இருப்பை ஏற்கும் கொள்கை கொண்டோரை சர்வாஸ்திவாதிகள் என்பர். [2]}}
சர்வாஸ்திவாத பௌத்தர்களின் நூல்கள்
சர்வாஸ்திவாத அபிதர்மம் ஏழு சாத்திர நூல்களைக் கொண்டது. அவைகள்:
- ஞானப்பிரஸ்தானம் (மெய்ஞானத்தை நிலைநாட்டல்) (T. 1543-1544)
- பிரகரணபாடம் (விளக்குதல்) (T. 1541-1542)
- விஞ்ஞானகாயம் (அறிவின் விழிப்பு) (T. 1539)
- தர்மஸ்கந்தம் (தரும நெறிகளை ஒருங்கிணைத்தல்) (T. 1537)
- பிரக்ஞானபிரதிசாஸ்திரம் ("Treatise on Designations") (T. 1538)
- தாதுகாயம் ("Body of Elements") (T. 1540)
- சங்கிதிபர்யாய (சத்சங்கம்) (T. 1536)
Remove ads
இதனையும் காண்க
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads