அஸ்வந்த் அசோக்குமார்

இந்தியக் குழந்தை நடிகர் From Wikipedia, the free encyclopedia

அஸ்வந்த் அசோக்குமார்
Remove ads

அஸ்வந்த் அசோக்குமார் (Ashwanth Ashokkumar) ஓர் இந்தியக் குழந்தை நடிகராவார். இவர் தமிழ் மொழிப் படங்களில் பணிபுரிகிறார். 2016ஆம் ஆண்டில், ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஜூனியர் சூப்பர் ஸ்டார்ஸ் என்ற நிகழ்ச்சியில் பங்கேற்று பட்டத்தை வென்றார். சூப்பர் டீலக்ஸ் (2019) படத்தில் ராசுகுட்டி என்ற பாத்திரத்தில் நடித்து பெயர் பெற்றார்.

விரைவான உண்மைகள் அஸ்வந்த் அசோக்குமார், பணி ...
Remove ads

தொழில்

2016 ஆம் ஆண்டில், லிஷா என்பவருடன் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் குழந்தைகளின் நடிப்புத் திறன்களை சோதிக்கும் "ஜூனியர் சூப்பர் ஸ்டார்" என்ற நிகழ்ச்சியில் பங்கேற்று பட்டத்தையும் வென்றார். பின்னர், லிஷாவும் இவரும் ஜீ தமிழ் தொலைக்காட்சித் தொடரான மெல்லத் திறந்தது கதவு என்ற நாடகத்தில் நடித்தனர். அதே ஆண்டில் "சூப்பர் டீலக்ஸ்" படத்தில் தனது வாய்ப்பை பெறுவதற்கு முன்பு "ஐரா" (2019) என்ற படத்தில் நடித்தார்.[1] [2] [3] [4] சூப்பர் டீலக்ஸில், இவர், ஷில்பா என்ற பெண்ணாக மாறிய தனது தந்தை மாணிக்கத்தின் (விஜய் சேதுபதி ) மீது அக்கறை கொண்ட ராசுகுட்டி என்ற குழந்தையாக நடித்தார்.[5] [6] [7] ஜூனியர் சூப்பர் ஸ்டாரில் இவரது நடிப்பை தயாரிப்பாளர்கள் பார்த்த பிறகு இவருக்கு இந்த வேடத்தை வழங்கினார்.[1] 2017இல் வெளிவந்த மெர்சல் (2017) படத்தில் நடிக்க கிடைத்த ஒரு வாய்ப்பை இழந்தார்.[8] காட் ஃபாதர் (2020) படத்தில் முக்கிய வேடங்களில் நடிப்பதற்கு முன்பு தம்பி (2019) உள்ளிட்ட பல படங்களில் துணை வேடங்களில் நடித்தார்.[9] [10] [11] 2020 ஆம் ஆண்டில், ஒண்டிபுலி என்ற தலைப்பில் குழந்தைகள் வலைத் தொடரை இயக்கியுள்ளார். தொடர்களை எழுதுவதோடு கூடுதலாக அத்தியாயங்களின் போது இவர் பின்னணிக் குரலும் கொடுத்தார்.[12] தனுஷுடன் ஜகமே தந்திரம் என்ற படத்தில் நடித்திருந்தார். பாலாஜி சக்திவேலுடன் பெயரிடப்படாத படத்தில் நடிக்க உள்ளார்.[3] [2] [1]

Remove ads

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads