தம்பி (2019 திரைப்படம்)

ஜீது ஜோசப் இயக்கத்தில் 2019 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் From Wikipedia, the free encyclopedia

தம்பி (2019 திரைப்படம்)
Remove ads

தம்பி ( Thambi ) என்பது ஜீது ஜோசப் இயக்கத்தில் 2019இல் தமிழ் மொழியில்-வெளிவந்த அதிரடித் திரைப்படமாகும். இப்படத்தின் கதையை இரென்சில் டிசில்வா, சமீர் அரோரா, ஜீது ஜோசப், கே.மணிகண்டன் ஆகியோர் இணைந்து எழுதியுள்ளனர். இதை வியாகாம் 18 மோஷன் பிக்சர்ஸும் பேரலல் மைண்ட் புரொடக்சன்சும் இணைந்து தயாரித்தன. கார்த்திக், ஜோதிகா, சத்யராஜ் ஆகியோர் நடித்துள்ள இப்படம் ஒரு இளைஞனைப் பின்தொடர்கிறது. அவன் ஒரு உள்ளூர் அரசியல்வாதியின் நீண்டகாலமாக காணாமல் போன மகன் என்று நம்பப்படுகிறது. ஆனால் அவனது அடையாளத்தை அரசியல்வாதியின் மகள் கேள்விக்குள்ளாகுகிறார். இப்படத்தில் நிகிலா விமல், அன்சன் பால், பாலா, சௌகார் ஜானகி, சீதா ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர். கோவிந்த் வசந்தா இப்படத்திற்கு இசையமைத்திருந்தார் .

விரைவான உண்மைகள் தம்பி, இயக்கம் ...

இத்திரைப்படம் 20 திசம்பர் 2019 அன்று வெளியானது. நடிப்பு, அதிரடி காட்சிகள் கதை ஆகியவற்றுகாகப் பாராட்டப்பட்டது.[1] கலவையான வரவேற்பு இருந்தபோதிலும், படம் வணிக ரீதியான வெற்றியைப் பெற்றது.[2][3]

Remove ads

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads