அ. வின்சென்ட்

தமிழ்த் திரைப்பட ஒளிப்பதிவாளர் From Wikipedia, the free encyclopedia

Remove ads

அலோய்சியசு வின்சென்ட் (Aloysius Vincent, 14 சூன் 1928 – 25 பெப்ரவரி 2015) 1960ஆம் ஆண்டு முதல் மலையாளம், தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி திரைப்படங்களில் ஒளிப்பதிவாளராகவும், இயக்குநராகவும் பணியாற்றியவர். கேரள மாநிலத்தின் கோழிக்கோட்டில் பிறந்த, இவர் தமிழ்த் திரைப்பட இயக்குநர் சிறீதருடன் பல சிறப்பானப் படங்களில் பணி புரிந்துள்ளார். 1974ஆம் ஆண்டில் வெளியான பிரேம்நகர் என்ற தெலுங்கு படத்திற்காக பிலிம்பேர் விருது பெற்றுள்ளார். இவரது கடைசி மலையாளத் திரைப்படமாக 1985இல் வெளியான முப்பரிமாணத் திரைப்படமான பவுர்ணமி இராவில் அமைந்தது.[1] 2003ஆம் ஆண்டில் இந்திய ஒளிப்பதிவாளர் சங்கம் (ISC) இவருக்கு கே. கே. மகசன், வி.கே.மூர்த்தியுடன் கௌரவ அங்கத்துவம் வழங்கியது.[2]

விரைவான உண்மைகள் ஏ. வின்சென்ட்A. Vincent, பிறப்பு ...

உடல் நலக்குறைவால் 25 பிப்ரவரி 2015 அன்று தனது 86ஆவது அகவையில் சென்னையில் காலமானார்.[3]

Remove ads

ஒளிப்பதிவு செய்த சில திரைப்படங்கள்

  1. அமரதீபம் (1957)
  2. உத்தம புத்திரன் (1958)
  3. கல்யாணப் பரிசு (1959)
  4. விடிவெள்ளி (1960)
  5. தேன் நிலவு (1961)
  6. போலீஸ்காரன் மகள் (1962)
  7. நெஞ்சம் மறப்பதில்லை (1963)
  8. காதலிக்க நேரமில்லை (1964)
  9. எங்க வீட்டுப் பிள்ளை (1965)
  10. அடிமைப்பெண் (1969)
  11. பிரேம் நகர் (தெலுங்கு) (1971)
  12. வசந்த மாளிகை (1972)
  13. கௌரவம் (1973)
  14. அன்னமய்யா (தெலுங்கு) (1997)

இயக்கிய திரைப்படங்கள்

  1. துலாபாரம் (1969)
  2. நாம் பிறந்த மண் (1977)

மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads