மெல்லத் திறந்தது கதவு (தொலைக்காட்சித் தொடர்)
From Wikipedia, the free encyclopedia
Remove ads
மெல்ல திறந்தது கதவு என்பது 2 நவம்பர் 2015 முதல் 27 அக்டோபர் 2017 ஆம் ஆண்டு வரை ஒளிபரப்பான காதல் தொலைக்காட்சி நாடகத் தொடர் ஆகும்.[2] [3][4] இந்த தொடரை 'பிரம்ம ஜி. தேவ்' என்பவர் இயக்க, வெங்கட் ரங்கநாதன், லிஷா, காயத்ரி யுவராஜ், அனு சுலஷ், அஸ்வந்த் அசோக்குமார், ஸ்ரீது கிருஷ்ணன், சந்தோஷ் போன்ற பலர் நடித்துள்ளார்கள்.
Remove ads
தொடரின் பருவங்கள்
பருவங்கள்
பருவம் 1
இந்த தொடரின் முதல் பருவம் 2 நவம்பர் 2015 முதல் 20 சனவரி 2017 ஆம் ஆண்டு வரை திங்கள் முதல் வெள்ளி வரை ஒளிபரப்பாகி, 315 அத்தியாயங்களுடன் நிறைவு பெற்றது. இந்த தொடரின் கதை கண் தெரியாத சந்தோஷ் மற்றும் செல்வி இருவரும் காதலித்து எப்படி திருமணம் செய்துகொள்கின்றனர் என்பதை விளக்குகின்றது.
நடிகர்கள்
- சந்தோஷ் → வெங்கட் ரங்கநாதன் - சந்தோஷ்
- ஸ்ரீது நாயர் → காயத்திரி யுவராஜ் செல்வி
- அனு - மாயா
- கே கே மேனன்
- சோபியா
- மோசஸ்
- வந்தனா
- செல்வி
- கயல்
- சியாம்
- ஹேமா ராஜ்குமார்
- பவித்ரா ஜனனி
- மது
- ஸ்ரீ லேகா
- சந்தியா
பருவம் 2
இந்த தொடரின் இரண்டாம் பருவம் 'மெல்லத் திறந்தது கதவு மின்மினி பூக்களின் கதை' என்ற பெயரில் 23 சனவரி முதல் 27 அக்டோபர் 2017 ஆம் ஆண்டு வரை திங்கள் முதல் வெள்ளி வரை ஒளிபரப்பாகி, 236 அத்தியாயங்களுடன் நிறைவு பெற்றது.[5]
நடிகர்கள்
- லிஷா - அஞ்சலி (செல்வி மற்றும் சந்தோஷின் மகள்)
- அஸ்வந்த் அசோக்குமார் - அஸ்வந்த் (மாயா மற்றும் சந்தோஷின் மகன்)
- காயத்ரி யுவராஜ் - மஞ்சு/செல்வி/அஜம்மா
- வெங்கட் ரங்கநாதன் - சந்தோஷ் (செல்வி மற்றும் மாயாவின் கணவன்)
- அனு சுலஷ் - மாயா (சந்தோஷின் இரண்டாவது மனைவி)
- நாதன் சியாம் - கெளதம்
- அகிலா - பிரியா கெளதம்
- ஜீவிதா - தீபா
- ரிந்தியா
- பூவிலங்கு மோகன்
- ஷில்பா
Remove ads
ஒளிபரப்பு நேரம் மாற்றம்
சர்வதேச ஒளிபரப்பு
- இந்த தொடர் ஜீ தமிழ் மற்றும் ஜீ தமிழ் எச்டி (உயர் வரையறு தொலைக்காட்சி) மூலம் உலகம் முழுதுவதும் (ஆசியா: இலங்கை, தென்கிழக்காசியா), ஐரோப்பா, அமெரிக்காக்கள், மத்திய கிழக்கு நாடுகள்) போன்ற நாடுகளில் பார்க்க முடியும்.
- இந்த தொடரின் பகுதிகள் ஜீ5 என்ற இணைய மூலமாகவும் பார்க்கலாம்.
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads